Header Ads



அரைகுறை ஆடை விளம்பரங்களை, அரசாங்கம் தடை செய்யவேண்டும் - காத்தான்குடியில் தீர்மானம்

அரை குறை ஆடை­ய­ணிந்த பெண்­களின் விளம்­ப­ரங்­களை அர­சாங்கம் தடை செய்ய வேண்­டு­மென காத்­தான்­குடி பிர­தேச செய­ல­கத்தில் நடை­பெற்ற மகளிர் தின ஒன்றுகூடலின் போது தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

நேற்று காத்­தான்­குடி பிர­தேச செய­ல­கத்தில் நடை­பெற்ற மகளிர் தின ஒன்று கூடல் வைப­வத்­தி­லேயே இந்த தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­ட­துடன் அதனை மகளிர் விவ­கார அமைச்­சுக்கு அனுப்­பவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

காத்­தான்­குடி பிர­தேச செய­லக உதவி பிர­தேச செய­லாளர் ஏ.சி.அகமட் அப்கர் தலை­மையில் நடை­பெற்ற இந்த மகளிர்தின ஒன்றுகூடலில் இந்தப் பிர­க­ட­னத்தை உதவி பிர­தேச செய­லாளர் ஏ.சி.அகமட் அப்கர் வெளி­யிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரி­விக்­கையில், வள­மான ஒரு பெண்ணை சமூ­கத்தில் உரு­வாக்­கு­கின்ற செயற்­பாட்டை செய்­வ­தற்கு ஏற்ற வகையில் சட்­டங்­களை சீர­மைத்து இவ்­வா­றான விளம்­ப­ரங்­களின் ஊடாக பொது இடங்­க­ளில் பெண்­களின் தரத்தைக் குறைக்­கின்ற செயற்­பா­டு­களை நிறுத்­து­வ­தற்கு சட்­டங்­களை ஆக்க வேண்­டு­மென காத்­தான்­குடி பிர­தேச செய­ல­கத்தில் நடை­பெற்ற மகளிர் தின ஒன்றுகூடல் வைப­வத்தில் இங்கு கலந்து கொண்­டுள்ள பெண்கள் சார்­பாக இந்தக் கோரிக்­கையை விடுக்­கின்றோம். இந்தச் செயற்­பாட்டை மகளிர் விவ­கார அமைச்சு மேற்­கொள்­வ­துடன் அதற்­காக இந்தத் தீர்­மா­னத்தை எமது காத்­தான்­குடி பிர­தேச செய­ல­கத்­தி­லுள்ள மகளிர் அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் ஊடாக இதனை நாங்கள் மகளிர் விவ­கார அமைச்­சுக்கு அனுப்பி வைக்­கின்றோம்.

சர்­வ­தேச ரீதி­யாக இன்று சிரி­யாவில் நடை­பெறும் யுத்­தத்தில் சுமார் 4 வரு­டங்­க­ளாக பெண்கள், சிறு­வர்கள் உட்­பட பொது மக்கள் கொல்­லப்­பட்­டு­வ­ரு­வ­துடன் மனித அவ­லங்கள் அங்கு இடம்பெற்று வரு­கின்­றன. சர்­வ­தேச யுத்த தர்­மத்தை மீறி பெண்கள், சிறு­வர்கள், வயோ­தி­பர்கள், மதப் போத­கர்கள் எனப் பலரும் கொல்­லப்­ப­டு­கின்­றனர்.

இவை­களை நிறுத்­து­வ­துடன் பெண்கள், சிறு­வர்­க­ளுக்கு எதி­ராக நடக் கும் இந்தக் கொடு­மை­களை உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும் எனவும் இதில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பு தலையிட வேண்டும் எனவும் இந்த மகளிர் ஒன்றுகூடலில் நாம் தீர்மா னமாக நிறைவேற்றுகின்றோம் என அவர் தெரிவித்தார்.

3 comments:

  1. naanga maatranukku maarkam sollama
    NAANGA MUDAHALIL NAMMA MAARKATHAI PIN PATRUWOUM
    ALLAH DA KAAWAL ,NAMMA NAADU IRUKKURA IRUPPUKKU IDU WERA,
    PUTTHISAALITHANAMA NADAPPOOM

    ReplyDelete
  2. Is this news that much importance at this moment?

    ReplyDelete
  3. மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.
    (அல்குர்ஆன் : 3:110)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.