March 12, 2018

மௌலவி சதகத்துல்லா விடயத்தில், மௌனம் காப்பது ஏன்...?

-சட்டத்தரணி பஸ்லின் வாஹிட்-

கண்டி தெல்தொட்டையை பிறப்பிடமாகவும் ஹீரஸ்ஸகலயை வசிப்பிடமாகவும் கொண்ட  காதி நீதவான்,விவாகப் பதிவாளர்,ஆசிரியர் ஆலோசகர்  ஆகிய பதவிகளை வகித்த பன்மொழியிலும் மார்க்க சொற்பொழிவு ஆற்றக்கூடிய சர்வமதக் குழு அங்கத்தவர் மௌலவி சதக்கத்துல்லா அவர்கள் கடந்த செவ்வாய்க் கிழமை கண்டி அம்பத்தன்னை பிரதேசத்தில் இனவாதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

பஸ்ஸில் பிரயாணம் செய்து கொாண்டு இருக்கும் போது பஸ்ஸினுள் புகுந்தே தாக்கப்பட்டுள்ள இவர் அதன் பின்னர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் சுய நினைவற்று சிகிச்சை பெறுகின்றார்.இவர் காயத்துடன் சுயநினைவற்று நடந்து செல்லும் வீடியோவும் வட்ஸப் மூலம் பரப்பப்பட்டு கொண்டிருந்தது.

சமூக வலைத்தலங்களுக்கு உள்ள தடை காரணமாக பலருக்கும் இச்செய்தி தெரியாமலிருக்கலாம்.ஆனால் வியப்புக்குரிய விடயம்"ஏன்னவெனில் இந்த சம்பவத்தைப் பற்றி ஊடகங்களோ அரசியல்வாதிகளோ சமூக ஆரவலர்களோ யாருமே அலட்டிக் கொள்ளாமல் இருப்பதுதான்.உலமா சபை கூட மௌனித்து இருப்பது ஏன் என்று புரியவில்லை.

பிரபல உலமா ஒருவருக்கு நடந்துள்ள இத்துயர சம்பவம் தொடர்பாக ஒரு கண்டன அறிக்கையாவது வெளியிடப்படடதது ஏன் என்று பல்வேறு சமூக ஆர்வலர்களும் கேள்விக்குட்படுத்துகினறனர்.

இதே நிலை ஒரு பெரும்பான்மை மதபோதகருக்கு நடந்து இருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும்.மௌளவி சதக்கத்துல்லா அவர்கள் இனங்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்ப்பதில் முன்னின்று செயல்படும் ஒரு உலமா.சிங்கள மொழியிலும் பிரசங்கம் நிகழ்த்தக் கூடியவர்.

கண்டிக்கு இந்நாட்களில் படையெடுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட இவர் விடயத்தில் கரிசணை காட்டியதாகத்  தெரியவில்லை.ஹீரஸ்ஸகல பள்ளிவாயல் ஆரம்பித்ததில் முன்னின்று செயல்பட்ட இவர் நம்பிக்கை பொறுப்பாளர் சபை தலைவராகவும் செயல்பட்டவர்.எனவே இவ்விடயத்தில் உலமா சபை கூடிய கரிசணை காட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து

5 கருத்துரைகள்:

Deaf, Dumb, and Blind Muslim Community leaders.

எங்கட உலமாக்களுக்கு உள்ள மரியாதையை எமது சமூகம் புறக்கணிப்பதால் அல்லாஹ்ட சோதனை இன்னும் வரும் ..பொய்யான ஒரு மதத்தின் பிக்கு மார்கள் இன்று என்ன செய்தாலும் அவர்களுக்கு அவர்கள் சமூகம் என்ன மாதிரி மரியாதை வழங்குகின்றது ...

இவரை போன்ற ஒரு நல்ல மனிதரை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. வெகு விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன். இவருக்கு கைவெய்த்த அந்த காடயன இறைவன் சும்மா விடவே மாட்டான் .

Shame on bloody medias & politicians...Damn

சிறந்த ஆலிம்களின் மீது வன்முறை சம்பவங்கள் நடாத்துவது அதன் விளைவை வன்முறையாளர்கள் வெகு விரைவில் சந்திப்பார்கள்.انشاء الله

Post a Comment