Header Ads



குமாரசிங்க குடும்பமும், நீதிகேட்டு போராடியவர்களின் வன்முறையும்..!


இன்று ஒட்டுமொத்த இலங்கையும் முகம்கொடுத்திருக்கும் பாரிய பிரச்சனைக்கு காரணமாக இருந்தது குமாரசிங்க என்ற இளைஞனின் மரணம்.

கண்டியில் ஒரு சிங்கள இளைஞனை முஸ்லிம் இளைஞர்கள் நால்வர் தாக்கியதில் அந்த இளைஞன் 10 நாட்களுக்குப்பின் உயிரிழந்திருந்தார்.

அதையடுத்து குறித்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த 4 பேரும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கண்டி - திகன, தெல்தெனிய பிரதேசத்தில் ஆரம்பித்த பிரச்சினை இன்று நாடளாவிய ரீதியில் அவசரகால சட்டம் அமுல்படுத்தும் நிலைக்கு சென்று விட்டது.

குறித்த இளைஞனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்கள், அவரின் குடும்பத்தை நினைத்து பார்த்திருப்பார்களா? அவர்களது குடும்பத்தின் நிலை என்ன? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த குமாரசிங்க என்ற இளைஞனின் குடும்பத்தாரின் கோரிக்கை, அவர்களது கண்ணீர், கவலை சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

இவருக்கு தாய், தந்தை, உடல்நலம் குறைவான மகன், மனைவி மற்றும் சகோதரி உள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் மனைவி கருத்து தெரிவிக்கையில்,

“நான் வெளியில் எங்கும் வேலைக்கு செல்லவில்லை. எனக்கு சுகமில்லாத மகன் ஒருவர் உள்ளார். அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

கணவனை இழந்த நாளில் இருந்து தனது குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பை இவர் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை குறுpத்த சம்பவத்தை பயன்படுத்தி, பௌத்தசிங்கள காடையர்கள் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் முஸ்லிம்களுக்கு பல ஆயிரம் கோடி டூபாய் நஷ்டமும், பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளதுடன் நல்லாட்சி அரசர்ஙகத்திற்கு மிகப்பெரும் தலைகுணிவையும் உருவாக்கி, இலங்கைக்கு சர்வதேசத்தில் பெரும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குமாரசிங்கவின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வன்முறையாளர்களுக்கு இது புரியுமா..?

1 comment:

  1. Nam samoogattilirunthu yaaravathu uthavinaaal?
    All people pls concern or make a fund and give to them...

    ReplyDelete

Powered by Blogger.