March 23, 2018

ஹாமதுருனி சோபிதவுக்கு, ஒரு முஸ்லிம் எழுதுவது...!

அன்பின் ஓமல்பே சோபித தேரர் அவர்களுக்கு, ....

அண்மையில் 21/03/2018' திவயின' சிங்களப் பத்திரிகை ஒன்றில் இலங்கையின் இனப் பிரச்சினைகளுக்கான பிரதான காரணங்கள் தொடர்பாக   உங்களது கருத்தினை வெளியிட்டு இருந்தீர்கள். அதன்படி ,முஸ்லிம்களின் மீது பல தப்பபிப்பிராயங்களும் , சந்தேகங்களையும் வெளிப்படுத்தி இருந்தீர்கள் அதற்கான சுருக்கமான பதிலே இதுவாகும்...

1).நாட்டுச் சட்டம் எல்லோருக்கும் சம்மாகப் பின்பற்றப்பட வேண்டும் என்ற கருத்தை குறிப்பிட்டீர்கள்,.... அதைத்தான் நாங்களும் நீண்டகாலமாக கூறி வருகின்றோம்,ஏனெனில் இந் நாட்டின் சட்டம் ஒழுங்கு ஒரு சாராருக்கு சார்பானதாக இருக்கக் கூடாது. முஸ்லிம்களின் திருமணச்சட்டம், தனியான நீதி அமைப்புமுறை என்பன இந்நாட்டின் சுதந்திரத்திற்கு முற்பட்டும் பின்பற்றப்பட்டு வந்த விடயங்கள், மட்டுமல்ல, அவை பொதுச்சட்டங்களின் கீழ் யாரும்  நீதி பெறுவதையோ, விவாகரத்துப் பெறுவதில் இருந்தோ யாரையும், பலவந்தப்படுத்தப்படவில்லை,..காதி நீதி மன்ற முறை என்பதும், திருமண முறை என்பதும் மிக இலகுவான அரச செலவு குறைந்த முறைமைகளாகும் காதியார், பதிவாளர் எனும் குறைந்த சம்பளம் பெறக்கூடிய சமூக மதிப்புடைய ஒரு சிலரால் சமூக சேவை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பணி .அவை யாவும்,பொதுச் சட்டததின்கீழ் வந்தால் அதற்கான அதிகாரிகளும் , சம்ளமும் அரசுக்கு இன்னும் அதிகரிக்கும்,இதனால் ஏதோ ஒருவகையில் முஸ்லிம்கள் நாட்டுக்கு நன்மை புரிகின்றனர்.
2) பாடசாலைக்கட்டமைப்பு என்பது, எல்லா சமுகங்களுக்கும் பொதுவானதே, எத்தனையோ இந்து, பௌத்த, மிஷனரி கல்லூரிகளும் உள்ளன, மட்டுமல்ல,அவை அக்கால அரசுகளின் கொள்கை, பிராந்திய மக்களின் நன்மை கருதி பல்கலைக்கழகங்களும் நிறுவப்பட்டுள்ளன. 

உதாரணமாக , கல்வி அமைச்சராக பதியுத்தீன் மகமூத் அவர்கள் இருக்கும் போது யாழ் பல்கலைக்கழகத்தை நிறுவினார்... பௌத்த பிக்குகளுக்கான பாளி பல்கலைக்கழகம்  தனியாக இயங்குகின்றது.

இவை அரச கொள்கைகளே தவிர அப்பாவி முஸ்லிம்களுக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை, 

இன்று கொழும்பிலும், கண்டி போன்ற பிரதான நகரங்களிலும் ஒரு School Admition எடுப்பதற்கு  பெற்றோர்படும் அவதி உங்களுக்கு விளங்கி இருக்காது, அவ்வாறாயின் பிரபலமான சிங்களப் பாடசாலைகளில் தரமான தமிழ் பிரிவை ஆரம்பியுங்கள் அதன் பிறகு பாருங்கள் ,என்ன இடம்பெறும் ?....என்று இப்போதே கஷ்டப் பிரதேசங்களில உள்ள பல முஸ்லிம் பாடசாலைகள் ஆசிரியர் தட்டுப்பாடு, காரணமாகவும், மாணவர்தட்டுப்பாட்டாலும் இழுத்து மூடும் நிலையில் உள்ளன,.முஸ்லிம் பாடசாலைக்கு முஸ்லிம்கள் மட்டுமே செல்ல முடியும் என்ற உங்களது கூற்று ஏற்க முடியாதது, 

உதாரணமாக கண்டியில் உள்ள பதியுத்தீன் மகமூத் கல்லூரிக்குச் சென்றால் அறிவீர்கள் எத்தனை சிங்களபெண்மாணவிகள் உள்ளர் என்பது.

அரச சீருடை தொடர்பான விடயத்தில்  முஸ்லிம் மாணவர்களுக்கு அதிக செலவு என்று குறிப்பிட்டிருக்கின்றீர்கள், அவ்வாறாயின், பிக்குகளுக்கான சீருடைத் துணிகளுக்கு அரசு செலவிடுகின்றதே, அது முஸ்லிம், இந்து  மதகுருமாருக்கு வழங்கப்படுவதில்லையே அதற்கு யார் பதிலளிப்பது?

