Header Ads



முஸ்லிம் அமைப்புகளின் கூட்டறிக்கை


நாட்டில் கடந்த சில தினங்களாக உருவாகியுள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று (2018.03.07) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும்; ஒன்று கூடி கலந்தாலோசனை நடாத்தியதுடன் இந்த நெருக்கடி நிலமைகளை கையாள அனைத்து முஸ்லிம் அமைப்புக்களும் ஒன்றிணைந்த கூட்டு இணைப்புக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டு இணைப்பு குழுவின் நெறிப்படுத்தலில் நெருக்கடி நிலைமைகளை கையாள சகல நடவடிக்கைகளும் எடுக்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் நாட்டின் உயர் மட்ட தலமைகளான ஜனாதிபதி, பிரதமர், முஸ்லிம் அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் முதலானவர்களுடன் உடனடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இவ்வனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஏக மனதாக எடுக்கப்பட்டன.

1. இந்நெருக்கடியான கட்டத்தில் முஸ்லிம் சமூகம் மனம் தளராமலும் பீதி அடையாமலும் நிலைமைகளை அவதானித்து எமது தற்பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்ட நிலையில் தூர நோக்குடன் நடந்து கொள்ள வேண்டும்.

2. எவ்வகையான நெருக்கடியான சூழ்நிலைகள் உருவாகிய போதிலும் முஸ்லிம்கள் அல்லாஹ்வுடனான தொடர்பை பலமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தவக்குல், துஆ, இஸ்திஃபார், நோன்பு, பொறுமை போன்ற விடயங்களை கடைபிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

3. இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் முஸ்லிம்களது உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டிருப்பதனால் அரசாங்கத்தை இது விடயமாக ஜனநாயக ரீதியிலும், நாம் அனைவரும் முடியுமான அனைத்து முறைகளிலும் வலியுறுத்த வேண்டும் எனவும் இது விடயமாக சட்டத்தை மதித்து மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

4. அவசர கால சட்டம் நடைமுறையில் இருப்பதால் அது தொடர்பான சட்ட வரயறைகளை பேணி நடக்க வேண்டும் என முஸ்லிம் சமூகம் அறிவுறுத்தப்படுகிறது.

5. நாட்டில் பதற்ற சூழ்நிலை நிலவுவதால் கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும் பகிர்ந்து விடாமல் முதலில் அவற்றை ஊர்ஜிதம் செய்து கொள்ளுமாறும் பகிர்ந்து கொள்வதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் வேண்டப்படுகின்றனர்.

6. எந்த வன்முறைகள் இடம் பெறுகின்ற சந்தர்ப்பத்திலும்; அந்தந்த பிராந்தியங்களின் தலைமைகளுக்கு கட்டுப்பட்டு ஒத்துழைத்து செயற்படுமாறும் அனைவரும் வேண்டப்படுகின்றனர்.

7. இந்நாட்டு மக்களில் மிகப்பெரும் பான்மையானோர் சமய நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் விரும்புபவர்கள் என்ற உண்மையை புரிந்துஇ கடந்த காலங்களில் போலவே தொடர்ந்தும் அவர்களுடன் நல்லிணக்கத்துடனும் சமாதானமாகவும் வாழ வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.

ஹஸ்புனல்லாஹு வனிஃமல் வகீல்
அல்லாஹ்வே நமக்கு போதுமானவன் அவனே எமக்கு சிறந்த பாதுகாவலன்.

01. ACJU- All Ceylon Jamiyyathul Ulama
02. NSC - National Shoora Council
03. MCSL – Muslim Council of Sri Lanka
04. Quadiriyathun Nabaviyyah Thareeqa
05. CDMF – Colombo District Masjid Federation
06. Jamate Islami
07. Jamathus Salama
08. UTJ – United thawheed Jamath
09. ARC- Advocacy and Reconciliation Council
10. ISRC – Islamic Relief Committee
11. YMMA – Young Men’s Muslim Association
12. AMYS – Association of Muslim Youth of Sri Lanka
13.Srilanka Muslim Media Fouram
14. DMMF
15. KDMF
16. NIDA
17. Thableeg Jamath

4 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்

    சகோதரர்களே நம் சமுதாயத்துக்கு எதிரான இந்த வன்முறைகள் இன்று நாளையுடன் முடிவடைந்து விடப்போவதில்லை. இன்னும் பல வருடங்கள் நாம் இவ்வாறான சம்பவங்களை சந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை எல்லோரும் உணர்ந்து நம்மை தயார் செய்ய வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் உண்டு.

    இதற்கான ஆரம்பம் நாம் நமக்கிடையே உள்ள அரசியல், பிரதேச, கொள்கை ரீதியான வேறுபாடுகளை அல்லாஹ்வுக்காக மறந்து விட்டு ஒற்றுமைப் படுவதே.
    அந்த வகையில் அமைப்புக்களுக்கிடையே ஆன இந்த ஒற்றுமையை வரவேற்கின்றேன். இந்த ஒற்றுமை என்றும் தொடரவும், விடுபட்டுள்ள ஏனைய அமைப்புக்களும் சேர்ந்து கொள்ள அல்லாஹ் உதவி செய்ய பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  2. இந்த அமைப்பின் ஊடாக நாம் செய்ய வேண்டியவை என்ன?

    1. வழக்கறிஞர்கள் சில்லறை இணைத்துக் கொள்ளுங்கள் .சட்ட நடவடிக்கைகளுக்கு அவர்கள் தேவை
    2. சமுதாய நல்லெண்ணம் கொண்ட அரசியல் வாதிகள் (அப்படி யாரும் இருந்தால் மட்டும்) இணைக்கவும். அரசியல் மேலிடங்களை சந்திக்க தேவைப்படும்
    3. பெரும்பான்மை சமுதாயத்துக்கு சுமூகமாக பழகும் சமூக சேவையாளர்கள் சிலரையும் இணைக்கவும். பௌத்த அமைப்புகளுடன் பேச தேவைப்படும்
    4.ஒவ்வொரு முஸ்லீம் ஊருக்கும் ஒரு கிளை அமைப்புக்களை ஏற்படுத்துங்கள்
    5.ஒரு ஊடகப்பிரிவை அமைத்து அதன் ஊடாக உண்மை நிலைமைகளை சமூகத்துக்கும்,நாட்டுக்கும், உலகத்துக்கும் தெரியப்படுத்தவும்.வேறு வதந்திகளை நம்ப வேண்டாம் என்று எல்லா முஸீலீம் ஊர்களுக்கும் அறிவியுங்கள்
    6. தற்காலிக பாதுகாப்பு சம்பந்தமான விடயங்கள்,பாதிக்கப்பட்டோருக்கான உடனடி தேவைகள், தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை கிளைகள் உள்ளன ஆனால் அமைப்புக்கள் ஊடாக செய்வது எப்படி என்று சிந்தித்து செயல்படுவது

    ReplyDelete
  3. 6.தற்காலிக பாதுகாப்பு சம்பந்தமான விடயங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உதவிகள்,தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை கிளைகள் ஊடாக எப்படி செய்வது என்று சிந்தித்து செயல்படுவது
    7. தற்பாதுகாப்பு, தீ அணைக்கும் முறைகளை தெளிவு படுத்துவது

    8. வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து நிலைமைகளை விளக்கி அவர்களின் உதவிகளை பெறுவது

    ReplyDelete
  4. We need changes with SLTJ and Tableeq Jamath activities in the Sinhala areas. pls. undestand you must change ASAP.

    ReplyDelete

Powered by Blogger.