March 18, 2018

"சிங்கள இனவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக கிளர்ந்தெழ, அராபிய கலாச்சாரம் மட்டும் காரணமல்ல"

சிங்கள இனவாதிகள் எங்களுக்கு எதிராக கிளர்ந்து எழுவதற்கு எம்மில் புகுந்துள்ள அராபிய கலாச்சாரம் மட்டுமே காரணமல்ல.

மாறாக காலா காலமாக இவர்கள் கொண்டுள்ள முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்ச்சியும், வர்த்தக ரீதியிலான போட்டி பொறாமைகளும் இதன் பின்னணியில் இருக்கிறன.

இந்த நாட்டில் சிறுபான்மை சமூகங்கள் தொடராக மாறி மாறி தாக்குதல்களுக்கு ஆளாகி இருக்கின்றன. கடந்த காலங்களில் இடம்பெற்ற இனவாத வன்முறை களுக்கு மாறி வரும் கலாச்சாரம் தான் காரணமானதா?

இந்த நாட்டில் கடந்த நான்கு தசாப்தங்களில் எல்லா சமூகங்களினதும் ஆடை கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஏனைய சமூகத்தினரின் ஆடை கலாச்சாரம் அரை நிர்வாணமாக மாறி வரும் நிலையில் இஸ்லாமிய ஆடை கலாச்சாரம் அதற்கு நேர் எதிராக மாறியிருக்கிறது.

பௌத்த ஒழுக்க மரபுகளை நேசிக்கும் ஒருவர் நிச்சயமாக ஒழுக்கம் சார்ந்த இஸ்லாமிய ஆடை கலாச்சாரத்தை ஆதரிக்க வேண்டும்

ஆனால் ஆடை தொடர்பான சர்ச்சையை சிங்கள பேரினவாதம் இனவாத கண்ணோட்டத்தில் ஒரு போலி சாட்டாகவே சொல்லி வருகிறது என்ற உண்மையை நாம் மறந்து விடக் கூடாது.

சிங்கள இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு எம்மில் புகுந்துள்ள அராபிய கலாச்சாரம் மட்டும் தான் காரணம் என்றால் 1915ம் ஆண்டு இடம் பெற்ற கலவரத்திற்கு காரணம் என்ன?

இந்த நாட்டில் ஒரே கலாச்சாரம் தான் இருக்க வேண்டும் என்று கோஷம் போடுகின்ற இவர்களின் ஆடை கலாச்சாரம் அரை நிர்வாணமாக மாறி வருகிறது.

இந்த அரை நிர்வாண ஆடை கலாச்சாரம் பௌத்த ஒழுக்க மரபுகளுக்கு எதிரானதாக இருந்தும் அதற்கெதிராக யாரும் குரல் கொடுப்பதில்லை.

இதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக பல வன்முறை கள் அரங்கேறி உள்ளன.

அந்த தாக்குதல் களுக்கு இவர்கள் என்ன வாதத்தை முன் வைக்க போகின்றார்கள்? இந்த நாட்டில் சகோதர தமிழ் சிறுபான்மை இனமும் அவ்வப்போது மிகப்பெரிய இனவாத வன்முறைகளுக்கு முகம் கொடுத்திருக்கிறது.

கலாசார மாற்றம் தான் காரணமென்றால் தமிழர்கள் புதிதாக எந்த கலாச்சாரத்தை பின்பற்றியதற்காக தாக்கப்பட்டார்கள்?

Azeez Nizardeen

3 கருத்துரைகள்:

அனைத்து இனப் பிரச்சினைகளுக்கும் முக்கிய  அடிப்படைக் காரணம் ஒருவர் மொழியை மற்றவர் அறிந்துகொள்ளாததாகும். 

மும்மொழிகளும் 'தேசிய மொழிகள்' என்ற பெயரில் ஒரே பாடமாக ஆரம்ப பாடசாலை முதலே கற்பிக்க வேண்டும்.  அதில் தேர்ச்சியானோருக்கே அரச பணிகள் அளிக்க வேண்டும், அரசியல் பணிகள் உட்பட.

ஒழுக்கவியல் என்று மற்றோர் பாடம் சகல நற்பண்புகளின் பூர்த்தியானதோர் பாடமாகப் போதிக்கப்பட வேண்டும். 

