Header Ads



"இந்த" மத நல்லிணக்கம் ஹராம்

-Mufaris Rashadi-

திட்டமிட்டு உங்களது பள்ளிவால்களை உடைத்து, உங்களது உயிர், உடமைகளுக்கு சேதம் விளைவிப்பவர்கள், அதற்கு ஏதோ ஒரு வகையில் துணைபோகின்றவர்களுடன் மத நல்லிணக்கம் என்ற பெயரில் உணவு கொடுப்பது, அன்னதானம் வழங்குவது, பள்ளிவாசல்களுக்குள் அவர்களை வரவழைத்து கௌரவிப்பது போன்ற செயல்கள் அனைத்துமே மார்க்கம் தடை செய்த தெளிவான ஹராமாகும்.

யார் மார்க்க விவகாரத்துக்காக உங்களுக்கெதிராக போர் தொடுத்து, உங்களை உங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்பட ஒத்துழைப்பும் வழங்கியவர்களை நீங்கள் விசுவாசத்துக்குரியவர்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தான் அல்லாஹ் உங்களைத் தடுக்கிறான். அவர்கள் தான் அநியாயக்காரர்களாவர். (60:9)

அடிப்பான், உதைப்பான் எண்டு பயந்து கொடுத்தா அத அப்புடியே வெக்கப்படாம ஓபனா சொல்லுங்க.. நீங்க உத்தமர்கள் தான் எங்கிறத ஒத்துக்கர்ரோம் அதுக்காக இஸ்லாம் கூறும் மத நல்லிணக்கம், மாங்கா நல்லிணக்கம், சகவாழ்வு என்று மட்டும் சொல்லி குர்ஆன, சுன்னாவ கொச்சப்படுத்தாதீங்க.

எல்லாம் ஹஜ்ஜுக்கு போராங்க எண்டு கரப்பத்தான் ஹஜ்ஜு செய்ய கக்கூஸுக்கு போச்சுதாம் அந்த கேஸுதான் இது...

கண்ட கண்ட காடயர்களுக்கெல்லாம் அஞ்சி அவர்களுக்கு முதுகு சொறியாமலும் வீணாக யாருக்கும் எந்த அநியாயமும் நாம் இழைத்து விடாமலும் நமது தொடர்பை நமது ரப்போடு மட்டும் வைத்துக்கொள்வோம்.

என்றுமே ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல்.

2

எங்காவது ஒரு முஸ்லிம் யாராவது மாற்றுமத ஒருவருக்கு ஏதாவது செய்து விட்டால் எல்லோரும் அதனால் பாதிக்கப்படுவார்கள் எனவே நாம் எமது சமூகத்தை நெறிப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை எதனை சொல்கிறது ?

பயந்து பயந்து வாழ்வோம், அடிமைப்பட்ட சிறுபான்மை சமூகமாக வாழ்வோம், அதனை சகவாழ்வு, பொறுமை, குனூத் போன்ற போர்வைகளால் மூடி மறைத்து விடுவோம் என்பதை தானே சொல்கிறது.

வீட்டிலுள்ள நான்கு பிள்ளைகளையே பெற்றோர்களால் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை எனின் தலைமையே இல்லாது சிதறிக்கிடக்கும் இந்த இருபது இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்களின் நிலை பற்றி சொல்லவா வேண்டும்.

எமது சமூகத்தை நெறிப்படுத்துவது என்பது அவசியமான ஒன்றாக இருப்பினும் பெரும்பாலும் அது அசாத்தியமானதே.. மது அருந்துபவர்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும், ஏன் ? நாம் பாதுகாப்பாக இருக்க என்று யோசிப்பது எவ்வளவு மட்டரகமானது, 

தீமையை தடுப்பது எம்மீது கடமையில்லையா ? இனவாதம் தலை தூக்காவிட்டால் நாம் அதைப் பற்றி பேசத் தேவையில்லை என்ற கருத்தை தானே அது சொல்லாமல் சொல்கிறது.

தீமையை தடுப்பது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் நீதியை நிலை நாட்டுவது என்பதனை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தவறு செய்பவனை மனிதனாக மட்டும் பார்த்து மனிதன் சக மனிதனோடு பிணங்கிக் கொண்டான் எனவே சட்டத்தின் படி தவறு செய்த குறித்த மனிதன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற இன, மத, சாதி பேதம் கலக்காக "மனிதம்" என்ற நீதமிக்க பார்வையை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதே எமது முதன்மைப் போராட்டமாகும்.

முஸ்லிம் அரசியல் வாதிகள், புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள் அனைவரும் தமது பலத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி இனவாதத்தை முற்றாக ஒழிக்க முயற்சிக்காது இருந்து விட்டு அவ்வப்போது நடைபெறுகின்ற நிகழ்வுகளின் போது மட்டும் சகவாழ்வு, பொறுமை, குனூத் போன்ற கத்தத்தை ஓதி பிரச்சினைகளுக்கு பெச் போட முயற்சிக்க நினைப்பதை மட்டும் விட்டு விட்டு இனவாதத்தை ஒழித்துக்கட்டுகின்ற நிரந்தர தீர்வொன்றை நோக்கி நகருவதும் மக்களை நகர்த்துவதுமே காலத்தின் கட்டாய தேவையாகும்.

