March 21, 2018

ஓம‌ல்ப‌ சோபித்த‌ தேர‌ருக்கு, முபாரக் மௌலவி பதிலடி

ஹெல‌ உறும‌ய‌வின் முன்னாள் த‌லைவ‌ரும் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ருமான‌ ஓம‌ல்ப‌ சோபித்த‌ தேர‌ர்
முஸ்லிம்க‌ளுக்கென‌ த‌னியான‌ ச‌ட்ட‌ங்க‌ள் இருப்ப‌து ப‌ற்றியும் இத‌ன்கார‌ண‌மாக‌வே தாக்குத‌ல்க‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌ என‌வும் அர்த்த‌ம‌ற்ற‌ வ‌கையில்  பேசியுள்ளார் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி தெரிவித்தார்.

க‌ட்சி த‌லைமைய‌க‌த்தில் ந‌டைபெற்ற‌ மௌல‌விமாருட‌னான‌ ச‌ந்திப்பில் அவ‌ர் மேலும் கூறிய‌தாவ‌து

இந்த‌ தேர‌ரின் பிழையான‌ இப்பேச்சை சிங்க‌ள‌ ஊட‌க‌ங்க‌ள் தூக்கி பிடிப்ப‌த‌ற்கான‌ பிர‌தான‌ கார‌ண‌ம் அவ‌ர் ஒரு தேர‌ர் என்ப‌த‌ற்காக‌ ம‌ட்டும‌ல்ல‌, அவ‌ர் ஒரு பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ராக‌வும் க‌ட்சித்த‌லைவ‌ராக‌வும் ச‌ம‌ய‌த்த‌லைவ‌ராக‌வும் இருப்ப‌தால்த்தான். இத‌னை பார்த்தாவ‌து முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு ரோச‌ம் வ‌ர‌ வேண்டும். உல‌மாக்க‌ளை, க‌ட்சித்த‌லைவ‌ராக‌ இருக்கும் உல‌மாக்க‌ளை பாராளும‌ன்ற‌ம் அனுப்பினால்த்தான் அவ‌ர்க‌ள‌து க‌ருத்துக்க‌ளுக்கு சிங்க‌ள‌ மீடியாக்க‌ள் முன்னுரிமை கொடுக்கும் என்ப‌தே உண்மை. இல்லாம‌ல் நாம் எவ்வ‌ள‌வு ப‌தில் கொடுத்தாலும் அது ந‌ம்மை விரும்பும் சில‌ த‌மிழ் ஊட‌க‌ங்க‌ளோடு ம‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு விடும்.

அர‌சிய‌லே வேண்டாம் என‌ துற‌வியான‌ பௌத்த‌ரை பின் ப‌ற்றுவோர் அர‌சிய‌லில் உள்ள‌ன‌ர். அர‌சிய‌லையும் செய்து காட்டிய‌ ந‌பியை பின்ப‌ற்றும் ச‌மூக‌ம் உல‌மாக்க‌ளை அர‌சிய‌ல் த‌லைவ‌ராக்குவ‌தில் த‌ய‌க்க‌ம் காட்டுகிற‌து.

முஸ்லிம்க‌ளுக்கு த‌னியான‌ பாட‌சாலைக‌ள் இருப்ப‌தாக‌வும் சிங்க‌ள‌ ம‌ற்றும் த‌மிழ‌ர்க‌ளுக்கு அவ்வாறு பாட‌சாலைக‌ள் இல்லை என‌வும் அவ‌ர் கூறுவ‌து அவ‌ருக்கு நாட்டு ந‌ட‌ப்புக்க‌ள் தெரியாது என்ப‌தை காட்டுகிற‌து. நாட்டில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கென‌ சிங்க‌ள‌ மொழி பாட‌சாலைக‌ள் நிறைய‌வே உண்டு. த‌மிழ் ம‌க்க‌ளுக்கும் உள்ள‌ன‌. சில‌ பாட‌சாலை இந்துக்க‌ல்லூரி என்ற‌ பெய‌ரில் கூட‌ அர‌ச‌ பாட‌சாலைக‌ள் உள்ள‌ன‌.