சமய தனித்துவங்கள் பேணப்பட்ட நிலையில், அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்கள் கூறியது போன்று  அனைத்து மொழி பேசுவோரும் ஒன்றாய்க் கற்கக்கூடிய ஓர் பொறிமுறை கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

மனிதர்களுக்கிடையில் இரு இனங்கள் தான் இருக்க முடியும்.  அவைதான் ஆண் மற்றும் பெண் இனங்கள்.  இவ்விரு இனங்களுக்காக மாத்திரமே பாடசாலைகள் வெவ்வேறாக்கப்பட வேண்டும்.

தம்மை எதிர்நோக்கும் பெண்களிடத்தில் தம் முக்காடுகளை சற்று விலக்கி, இன்முகம் காட்டி புன்முறுவல் பூத்து வாழ்த்துக் கூறுவதை முகம் மூடும் முஸ்லிம் பெண்கள் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

தமக்குள் மாத்திரம்  பேணி மூடிவைப்பதற்கல்ல இஸ்லாம். 

'தம்மைப் பற்றி அறிந்த ஒன்றை அறியாதோருக்கும் எத்தி வையுங்கள்'
என்றாரே இறைவனின் இறுதித் தூதரான  நம் ஏந்தல், அதனை நாம் எப்படி நடைமுறைப் படுத்தப் போகிறோம்?

எவர்கள் இறைத் தூதர்களை நேசிக்கிறார்களோ அவர்கள், அவர்களை போன்றே நடப்பர், ஆடை அணிவர்.  அது அராபிய கலாச்சாரம் அல்ல; அதுவே இஸ்லாமியக் கலாச்சாரம்.

அவ்வாறு இறைத்தூதரை நேசிப்போர் இந்நாட்டில் எல்லா ஊர்களிலும் பரவலாக உள்ளனர்.  அவர்கள் அவரைப் போன்றே சகல விடயங்களிலும் முன்மாதிரியாக நடந்து கொள்வர்.  

அதனாலேயே, பலிக்குப் பலி எடுப்பது  தமக்கு உரிமையானது என்று வன்முறைகளின்போது  அறிந்திருந்தும்கூட,  அதை நிறைவேற்றும்போது தம் உயிர் பலியானாலும் தமக்கு நிரந்தர சுவனம் கிடைக்கும் என்பதை அறிந்திருந்தும், தம் தலைவரின் போதனைகளுக்கு மதிப்பளித்து மன்னிப்பைத் தம் தெரிவாகக் கொண்டனர்.

உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன், எங்கள் கலாச்சாரம் தான் பிரச்சனை என்றால் ஏன் பள்ளிகளையும் வீடுகளையும் தாக்குகிறார்கள்?

வேறுபாடுகள் மனிதர்களிடம் காணப்படுவது தவிர்க்க முடியாதது . ஆனால் வேறுபாடுகள் முரண்பாடுகளுக்கானதல்ல. வேறுபாடுகள் முரண்பாட்டை உருவாக்கும் (வாய்த் தர்க்கம்,சண்டை) இயல்பு கொண்டவைதான். சராசரி ஆத்மாக்கள் வேறுபாட்டில் முரண்பாட்டையே காணும் அல்லது உருவாக்கும். பரந்த உள்ளமுடைய மஹாத்மாக்களால்தான் வேறுபாடுகளை முரண்பாடாக காணமல் கடந்து செல்ல முடியும். மார்கத்தை,வாழ்க்கையை, அடுத்த இனத்தை பார்க்கும் பார்வைகள் ,அணுகும் அணுகுமுறைகள் ஒருவருக்கொருவர் வேறுபடலாம், ஆனால் அவ்வேறுபாடுகள் இயல்பானவை எனவும் அவை முரண்பாடுகளுக்கானவை அல்ல எனவும் பார்க்கும் ஓர் பரந்த பார்வை வராதவரை சமூகத்தினுள்ளும் நாட்டினுள்ளும் முரண்பாட்டு தீப்பொறிகள் அவ்வப்போது உள்ளும் புறமும் காயங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.(ஏ.எம்.ஆரிப், நிந்தவூர்)

Post a Comment