3).முஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்கு சமுகமளிக்க அனுமதிக்கப்படவில்லை , அவர்கள் வெட்க சுபாவம் காரணம் என்கின்றீர்கள்,, இதனை என்னால் ஏற்க முடியாது, இலங்கை நீதி வரலாற்றில் பல முஸ்லிம்பெண்கள் நீதிபதிகளாகவும், சட்டத்தரணிகளாகவும் இன்றும் உள்ளனர்..  .....ஆனால்சதாரண ஒரு சில  மக்கள் வெட்கமுடையவர்களாயின் அது அவர்களது தனிபட்ட விடயம்.... 
அதனால்தான் பல பெண்கள் படித்தும்  அரச தொழில்களை விரும்பாமல் இன்னும் "வீட்டு மனைவி" களாக இருந்து அரசுக்கு தொழில்வாய்ப்பு தொல்லை கொடுக்காமல் தமது கணவன்மாரின்  ஊதியத்தில் வாழ்கின்றனர்.

4). வெள்ளிக்கிழமை  ஜும்மா தினத்தில் வாகன நெரிசல் , வீதிகள் நிறைவது தொடர்பாக கூறிஇருந்தீர்கள்,.......

  உங்கள் ஆதங்கம்  நியாயமானது ஒரு சமய நிகழ்வு இன்னொருவருக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது..ஆனால் சமய நிகழ்களுக்காக வாகனப் போக்குவரத்து நெரிசல் பள்ளிவாசல்களால் மட்டுமா இடம்பெறுகின்றது,?..
எத்தனையோ பன்சலைகளில் இடம்பெறும் "பெரஹரா", களினால் வாரக்கணக்கில் மாற்றுப் பாதை ஏற்பாடு செய்யப்படுவதில்லையா? அவை இடம் பெற்ற பின் ஏற்பட்ட அசுத்தங்களை அரச செலவில் சுத்திகரிப்பதில்லையா? 

உதாரணமாக,  கண்டி நகரின் பல வருடக்கணக்கான போக்குவரத்து நெரிசலுக்கு தலதா மாளிகையின் பாதை மூடப்பட்டுள்ளதே காரணமாக அமைந்துள்ள தாகவும் அதற்கெதிராக பொதுமக்களும் ,பெற்றோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வில்லையா? அதனால் பல்லாயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் இன்றும் பாதிக்ப்பட வில்லையா? இதன் மர்ம்ம்தான் என்ன?

5).முஸ்லிம் பிரதேசங்களில்  குறிப்பாக வட கிழக்கில் "தலைக்கவசம்" அணிவதில்லை என்று கூறி உள்ளீர்கள்.. இது தொடர்பான சில புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் உலவி இனவாத்த்தினைத் தூண்டுகின்றன.

அவை யுத்த காலத்தில் கலைக்கவசம் அணிந்தால் ,எதிரே வருபவரை அடையாளம் காண முடியாது என்பதற்காக படையினரால் விதிக்கப்பட்டிருந்த ,எழுதப்படாத சட்டம், அது போல் தமிழர் வாழும் பிரதேசங்களில் பிரதான வீதியில் உள்ள மதில்களில் "இடைவெளி" விட்டே சுவர் கட்ட வேண்டும்  என்பதும் படையினரின் கட்டளை...

( வீட்டின் உட்பகுதியை அவதானிப்பதற்காக) 

அதையே மக்கள் அரச சட்டத்தை மதித்துப்  பின்பற்றினர்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே அவை,யுத்தகால சட்டத்தைப் பின்பற்றியது அவர்களின் குற்றமா?
.இப்போது யாரும் சட்டத்தை மீறினால் சாணுக்குச் சாண் போக்குவரத்துப்  பொலிஷார் உள்ளனர் அது அவர்களது கடமை, ..."சிறப்பாகச் "செய்கிறார்கள்

இன்றும் பிக்குமார் எங்காவது தலைக்கவசம் அணிந்து பயணிப்பதை நீங்கள் அவதானித்துள்ளீர்களா?? அல்லது அவர்களுக்கு விஷேட ஏற்பாடுகள் உள்ளனவா?  நாட்டின் எப்பாகத்திலும் அது நடைபெறுவதில்லையே..

6)."ஹலால்" தொடர்பான விடயம் தனிமனிதனோடு தொடர்புபட்டது அதனை நிறுவனமயப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன என்பதனால்தான் அவை கைவிடப்பட்டது,ஹலால் சான்றிதழ் வழங்குவதனால் இலங்கைக்கு அறபு நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவர் என அக்கால பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ கூறியதையும்  மறந்திருக்க மாட்டீர்கள. அதற்காக சிங்கள மக்கள் தமது பணத்தை அதிகமாகச் செலவிடத் தேவை இல்லை, அவர்கள் தமக்கு விரும்பிய உணவை உண்ண முடியும், 

உதாரணமாக..பன்றி இறைச்சிக்கு யாரும் ஹலால் முத்திரை குத்தவரவில்லையே..

