Header Ads



வரலாற்றில் இடம்பிடித்த கொழும்பு, வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை

பக்கவாதத்திற்குள்ளான நோயாளி ஒருவருக்கு வரலாற்றில் முதல் முறையாக மூளையை திறக்காமல் நடத்தப்பட்ட சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 15 நிமிடங்கள் மாத்திரமே இந்த சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.

மூளையில் இரத்தம் கட்டியானமையினால் பக்கவாதத்திற்குள்ளான நோயாளியை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வந்துள்ளார்.

இதன்போது புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 15 நிமிடங்களுக்குள் இந்த சத்திர சிகிச்சை மேற்கொண்டு நோயாளி காப்பாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 8 மணித்தியாலங்களுக்குள் இந்த சத்திர கிசிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதத்தின் ஊடாக பெருமூளை இரத்த நாளங்களில் இருந்த இரத்தக் கட்டியை கண்டுபிடித்து இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்ப வளர்ச்சியினால் மூளையை வெட்டாமல் நோயாளிக்கு விரைவாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்க வைத்தியசாலையில் இவ்வாறான சத்திர சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக நடத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த சத்திர சிகிச்சையை தனியார் பிரிவில் மேற்கொள்வதென்றால் அதற்காக 3 மில்லியன் ரூபாய் செலவிட நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது.

வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டிய சத்திர சிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேவை செய்பவர்களாவர்.

No comments

Powered by Blogger.