Header Ads



முஸ்லிம்களை வஞ்சித்த மனோகனேசன்..!

-Jazeem Abdul Hameed-

இலங்கை தாய் திரு நாட்டில் 
இன நல்லுறவு , ஒருமைப்பாடு நிலவ 
"மாற்றீட்டான சிந்தனை"கொண்டு
"ஒற்றுமை "மலர 
ஒருமித்து போராடி
ஆட்சி மாற்றத்தை 
கொண்டு வந்த 
"கர்ச்சிக்கும் சிங்கம் " என்று 
என் மனதையும் வென்ற 
மத நல்லிணக்க அமைச்சர் ,
மனோ கணேசன் அண்ணா அவர்களின் 
மனதிலும் "கரல்கள்" காவு கொண்டதை 
வெளிப்படுத்திய "ட்வீட் " 
உங்களுக்கு "ஸ்வீட் "டாய் இருக்கலாம் 
ஆனால் 
உங்களை நேசித்த உள்ளங்களை 
"வஞ்சித்தே"விட்டீர்கள்.
ஆதலால் 
கலங்கபட்டுள்ள 
உங்கள் 
"சிந்தனையில், எண்ணக்கருவில் "
தெளிவுப்பெற்று 
வெந்த புண்ணி வேல் பாய்ச்சியதாய் 
பரக்கச் செய்த செய்த 
உங்கள் "ட்வீட்" ஐ 
"விற்றோ"பண்ணி கொள்ளுங்கள் அண்ணா. 

பேரின சமூகத்தில் 
"இனவாத" கருமேகம் சூழ்ந்து 
ஒரு சிறு கும்பத்தினர் 
கடந்த சில நாட்களாக 
ஏட்படுத்திய 
அட்டூழியங்களை
"அநீதியின் உச்சக்கட்டம்" 
என ஏற்று 
அவர்களையே வெறுத்து 
எங்களின் 
வெள்ளிக்கிழமை 
விசேட
வணக்க ஆராதனையை 
இனவாதிகள் சூழ்ந்து 
இன்னும் இழப்புக்களை ஏட்படுத்தி 
எமது 
இலங்கை தாய் நாட்டை மீண்டும் 
காவு கொண்டு விடக் கூடாது 
என்ற நல்லெண்ணம் கொண்டு 
"நியாயத்தின் பக்கம்" நின்று 
மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தி 
எங்களை சூழ்ந்து பாது காப்பளிக்க 
முன்வந்த பெரும்பான்மையின 
சகோதர்களும் மதகுரு மார்களும் 
"அந்த பேரினவாத கும்பலுக்கே" 
சாவு மணி அடித்து 
இலங்கை தாய்த் திரு நாட்டில் 
இன்னும் "மனித நேயம் " வாழ்ந்து கொண்டிருப்பதை 
நிரூபித்த இன்றைய நந்நாளிள் 
மத நல்லிணக்க அமைச்சராக இருக்கும் 
மனோ கணேசன் அண்ணா 
அவ்வாறான நிகழ்வை 
உடனே பாராட்டி அறிக்கை விடாமல் 
பதிவிட்ட 
இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றிய 
உங்கள் "ட்வீட் "
எனக்கு மட்டுமல்ல 
உங்களை நேசித்த 
பல்லாயிரம் பேருக்கு 
ஒரு "ஸ்வீட்" ஆக 
உருவெடுக்கவில்லை அண்ணா .
மாறாக 
"டொனால்ட் டிரம்ப் "பின் 
"அதிரடியான டிவீட்கள்" களின் 
விளைவுகளையே 
என்னை நினைவூட்டியது 
.
ஆதலால் 
உங்கள் மனதில்
திடீரென ஆட்கொண்டுள்ள 
இஸ்லாமிய அடிப்படை வாத 
"கரல் சூழ்ந்த எண்ணத்தை "
மனம் திறந்து பேசி தெளிவுறுங்கள் 
என் மதிப்புக்குரிய 
மனோ கணேசன் அண்ணா 

நன்றி 

அன்புடன்,
@jazeem — feeling upset.

7 comments:

  1. எது அடிப்படை வாதம். எங்கள் சமயத்தை நாங்கள் பின் பற்றுவது அடிப்படை வாதமா? இதனை மனோ விளக்க வேண்டும்.

    ReplyDelete
  2. மதிப்புக்குரிய அமைச்சரே! வெந்த புண்ணில் வேல் பாய்ந்து போல் உணர்கிறேன். நீங்கள் தற்போது வகிக்கும் அமைச்சுப் பதவிக்குரிய தகுதியை இழந்துவிட்டீர்கள் என்றே கருதுகிறேன். அடிப்படைவாதம் என்றால் என்ன? அதற்தகுரிய அளவுகோள் என்ன? தமிழர்கள் எந்த அடிப்படைவாதத்தை கைவிட்டுள்ளார்கள்? அதற்கு ஒரு விளக்கம் தாருங்கள்.

    ReplyDelete
  3. sattila ullazutan ahappaikku warum

    ReplyDelete
  4. Jazeem நீங்கள் சொல்லுவது முற்றிலுமுண்மை,
    கௌரவ அமைச்சர் மனோ அவர்களை நாங்களும் பெரிதாய் மதித்தோம். நேர்மையான, தஹ்ரியமான அரசியல் வாதியென்றால் இவரைத்தான் உதாரணம் காட்டிவந்தோம். ஆனால் இப்பதான் புரிகிறது இவருடைய உண்மைமுகம். என்னய்யய்யா திடிர் திருப்பம்? எங்கள் சமூகத்தில் இனவாதிகள்,
    மதவாதிகள் இருந்தால் உடனே அவர்களுக்கு சட்டநடவடிக்கைகளை எடுங்கள். நீங்கள்தான் இன நல்லிணக்க அமைச்சர்.அதைவிட்டிட்டு மக்கள் அல்லோல கல்லோல பட்டிட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இப்படிச் சொல்லி இனவாதிகளுக்கு தீனிபோடதீர்கள்.

    ReplyDelete
  5. Many a slip between the cup and the lip.
    Leave Mano alone after all he is still our brother sometimes even better our guys.

    ReplyDelete
  6. ஐயா மனோ அவர்களே தங்களுக்கு மனநோய் ஒன்றும் இல்லையென எங்களுக்கு தெரியும்.ஒன்றை சொல்லி வைக்க விரும்புகிறேன்.அரபி கலாச்சாரம் வேறு இஸ்லாமிய கலாச்சாரம் வேறு.நீங்கள் பின்பற்றுவது தமிழ் கலாச்சானமா இந்து கலாச்சாரமா ?அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் இவர் பேசியதற்கு இனுமொறுஅர்த்தம்யுண்டு

    ReplyDelete
  7. People are not worried when their culture and living style change on a daily basis, but if a Muslim change his dress, food, and appearance then they are called fundamentlists. Is this not hypocracy?

    ReplyDelete

Powered by Blogger.