Header Ads



கண்டி கலவரங்களுக்குப் பின்னால், மகிந்த உள்ளாரா..? – புலனாய்வு அறிக்கை

கண்டி மாவட்டத்தில் தெல்தெனிய பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வெடிப்பதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான காவல்துறை குழுவொன்று துணைபோயுள்ளதாக அரச புலனாய்வு  அமைப்புகள், சிறிலங்கா அரசாங்கத்துக்கு அறிக்கை அளித்துள்ளன.

கண்டியில் வெடித்துள்ள இனப்பதற்றம் தொடர்பாக நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதன்போதே, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாகச் செயற்படும், காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று, பதற்ற நிலையை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளமை தொடர்பான அரச புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெல்தெனிய காவல்துறை உதவி கண்காணிப்பாளரும், திகண தலைமையக ஆய்வாளரும், மகிந்தவுக்கு ஆதரவானவர்கள் என்றும், இவர்கள் முன்னர் தங்காலை மற்றும் சூரியவெவ பகுதிகளில் பணியாற்றியவர்கள் என்றும் புலனாய்வு அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

2 comments:

  1. It's no use to point at him or who supported him. One thing for sure most of them becoming RACISTS. So stop supporting anyone of them.
    Those Beruwala Bajis ) not Haji's should be ashamed of what they have done.
    Don't keep trust in any politicians trust in Allah and our iman

    ReplyDelete
  2. YES Ofcourse then Ranil... toooo This is the political game...!
    ACJU....? you can ask them they will give clear report because they went to him..directly...

    ReplyDelete

Powered by Blogger.