Header Ads



"பொலிஸில் முறையிட்டு, ஆவணங்களை பெற்றுக் கொள்ளுங்கள்"

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

கடந்த சில தினங்­க­ளாக முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக   கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்ள வன்­மு­றை­களில் சேதங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்கள், தக்­கி­யாக்கள்,  மத்­ர­ஸாக்­களின் சேத விப­ரங்­களைக் குறிப்­பிட்டு அந்­தந்தப் பிர­தே­சங்­க­ளி­லுள்ள  பொலிஸ் நிலை­யங்­களில்  முறைப்­பா­டு­களைப்  பதிவு செய்து கொள்­ளு­மாறு  அகில  இலங்கை ஜம் இய்­யத்துல் உல­மா­சபை பள்­ளி­வா­சல்கள் மற்றும் தக்­கி­யாக்­களின் நிர்­வா­கங்­களைக் கோரி­யுள்­ளது. 

அத்­தோடு தீயிட்டு எரிக்­கப்­பட்­டுள்ள  மற்றும் சேதங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்ள வீடுகள், வர்த்­தக நிலை­யங்கள்,  வாக­னங்கள்  தொடர்­பிலும் அந்­தந்த பிர­தே­சங்­க­ளி­லுள்ள பொலிஸ் நிலை­யங்­களில்  உட­ன­டி­யாக முறைப்­பா­டு­களைச் செய்­யு­மாறு  பொது­மக்­களை  வேண்­டி­யுள்­ளது. 

அகில இலங்கை ஜம் இய்­யத்துல்  உலமா சபையின் செய­லாளர்  அஷ்ஷெய்க்  எம்.எம்.ஏ.முபாரக் இவ் வேண்­டு­கோளை  விடுத்­துள்ளார். அவ்­வேண்­டு­கோளில் மேலும்  தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘வன்­மு­றை­களால்  பாதிக்­கப்­பட்­டுள்ள திகன, கென்­கல்ல மற்றும் அளுத்­வத்த பகு­தி­க­ளுக்கு விஜயம்  மேற்­கொண்­டுள்ள பொலிஸார்  தாக்­குதல் சம்­பவம், தீவைப்பு  சம்­பவம் பற்­றிய விப­ரங்­களைச்  சேக­ரித்து வரு­வ­தாகத் தெரி­விக்­கப்­பட்­டாலும், பாதிக்­கப்­பட்ட  முஸ்லிம் கட்­டா­ய­மாக தங்­க­ளது சொத்­துக்­களின்  சேத­வி­ப­ரங்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்­பா­டு­களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். 

பொலிஸில் முறைப்­பா­டு­களைப் பதிவு செய்து ஆவ­ணங்­களைப்  பெற்­றுக்­கொள்­வதன் மூலம்  எதிர்­கா­லத்தில்  அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­படும் நஷ்­ட­ஈ­டு­களை  எது­வித சிர­மங்­க­ளு­மின்றி  பெற்­றுக்­கொள்ள முடியும்.  அத்­தோடு  முஸ்­லிம்கள்  தமது காணி உறு­திகள், வாக­னங்­களின் பதிவு மற்றும் உரிமை ஆவ­ணங்கள், காப்­பு­றுதி  ஆவ­ணங்கள், வங்­கி­களின் ஆவணங்கள், வர்த்தக நிலையங்கள்  மற்றும் வீடுகளின்  ஆவணங்களை பாதுகாப்பான  இடங்களில்  பத்திரப்படுத்தி  வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை கோரியுள்ளது. 

2 comments:

  1. தயவுசெய்து முறைப்பாட்டின் போது பாதிப்பை ஏற்படுத்தியது இனந்தெரியாத நபர்கள் எனக் குறிப்பிட வேண்டாம்

    ReplyDelete
  2. Mentioned that it was attacked by Hon.PM Ranil and His Ex. My3's men.

    ReplyDelete

Powered by Blogger.