Header Ads



ஒலுவில் விடுதியில், ரணிலின் கூட்டத்தில் இப்படியும் நடந்தது


ஒலுவில் துறைமுக விடுதி மண்டபத்தில் நேற்று (04) நடைபெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட குழுவினரின் பங்கேற்றிருந்த கூட்டத்துக்குச் சென்று, செய்தி சேகரிக்கரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு மறுக்கப்பட்டது.   இதனால் மண்டப நுழைவாயி​லிலேயே, ஊடகவியலாளர்கள் காத்துக்கிடந்தனர். 

அத்துடன், அழைக்கப்பட்டிருந்த மீனவர் சங்க நிருவாக உறுப்பினர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  

அவர்கள் மட்டுமன்றி, கிழக்கு மாகாண சபையின், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும் கூட்டத்துக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.  

மேற்படி கூட்டம், காலை 9.30 மணியிலிருந்து 11 மணிவரை, நடைபெற்றது.  

அந்த கூட்டம் தொடர்பிலான செய்தியை சேகரிப்பதற்குச் சென்றிருந்த ஊடகவியலாளர்களை மண்டபத்துக்குள் செல்லவிடாது, பொலிஸாரும் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளும் தடை விதித்தனர்.  

ஊடகவியலாளர்கள் எவரையும், கூட்டத்துக்குள் அனுமதிக்கக் கூடாதென, உயரதிகாரி ஒருவர், விடுத்த கண்டிப்பான கட்டளையை அடுத்தே, அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது.   

-ரீ.கே.றஹ்மத்துல்லா

No comments

Powered by Blogger.