Header Ads



ஊடரங்கு வேளையிலும், பற்றியெரிந்த சொத்துக்கள் - காடையர்கள் அராஜகம்


முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அடுத்து. கண்டி மாவட்டத்தில் நேற்றிரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போதிலும், ஆங்காங்கே தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெனிக்கின்ன முஸ்லிம் பிரதேசத்தில் நேற்றிரவு தாக்குதல் நடத்த முயன்ற நூற்றுக்கணக்கானோரைக் கொண்ட குழுவின் மீது சிறிலங்கா காவல்துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தி தடுத்துள்ளனர்.

அதேவேளை, வத்தேகம பகுதியிலும் முஸ்லிம்களின் சொத்துக்கள் மீது நள்ளிரவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சில வாணிப நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

மடவளைப் பிரதேசத்திலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, அங்கும் இராணுவத்தினரும், காவல்துறையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, அவசரகாலச்சட்டத்தின் மூலம் படையினருக்கான அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. சுவர்க்கத்தை நோக்கிய பயணம்

    ஒரு முஸ்லீமுடைய பயணம் முயற்சி - இவை என்னிலையிலும் சுவர்க்கத்தை நோக்கியதாக இருத்தல் வேன்டும். கேழைகளுக்கு இஸ்லாத்தில் இடமில்லை.

    தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் அவர்களுடைய சொத்துகளையும் மானத்தையும் மரியாதையையும் பாதுகாப்பது ஒரு முஸ்லீமின் கடமையாகும். அநியாயத்திற்கு எதிராக தன்னுடைய சக்திக்கு உட்பட்டுப் போராடுவது ஓர் முஸ்லீம்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. ஓர் முஸ்லீம் அநியாயத்தைக் கன்டு ஓடி ஒழியமாட்டான். இந்தப் போராட்டத்தில் அவன் அல்லாஹ்வைத் திருப்திப் படுத்துவதற்காக மரணித்தால் அவன் அடையுமிடம் சுவர்க்கமே.

    எனவே நமது பயணத்தின் இறுதி இலக்கு சுவர்க்கமாக இருக்குமானால் நாம் ஏன் அநியாயத்தைக் கன்டு விலகவேன்டும் ? ஓடி ஒதுங்க வேன்டும் ?

    இந்த ஓடி ஒளிதல் பொறுமை காத்தலில் அடங்காது. இது கோழைத்தனம். கோழைகளுக்கு இஸ்லாத்தில் இடமில்லை.

    எனவே அநியாயம் நமக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டால் - அதனை நியாயமான அடிப்படையில் துணிவுடன் எதிர்கொள்வோம் - அல்லாஹ்வுக்காக. இலலையென்றால் நாம் கோழைகளாக செத்து மடிய வேன்டி வரும் நாளை.

    நமது சரித்திரம் கோழைகளால் எழுதப்பட்டது அல்ல..........

    ReplyDelete

Powered by Blogger.