Header Ads



ரணிலுக்கு எதிரான பிரேணையை தடுக்கவே, கண்டியில் மோதல் ஏற்படுத்தப்பட்டது

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுவதை தவிர்க்கும் பொருட்டு, கண்டி – தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களை பயன்படுத்திக் கொண்டுள்ளதாக மகிந்த அணி குற்றம் சுமத்தியுள்ளது.

மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மாத்தறை – கம்புறுபிட்டி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கண்டி சம்பவம் இந்த அரசாங்கத்தின் அசமந்த போக்கால் ஏற்பட்டது.

அதனை மேலும் கொண்டுச் செல்ல வேண்டிய தேவையும் அரசாங்கத்திற்கு இருந்தது.

அரசாங்கத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிகாட்ட ஆரம்பித்த நிலையில், அதனை வேறு திசைக்கு திருப்பவே கண்டி சம்பவத்தை அரங்கேற்றி அதனை தொடர்ந்து கொண்டுச் செல்ல அரசாங்கம் முற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. Mahinda group true or wrong but that true news,These all incidents behind Ponneyen Ranil and his racist groups.

    ReplyDelete
  2. இருக்கலாம்

    ReplyDelete
  3. By sammbika allow by ranil may be

    ReplyDelete
  4. By sammbika allow by ranil may be

    ReplyDelete

Powered by Blogger.