13 comments:

  1. Our Nation selfish
    Alhamdulillah Bro

    ReplyDelete
  2. Neengalum weliya waanga moulana.
    Ellarukum ippadi pesamudiyum.
    Practical la naama zero

    ReplyDelete
  3. Leader ship illa endru sollawendam.
    Leaderkku naama kattupaduwathu illai endru sollawum.ameer ei naam uddasinam seihiroam.

    ReplyDelete
  4. Pls confirm above articaa by as.sheik Mufaris Rshadi really doubt??????😇😇😇 pls confirm it

    ReplyDelete
  5. اِنَّمَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ قَاتَلُوْكُمْ فِى الدِّيْنِ وَاَخْرَجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ وَظَاهَرُوْا عَلٰٓى اِخْرَاجِكُمْ اَنْ تَوَلَّوْهُمْ‌ۚ وَمَنْ يَّتَوَلَّهُمْ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏ 
    60:9. நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்."சூரா:60 அத்தியாயம்:09
    Sana Faleel இந்த வசனங்கள் எங்களின் சிந்தனையை தூண்டட்டும் யார் சொன்னார்கள் என்பதை விட இது அல்லாஹ்வின் வசனங்கள் என்பதை நினைவில் இருத்தி நானும் நீங்களும் முன்னுக்கு போவோம் சமூகம் ஒன்று சேரும்,உள்ளுக்குள் நாம் அடித்துக்கொள்வதை விட்டுட்டு பொது எதிரியை இனம் காண்போம்

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Yesterday I travelled from Batticaloa through Surena Travels and stopped at Oddamavadi for dinner. I was charged One hundred rupees for an egg rotti and a plan tea at Arafath Hotel. The original rate is sixty, 40+20=60 in other places. This a day light robbery from the people. The fire which consumes is the fire from Allah not from your neighbors for your unfair trade practices, because through your unethical business practices you earn the bitterness of other people. You people don't change themselves, never, now it is up to your Allah the God and the true one we worship to make HIS judgement.

    ReplyDelete
  8. moulana unkalukku thalamaithuvam illamal irukkalam ilankaimuslimkal oruthalamaithuvaththitku kattu pattathaalthaan naattil ippothu amaithi nilavuhirathu
    visajanthu ontru uyiritku pooratiya pothu athai paathukaakka mutpatta nabiyai theentiyathu appothu nabi sonna vaarthai enna athu athankunaththai kaattuthu naan enathu kunaththai kaatukinreen entaarkal
    oruvan aniyaayam seythaal avanaithaan palivaanka veentum
    thavira antha samoohaththai alla
    veliyil thirintha thavalai kinatril vilunthaal ulaham enke theriyappohirathu veliyil varamal
    vaappaaku 5 pillaihal irukkuthu entral oru pirachinai varumpothu 5 pillaikalum thanathu puththikku eatpa karuththu sollum anupavam niraintha vappaavin mutivittku naanku pillaihal kattupata putivaatham ulla oruvan mattum avanin muttaal thanamaana karuththai eatkavilla enpathatkaha enakku vaappaillantu solvatha polathaan irukku unka pathil

    ReplyDelete
  9. Yes you are right Sheikh, myself also was disturbed to see some events did in Muslim Masjids as you mentioned, Thanks for your valuable speech

    ReplyDelete
  10. சில மேட்டுக்குடி மூதேவிகள் பயந்துகொண்டு நாம் மத நல்லிணக்கம் செய்கிறோம் என்று உள்ள சாவு வீட்டுக்கும், அவர்களின் மத இஸ்தானத்துக்கும் உதவி செய்கின்றனர்.
    நேற்றுக்கூட தாய்லாந்தில் இருந்து பாதயாத்திரை வந்த மதகுருமார்களுக்கு செய்த பணிவிடையினை போது விளங்கியது இவர்களின் பயம் கலந்த நல்லிணக்கம்... எமது சொத்தையும் செல்வத்தினையும் எப்படி பார்த்துக்காகலாம் என்று சமூக அக்கறை அற்ற மேட்டுக்குடிகளை எமது தலைவர்களாக வைத்திருக்கும் வரை நாம் திருந்த போவதில்லை

    ReplyDelete
  11. இந்த ஆயத் நேரடியாக பகைமை காட்டுகின்றவர்களைக் குறிக்கிறதா இல்லை எம்மை பகைத்தவர்கள் இருக்கின்ற முழு சமூகத்தையுமா? பிழையான கற்பிதமாகவே இது தென்படுகிறது. ஏனேனில் எம்மை பகைக்காதவர்களோடு இணக்கமாக நடக்கச் சொல்லும்கு குர்ஆன் ஆயத்தும் காணப்படுகிறது.

    ReplyDelete
  12. Abu zeena please post that aayah

    ReplyDelete

Powered by Blogger.