Header Ads



அவசரமாக தேவைப்படும், அரசியல் கூட்டு முயற்சி


தேர்தல் காலத்தில்  அரசியல் ஒற்றுமை பற்றியும் , கூட்டணிகள் பற்றியும் அதிகம் பேசியாகி விட்டது. இப்போது தேர்தலும் முடிந்து விட்டிருக்கிறது. ஆனால்,  மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மாத்திரம் தொடர்ந்கொண்டேயிருக்கின்றன.

அம்பாரை சம்பவங்கள் ஒரு பிந்திய உதாரணம் மட்டுமே. இத்தோடு இது முடிந்து விடப் போவதுமில்லை. இப்போது கண்டி-தெல்தெனிய நிலமைகள் கவலை தருகின்றன.  இவற்றை எதிர் கொள்வதற்கும் தீர்வுகளைக் காண்பதற்கும் அரசியல் அதிகாரங்களை  ஒருமுகப்படுத்திய கூட்டு உழைப்பு அவசரமாக  தேவைப்படுகிறது.

 தத்தமது தேர்தல் வெற்றிகளுக்காக கூட்டணி அமைத்ததைப் போன்று  இப்போது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி , அவர்களுக்கான  தீர்வுகளை வென்றெடுப்பதற்காக ஒன்றுபட வேண்டியிருக்கிறது. ஓரணியாக நின்று ஒரே குரலில் மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் பேசவேண்டிய தேவை அவசரமான, அவசியமான ஒன்றாக மாறியிருக்கிறது..

உள்ளளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்பாக ‘முஸ்லிம் கூட்டணி’ பற்றி அதிகம்  பேசப்பட்டது. அப்போது எமது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக சொல்லியிருந்தோம். மீண்டும் அதனை ஞாபகப்படுத்தி வலியுறுத்துகின்றோம்.

‘அரசியல் கூட்டணி’   என்பது தேர்தலில்  மாத்திரம் வெல்வதற்கான சந்தர்ப்பவாத கூட்டணிகள் அல்லாமல் மக்களுக்கான  தீர்வுகளை வென்றெடுப்பதற்காக தொடரச்சியாக உழைக்கின்ற  ‘சமூக அரசியல் கூட்டணியாக’ அமைய வேண்டும். அவ்வாறான கூட்டணிக்கு நாம் எப்போதும் ஒத்துழைக்கவும் பங்களிப்புச் செய்யவும் தயாராக இருக்கிறோம். எமது இந்த நிலைப்பாட்டை வெறும் வார்த்தைகளில் சொல்வதோடு மாத்திரம் நிறுத்திக் கொள்ளாமல் அந்தக்கூட்டணி எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும்; எவ்வாறு முன்கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற எழுத்து மூல முன்மொழிவுகளையும் நாம் சமர்ப்பித்திருக்கின்றோம்.

எனவே, இந்தக் கட்டதிலாவது அவ்வாறான ஒரு அரசியல் கூட்டு முயற்சிக்கு எல்லோரும் முன்வர வேண்டும் என மீண்டும் அழைக்கின்றோம்.

Engr. அப்துர் ரஹ்மான்
தவிசாளர், NFGG.

4 comments:

