Header Ads



ஜனாதிபதியின் நிகழ்வில், ஞானசாரர் பங்கேற்றமை தற்செயலானது - பொதுபல சேனா அறிவிப்பு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பானில் பங்கேற்ற நிகழ்வில் பொதுபல சேனாவின்தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் பங்கேற்றமை தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பொது பல சேனா அமைப்பு விளக்கமளித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பானில் பங்கேற்ற நிகழ்வில் பொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் பங்கேற்றமையானது தற்செயலாக நடந்த விடயமே என பொதுபலசேனா தெரிவித்துள்ளது.

ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, டோக்கியோவில் உள்ள இலங்கையர்களை சந்தித்தார். இதன்போது கலகொட அத்தே ஞானசாரரும் அமர்ந்திருந்தார்.

இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த நிகழ்வில் ஞானசார தேரர், பங்கேற்றுள்ளமை முன்கூட்டியே திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் அல்ல என்றும் தற்செயலாகவே பங்கேற்றார் என்றும் பொதுபலசேனா தெரிவித்துள்ளது

2 comments:

  1. Maithri's best friend Gnanasara so we are not surprised but our politicians won't get it.

    ReplyDelete
  2. ஜப்பாண் பயணத்துக்காகவே அவரது பயணத் தடை உத்தரவு நீதி மன்றத்தால் தற்காலிகமாக நீக்கப்படடது. அதுவும் தற்செயலானதா

    ReplyDelete

Powered by Blogger.