March 09, 2018

"அசம்பாவிதங்கள் இடம்பெற்றால் கட்டுப்படுத்த, நாங்கள் ஒருபோதும் முன்வரமாட்டோம்"

கண்டி, தெல்­தெ­னிய அசம்­பா­விதம் நாடு­பூ­ரா­கவும் பர­வி­யதன் மூலம் பிர­த­மரின் இய­லாமை வெளிப்­பட்­டுள்­ளது. குறித்த அசம்­பா­வி­தத்­துடன் யாரும் எங்­களை தொடர்­பு­ப­டுத்த முயற்­சிக்­க­வேண்டாம். நாங்கள் செயற்­பட்டால் இத­னை­விட பாரிய விளை­வுகள் ஏற்­படும். தீ மூட்­டு­வ­தன்­மூலம் பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ண­மு­டி­யாது என பொது­பலசேனாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

பொது­பல சேனாவின் காரி­யா­ல­யத்தில் நேற்று இடம்­பெற்ற விசேட செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில், 

தெல்­தெ­னிய, திகன பிர­தே­சத்தில் இடம்­பெற்ற அசம்­பா­வி­தத்தை உடன் நிறுத்­து­மாறு சம்­பந்­தப்­பட்ட பிரி­வி­ன­ருக்கு நாங்கள் பகி­ரங்­க­மாக கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் தெரி­வித்தோம். எமது கருத்தை தேசிய தொலைக்­காட்சி பகல் வேளை­களில்   ஒளி­ப­ரப்பி பிரச்­சி­னையை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­தது. ஆனால் இர­வு­நே­ரத்தில் அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வ­ளிக்கும் சிலரை அழைத்து எங்­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்­களை ஒளி­ப­ரப்பி வரு­கின்­றது. அதே­போன்று மஹிந்த ராஜ­பக்்ஷவின் கையா­ளர்­களும் எங்­க­ளுக்கு எதி­ரான கருத்தை தெரி­வித்து வரு­கின்­றனர்.

 இந்த சம்­ப­வத்தில்   அர­சி­யல்­வா­திகள் தங்­க­ளுக்கு தேவை­யான முறையில் கருத்து தெரி­வித்து சம்­ப­வத்தை திசை திருப்பி வரு­கின்­றனர். சிலர் அதனை அர­சாங்­கத்தின் இய­லாமை எனவும் தோல்­வி­ய­டைந்­த­வர்­களின் செயல் எனவும் தெரி­வித்து வரு­கின்­றனர். ஆனால் சகல இன மக்­களும் தங்கள் கட்சி, மத பேதங்­களை மறந்து மனி­தா­பி­மா­னத்­துடன் சம்­ப­வத்தை பார்க்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கின்றேன். 

தெல்­தெ­னி­யவில் 4 முஸ்லிம்­களால் இடம்

பெற்ற தவ­றுக்கு அக்­கு­றணை, திகன,மட­வள முஸ்­லிம்கள் பொறுப்­பாக முடி­யாது. இது யாருக்கும் தெரிந்த விடயம். ஆனால் இன­வாத அடிப்­ப­டையில் இதனை வெளிக்­காட்ட முற்­பட்­ட­த­னா­லே­யேபிரச்­சினை தீவி­ர­மாக மாறி­யது. அத்­துடன் தெல்­தெ­னி­யவில் இடம்­பெற்ற கொலைக்கு கார­ண­மா­ன­வர்­களை கைது­செய்து அவர்­களை சிறையில் அடைத்­தி­ருப்­ப­தாக அர­சாங்கம் பகி­ரங்­க­மாக தெரி­விக்­க­வில்லை. அத­னால்தான் சிங்­கள மக்கள் ஆத்­தி­ர­ம­டைந்து அங்கு கூடினர். இதற்கு பிர­த­மரே பொறுப்புக் கூற­வேண்டும். அவரின் இய­லா­மையே இதற்கு கார­ண­மாகும்.

அத்­துடன் அளுத்­கம சம்­பவம் இடம்­பெற்றபோதும் சிலர் எங்­கள்­மீதே குற்றம் சாட்­டினர். அதில் சில சம்­ப­வங்கள் தொடர்பில் நாங்கள் வருத்­த­ம­டை­கின்றோம். ஆனால் சம்­பவம் தொடர்பில் மக்கள் பல­ரையும் குற்­றம்­சாட்ட ஆரம்­பித்­ததால், மக்­க­ளுக்கு ஆறுதல் அளிக்­கும்­வ­கையில் அது­தொ­டர்பில் ஜனா­தி­பதி ஆணைக்­குழு அமைக்­கு­மாறு நாங்­களே ஆரம்­பத்தில் தெரி­வி த்தோம். அனைத்­தையும் நிறை­வேற்­று­வ­தாக தெரிவித்து அதி­கா­ரத்­துக்கு வந்த இந்த அர­சாங்­கமும் அதனை செய்­ய­வில்லை.

அத்­துடன் பல பொய் வாக்­கு­று­தி­களை அளித்து ஆட்­சிக்கு வந்த ரணில் அர­சாங்கம், மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை தவி­டு­பொ­டி­யாக்­கி­யுள்­ளது. அத­னால்தான் மக்கள் விரக்­தி­ய­டைந்து ஜன­வரி 8ஆம் திகதி செய்த தவறை நிவர்த்­தி­செய்யும் வகையில் கடந்த தேர்­தலில் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக வாக்­க­ளித்­தனர். இருந்­த­போதும் ஆட்­சியை மாற்­ற­மு­டி­யாத விரக்­தி­யி­னால்தான் நாடு­மு­ழு­வதும் இரத்த ஆறு ஓடு­கின்­றது. பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவே இதற்கு பதி­ல­ளிக்­க­வேண்டும்.

  ரணில் விக்­ர­ம­சிங்க அர­சாங்­கத்­துக்குள் பல விட­யங்­களில் சிக்­கிக்­கொண்­டுள்ளார். கட்­சிக்குள் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யாமல் இருக்கும் இவர் நாட்டில் எவ்­வாறு நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­தப்­போ­கின்றார். எனவே பிர­த­மர் ­த­னது இய­லா­மையை மறைக்­கவே இவ்­வா­றான அசம்­பா­வி­தங்­களை உட­ன­டி­யாக தடுக்­காமல் செயற்­ப­டு­கின்றார். அதனால் ரணில் விக்­ர­ம­சிங்க தொடர்ந்தும் இந்த பத­வியில் இருக்­காமல் தகு­தி­யான ஒரு­வ­ருக்கு வழங்­கி­விட்டு கெள­ர­வ­மாக வெளி­யே­ற­வேண்டும். அத்­துடன் நாட்டில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற கின்தொட்ட, அம்பாறை சம்பவங்கள் பாரியளவில் பரவாமல் நாங்கள்தான் தடுத்து நிறுத்தினோம். தற்போது கண்டி சம்பவத்தின் எதிரொலியாக வேறு பிரதேசங்களில் ஏற்படவிருந்த அசம்பாவிதங்களையும் நாங்கள்தான் தடுத்து நிறுத்தினோம்.  இந்த சம்பவத்துக்கு எங்களை குற்றம்சாட்ட முயற்சித்தால் எதிர்காலத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெற்றால் அதனை கட்டுப்படுத்த நாங்கள் ஒருபோதும் முன்வரமாட்டோம் என்றார்.

3 கருத்துரைகள்:

நல்லா நடிக்கிறார் ஜானம்

Allah will newer leave oppressing people.he will driven out in the past

Post a Comment