Header Ads



நடந்தது சிங்கள - முஸ்லிம் மோதல் அல்ல - ஹக்கீம்

அம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களில் ஏற்பட்ட பதற்றமான நிலைமை சிங்கள - முஸ்லிம் மோதல் அல்ல என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சம்பவம் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் வெளியாகும் இந்து ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

பொலிஸார் பொறுப்பின்றி நடந்து கொண்டதன் காரணமாக வன்செயல்கள் முற்றியது என்பதுடன், புலனாய்வுப் பிரிவினரும் நடக்க போகும் சம்பவங்கள் குறித்து அறிந்திருக்கவில்லை.

திகனயில் கொல்லப்பட்ட இளைஞனின் இறுதிச் சடங்கு நடக்கும் தினத்தில் ஏதேனும் சம்பவங்கள் நிகழலாம் என நான் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்திய போதிலும் அவர்கள் அதனை ஏற்கவில்லை என கூறியுள்ளார்.

4 comments:

  1. Did you inform Prime Minister, who is also in charge of Law and order at that time, about a possible outbreak of violence?

    ReplyDelete
  2. ஹக்கீம் அவர்களே, தயவு செய்து அரசியலில் இருந்து ஒதிங்கிக் கொள்ளுங்கள்.. பலசேனாக்களை விடவும், முஸ்லிம்களுக்கு மிகவும் பாதகமானால் நீங்களும் உங்களது அரசியல் தலைமைத்துவம் தான் என்பதாகவே உங்களை நாங்கள் பார்க்கிறோம். இந்த நாட்டில் சுதந்திரத்துக்கு பின்னர் சிங்கள போலீசாரும், சிங்கள பாதுகாப்பு தரப்புமே உள்ளது என்பது 1956 காலிமுகத்திடல் சத்தியாகிரகம் முதல் தட் போதைய கண்டி கலவரம் வரை நூற்றுக்கணக்கான சம்பவங்கள் உள்ளன... இதை ஒரு இலங்கையர்களுக்கான பொலிஸாகவும், பாதுகாப்பு தரப்பாகவும் இருக்கவேண்டும் என்று ஒரு சிறு கணம் ஆவது முயட்சி செய்துள்ளீர்களா?

    என்ன புலனாய்வு பிரிவு நடக்கப்போகும் சம்பவத்தை அறிந்திருக்க வில்லையா..??? உமக்கு என்ன புத்தி பேதலித்து போய் உள்ளதா..?? ஹெலஉருமைய...தொடங்கிய காலத்தில் இருந்து சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இந்த பலசேனாக்கள் அலைவது உமது காலனுக்கு புரியவில்லையா?? அல்லது உங்களுக்கு புரியவில்லையா??

    நீங்கள் அரசியலில் இருக்கும் வரை முஸ்லிம்களுக்கு இன்னும் வரும்....... முஸ்லீம் மக்கள் சிந்திப்பார்களா?

    ReplyDelete
  3. அமைச்சர் ஹகீமுக்கு சொல்ல வேண்டிய ஆலோசனைகளை பொதுவாக எல்லோரும் பார்க்கும் வாசிக்கும் ஒரு இடத்தில் பதிவதனால் எம் சமூகத்தின் தலைவர்கள் இல்லாமலாக்கப்படுவதுடன், முஸ்லிம்கள் நட்டாற்றில் விடடப்படுவார்கள் என்பதை மறந்து விடாதீர்கள் தலைவர்களை அழிப்பதனால் என்ன நடக்கும் என்பது சகோதர இனங்களில் நடந்த சம்பவங்கள் நமக்குச்சொல்லும் பாடமாகவுள்ளது எனவே, எமது தலைமைகளை முடியுமான அளவு பக்குவமாக திருத்துவதற்கு முயற்சிப்போம் அவர்களுக்காகப் பிரார்த்திப்போம், தலைமைகள் சந்திக்கும் நெருக்கடிகளை கொமன்ஸ் போடுபவர்கள் சந்தித்தால் சில நேரம் தற்கொலை கூட செய்து கொள்ளலாம். எனவே, நமது பதிவுகளினால் ஏற்படும் தாக்கத்தின் கனதியைப் புரிந்து செயற்படுவது இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் செய்யும் சமூகக் கடமையாகும். உருவாக்கப்பட்டுள்ள தலைமைகளை அழிப்பதும் அவர்களைப் பற்றிய தப்பெண்ணங்களை உருவாக்குவதும் மிகவும் இலகுவானது ஆனால் ஒருவரைப் பற்றி நல்லெண்ணங்களை உருவாக்குவதும் அவரை சமூகத்தின் குரலாக ஒலிக்கச்செய்வதும் இலகுவான விடயமல்ல என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

    சமூகத் தலைவர்களின் அழிவு சமூகத்தின் அழிவாகும் அதனால் சுதந்திரமாக கருத்துச்சொல்லும் ஊடகம் என்று நினைத்துக்கொண்டு சமூகத்தின் தலைவிதியை மாற்றி விடவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில்தான் நமது தலைமைகளை நாம் பலப்படுத்த வேண்டிய தேவை உணரப்படவேண்டும் ஆனால் அதற்கு எதிரான கருத்துக்கள் நமது அறிவீனத்தையும் மாற்று மத சகோதரர்களுக்கு பலமான சந்தர்ப்பங்களையும் உருவாக்கி விடுகின்றது.

    இன்றிருக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள் இக்கலவரத்தின்போது தங்களால் முடியுமானதைச் செய்திருக்கிறார்கள், அவர்கள் ஒன்றும் பாதுகாப்பு அமைச்சர்களோ அல்லது ஜனாதிபதி, பிரதமராகவோ இல்லை அவர்களின் சக்திக்கு உட்பட்டு அவர்களது பங்கை செய்திருக்கிறார்கள் என்பது பலரது கருத்தாகவும் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களாகவும் உள்ளது. எனவே, இந்நேரத்தில் குட்டையைக் குழப்பி சில மீன்களைப் பிடிக்க முயல்வது அனைத்து மீன்களையும் சாகடித்து விடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.