Header Ads



றிசாத் மீது, சுமங்கல தேரர் குற்றச்சாட்டுமீது

குருணாகல் - ரிதிகம பகுதியில் அமைச்சர் றிசாட் பதியுதீனே இனப்பிரிவினையை ஏற்படுத்தியதாக, மல்வத்து மஹாநாயக்கர் திப்பட்டுவாவவே சிறி சுமங்கல தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் ஃபைசர் முஸ்தபா, நேற்று அவரை சந்தித்திருந்தார். இதன்போது மஹாநாயக்கர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ரிதிகமவில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் ஒருமித்து வாழ்ந்த காலம் தமக்கு நினைவில் உள்ளது.

பின்னர் றிசாட் பதியுதீன் அமைச்சராக வந்த போது, அவரால் முஸ்லிம்களுக்கு என்று பிரத்தியேகமாக பாடசாலை ஒன்று உருவாக்கப்பட்டது.

இதன் ஊடாகவே சிங்கள மற்றும் தமிழ் மக்கள் ரிதீகம முஸ்லிம்களிடம் இருந்து தூரம் செல்ல நேர்ந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ரிதிகமவில் உள்ள முஸ்லிம்களுக்கு தமிழ் மொழி தெரியாது என்று தெரிவித்த மஹாநாயக்கர், அவர்கள் சிங்கள மொழியிலேயே பாடசாலை கல்வியை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இரண்டு தரப்பிலும் அடிப்படைவாதிகள் இருப்பதாகவும், அரசியல்வாதிகள் தங்களது சுயநலன் கருதி கண்டி வன்முறையை தூண்டி விட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு தரப்புக்களும் ஒரே மாதிரியே, இரண்டு தரப்பிலும் கடும்போக்காளர்கள் இருக்கின்றார்கள்.இவை அனைத்தையும் அரசியல்வாதிகளே மேற்கொண்டுள்ளனர்.

அவரவரின் அரசியல் லாபத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

எனக்கு நினைவு உண்டு குருணாகல் ரிதிகம பிரதேசத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்கள் ஒரே பாடசாலையில் இருந்தார்கள்.அதன் பின்னர் அமைச்சரான ரிசாட் பதியூதீன் தனியாக முஸ்லிம்களுக்கு பாடசாலை அமைத்தார், அதனால் நாம் விலக நேரிட்டது.

ரிதிகம பகுதியில் வாழும் மக்களுக்கு தமிழ் எழுத முடியாது, சிங்களத்திலேயே அவர்கள் பட்டியல் எழுதுவார்கள்.தொகுதி அமைப்பாளர்கள் அனைத்து கட்சிகளிலும் இருக்கின்றார்கள். எனினும் அவர்களினால் எந்தவிதமான பயனும் கிடையாது.

மாவனெல்ல பகுதியில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் பௌத்த பிக்குவாக மாறியிருந்தார்.எனினும், பின்னர் அவர் துறவறத்தை துறந்து விட்டார். என்ன காரணம் என விசாரித்தால் அவரது தந்தைக்கு பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களே என தெரியவந்தது.

இவ்வாறான விடயங்கள் பிழையானது என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.