  1. NFGG, தலைவருக்கு,
    அஸ்ஸலாமு அலைக்கும்,
    இருக்கின்ற அரசியல் கட்சிகள் எமகக்கு
    போதாது என்று நீங்களும் ஒரு கட்சியை உருவாக்கி இந்தநாட்டிலே
    இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரண
    கர்த்தாவான முஸ்லிம் காங்ரஸுடன்
    கூட்டுச்சேர்ந்து கடந்த பொதுத்தேர்தலில் உங்களின் ஊர் மக்களால் நிராகரிக்கப்பட்ட நீங்கள்
    அரசியலில் இருந்து நீங்கி இருப்பதே
    உங்களுக்கும் எமது சமுகத்துக்கும் நன்மையாய் இருக்குமனெ நினைக்கின்றேன். நல்லாட்சிக்கான
    தேசிய முன்னணி என்ற பெயரை வைத்துக்கொண்டு இனரீதியான இனவாதக்கட்சியோடு நீங்கள் அவசர
    அவசரமாக கூட்டுச்சேர்ததன் தேவை
    என்ன? நீங்களும் எமது ஏனயகட்சிக்கார்கள் போல் எம்பி,அமைச்சு பதவிகளுக்காக ஆசை
    பட்டதன்விளைவா என்பதுபற்றி எம்மால் சிந்திக்காமல் இருக்கக முடியாது. மர்ஹூம் அஸ்ரப் தொடக்கம்
    ஏனைய அத்தனைபேரும் இந்த பதவிக்
    காய்ச்சலால் பீடி
    க்கப்பட்டே அவர்களும்
    குழம்பி எமது மக்களையும் குழப்பி இன்றய அவலநிலைக்கும் நாளைய
    அழிவுக்கும் வழிசமைத்துள்ளார்கள்
    என்பதுதான் உண்மை.இதில் நீங்கள்
    சிறு வித்தியாசமானவவர் போல் தென்படுவதாக உங்கள் ஆரம்ப கால
    பேச்சுக்கள்,அறிக்கைகள்,கருத்தரங்குகள் என்பன எம்மை சிறுது சிறுதாக உங்கள் பால் ஈர்த்துக்கொண்டிருக்கும்போது திடீரென குத்துக்கரணமடித்து நான்
    போட்தெல்லாம் வேஷம் நானும் அவர்களைப்போல் அதற்காகத்தான்
    வந்திருக்கின்றேன் என்று நிருபித்துள்ளீர்களே நீங்களும் இந்த
    சமூகத்துக்கு தேவைதானா?
    எனவே நாம் எதிர்நோகியுள்ள இந்தசூழலில் இருந்து மாற்றம் பெற
    வேண்டுமானால் இரண்டு வழிகள்
    அரசியலில் தென்படுகின்றன
    1: அத்தனை தலைமைகளும் ஒன்றாகி
    ஒருகுரலில் பயணிக்கவேண்டும்
    2: அதுமுடியாத பட்சத்தில் எமது எல்லா
    அரசியல் கட்சிகளையும் இல்லாமல்
    செய்துவிட்டு தாம் விரும்பும் தேசிய
    கட்சிகளோடு இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடரவேண்டும்.இதன்மூலம் இனவாதத்தை ஒழித்து தேசியவாத்தை
    இந்த நாட்டிலே எமது சமூக மூலம் மேலோங்க செய்ய முடியும் என்பது
    எமது நம்பிக்கையாகவேண்டும்.
    எனவே எமது சமூக புத்திஜீவிகள்,சமய,பள்ளிவாசல்கள்
    தலைமைகள்,கற்றவர்கள், பொது அமைப்புக்கள் போன்ற எல்லா மட்டத்தவர்களும் எமது அரசியல் தலைமைகளுக்கு அளுத்தம் கொடுக்க
    புறப்படவேண்டும் இதற்காக முன்நிற்பவர்களுக்கு ஏனைய வர்கள் ஒத்துழைப்பு வழங்குவது அவசரமும்
    அவசியமுமாகும்.
    NFGG தலைவரவர்களே நீங்கள் விட்ட
    தவறை உணரந்து சிந்தியுங்கள்.

    ReplyDelete
  2. Dear Br. Hassn, I am very sorry to say that you do not understand regarding Br. Abdur Rahaman way of thinking and sacrifice for the Muslim Community since 1990. Our Muslim communities needs sensible leaders like him, otherwise our future will be in a great danger.

    ReplyDelete
  3. Dear Br ,Rila Mohamed,I understood his thinking and activities
    Before year 2015 general election. I also
    Supported NFGG activities in our area past duration. But I can't accept his joint
    With the SLMC for the elections.




    Dear Br ,Rila Mohamed,I understood his thinking and activities
    Before year 2015 general election. I also
    Supported NFGG activities in our area past duration. But I can't accept his joint
    With the SLMC for the elections.








    ReplyDelete
  4. Dear Br ,Rila Mohamed,I understood his thinking and activities
    Before year 2015 general election. I also
    Supported NFGG activities in our area past duration. But I can't accept his joint
    With the SLMC for the elections.




    Dear Br ,Rila Mohamed,I understood his thinking and activities
    Before year 2015 general election. I also
    Supported NFGG activities in our area past duration. But I can't accept his joint
    With the SLMC for the elections.








    ReplyDelete

Powered by Blogger.