அதுபோல முஸ்லிம் கடைகளிலும் அவர்களுக்கு விருப்பமானவற்றை வாங்கி உண்ண முடியும், இன்னும் மதுப்பாவனைக்கும், அதனால் ஏற்படும் சுகாதார, பொதுச் செலவுகளுக்கும் முஸ்லிம்களும்தானே வரி செலுத்துகின்றனர். ஆனால் மதுப் பாவனையில் முஸ்லிம்களின் வகிதாசாரம் மிகவும் குறைவுதானே... அதற்காக அவற்றை மூடும்படுயோ, தடை செய்யும்படியோ முஸ்லிம்கள் கோருவது நியாயமானதா??

7). பள்ளிவாசல்களால் ஏற்படும் நெரிசல் களுக்கு அவற்றின் இடப்பற்றாக்குறையும்    காரணமகும். எத்தனையோ பன்சலைகள் அரச காணிகளில் இலவசமாக இயங்குகின்றன, அவ்வாறான நிலை ஏனைய சமயதாபனங்களுக்கு வழங்கப்படவில்லையே.. இதுவும் நீதி சமமில்லாதைக் காட்டவில்லையா?

மட்டுமல்லாமல் அண்மைக்காலமாக இனவாதக் கருத்துக்களைக் கூறும் பிக்குமாருக்கு எதிராக எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் என்ன?

இன்னும் தேசிய நிகழ்வுகளிலும், தேசிய கீதம் இசைக்கப்படும் போதும்  சில பௌத்த மதகுருமார் எழுந்து மரியாதை செலுத்தாமல் தமது இருக்கைகளில் இருக்கின்றனரே இதற்கு சட்டத்தின் விஷேட நிலை என்ன? இவ்வாறு ஏனைய மத்தலைவர்கள் செய்தால் நிலைமை என்ன??

இன்னும் பௌத்த பிக்குகள் இறக்கும் போது அவர்களது உடல்களை வெளிநாடுகளில் இருந்து அரச செலவில்  கொண்டு வருவதும் ,அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்வதும் ஏனைய சமயத்தவர்களுக்கு ஏன் இடம்பெறுவதில்லை?

மதிப்புக்குரிய ஹாமதுருனி......

இலங்கை ஒரு பல்லின நாடு அது அதன் சமய, சமூக அமைப்புக்கேற்ப சட்டங்களையும் கொண்டிருக்க வேண்டும், அதுவே இந்நாட்டிற்கான  பாரம்பரியம் அதற்காகவே நீண்டகால அதிகாரப் பரவலாக்கம் கோரி சிறுபான்மையினரும் குரல்கொடுத்து வருகின்றனர்....... இதனை ஏன் அவசரமாக நடைமுறைப்படுத்த நாம் எல்லோரும் ஒன்றிணைந்து முன்வர முடியாது?????...

இப்படி எத்தனையோ " விஷேட" தன்மைகள் தொடர்பாக ஏனைய சமூக மக்களிடையேயும்  தப்பபிப்பிராயங்களும், சந்தேகங்களும் உள்ளன..........எனவேதான் அரசியல் மற்றும் ,சமயத் தலைவர்கள் ஆகிய நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு நல்ல  முடிவுக்கு  வந்து அவற்றினை அரசஅனுமதியுடனான சட்டங்களாகவும் மாற்றி அமைக்க உதவ முடியும் தானே!. 

அதுவே எதிர்கால இலங்கையர்களுக்கும் பாதுகாப்பானதாக அமையும்..என்பதே எமது பணிவான அபிப்பிராயமாகும்.

குறிப்பு:- இக்கடித்த்தை சிங்கள மொழியில் எழுதி இருந்தால் உங்களுக்கு இலகுவாக அமைந்திருக்கும். ஆனால் எனது தாய்மொழியான தமிழும் இந்நாட்டின் "அரசகரும மொழி "என்பதனால் அச்சிரமத்தை நான் எடுத்துக் கொள்ள வில்லை.

இப்படிக்கு 

உங்கள் மீது அதிக மதிப்பு வைத்துள்ள....

MUFIZAL ABOOBUCKER.

8 கருத்துரைகள்:

good article must published on sinhala news paper

please translate this and publish in singhala media. Nice reply from mufizal aboobakkar

அருமையான பதிவு

அருமையான பதிவு

சிங்களத்தில் இல்லாவிட்டாலும் ஆங்கிலத்தில் எழுதி ஆங்கில பத்திரிகையில் பதிவிட்டால் இன்னும் பிரயோசனமாக இருக்கும் இன்று இலங்கையில் படித்த மக்களிடம் நல்ல பண்புகள் இல்லாமையே அநேக பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது

மிகச் சிறந்த பதிவு.

Post a Comment