அத்துட‌ன் முஸ்லிம் பாட‌சாலைக‌ளில் சிங்க‌ள‌வ‌ர் த‌மிழ‌ர் க‌ல்வி க‌ற்க‌ முடியாது என‌ தேர‌ர் கூறுவ‌து மிக‌ப்பெரிய‌ பொய்யாகும். கொழும்பு ஸாஹிராவில் ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ள் க‌ல்வி க‌ற்றுள்ள‌ன‌ர். த‌மிழ‌ர் விடுத‌லைக்கூட்ட‌ணியின் த‌லைவ‌ர் ஆன‌ந்த‌ ச‌ங்க‌ரி கூட‌ கொழும்பு ஸாஹிராவில் க‌ற்ற‌வ‌தான். அதே போல் க‌ல்முனை ஸாஹிராவிலும் ப‌ல‌ த‌மிழ் மாண‌வ‌ர் க‌ற்றுள்ள‌ன‌ர் இன்னும் க‌ற்கின்ற‌ன‌ர்.

முஸ்லிம் ப‌குதிக‌ளில் முஸ்லிம்க‌ள் ஹெல்மேட் போடுவ‌தில்லை என‌ தேர‌ர் கூறியிருப்ப‌து காழ்ப்புண‌ர்வாகும். போக்கு வ‌ர‌த்து பொலிசார் சிங்க‌ள‌ ப‌குதிக‌ளை விட‌ முஸ்லிம் ப‌குதிக‌ளில்தான் அதிக‌ம் க‌ட‌மையாற்றுவ‌துட‌ன்  அதிக‌ வ‌சூலும் செய்கின்றர். இத‌னை முஸ்லிம் ப‌குதிக‌ளில் க‌ட‌மையாற்றும் பொலிசாரின் அறிக்கை மூல‌ம் அறிய‌ முடியும். அது ம‌ட்டும‌ல்லாம‌ல் பௌத்த‌ ஹாம‌துருமாருக்கு விசேட‌மாக‌ ஹெல்மெட் போடாம‌ல் போவ‌த‌ற்கான‌ ச‌ட்ட‌ம் இருப்ப‌து தேர‌ருக்கு தெரியாதா?

இந்த‌ நாட்டின் ம‌த‌ குருக்க‌ளில் மௌல‌விமாருக்கென‌ விசேட‌ வ‌ர‌ப்பிர‌சாத‌ங்க‌ள் எதுவும் இல்லை. ஆனால் பௌத்த‌ குருமார்க‌ளுக்கே அதிக‌ ந‌ன்மைக‌ள் உள்ள‌ன‌. நாட்டில் அனைவ‌ருக்கும் ஒரே ச‌ட்ட‌ம் என‌ கொண்டு வ‌ந்தால் ஹாம‌துருமாரும் ஹெல்மெட் போட‌ வேண்டி வ‌ரும். அதே போல் ப‌ஸ்களில் முன் சீட் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுவ‌தையும் த‌விர்க்க‌ வேண்டி வ‌ரும்.

முஸ்லிம்க‌ளுக்கென‌ த‌னியான‌ திரும‌ண‌ ச‌ட்ட‌ம் இருப்ப‌தை தேர‌ர் விம‌ர்சித்துள்ளார். முஸ்லிம்க‌ளுக்கு ம‌ட்டும‌ல்ல‌, யாழ்ப்பாண‌த்துக்கும் க‌ண்டிக்கும் கூட‌ விசேட‌ ச‌ட்ட‌ங்க‌ள் உள்ள‌ன‌.

14 வ‌ய‌து சிங்க‌ள‌ப்பெண் முஸ்லிம் இளைஞ‌ரை காத‌லித்து முஸ்லிம் முறைப்ப‌டி திரும‌ண‌ம் செய்த‌தால் அவ‌ர் சிறைக்கு போவ‌திலிருந்து த‌ப்பிவிட்டார் என‌ தேர‌ர் கூறுகிறார். அப்ப‌டியாயின் அந்த‌ப்பெண் அதுவும் பிற‌ப்பால் சிங்க‌ள‌ப்பெண் காதலித்த‌ குற்ற‌த்துக்காக‌ சிறை செல்ல‌ வேண்டும் என‌ தேர‌ர் விரும்புமிறாரா?

18 வ‌ய‌தில்த்தான் அந்த‌ப்பெண் திரும‌ண‌ம் செய்ய‌ வேண்டும் என்றிருந்தால் 14 வ‌ய‌தில் காத‌லிக்க‌ தொட‌ங்கிய‌ சிங்க‌ள‌ப்பெண் 18 வ‌ய‌து வ‌ரை அந்த‌ இளைஞ‌னுட‌ன் "சும்மா" இருப்பாளா? அந்நிலையில் குழ‌ந்தை உருவானால் அவ‌ள் அத‌னை க‌ருவிலேயே க‌லைக்க‌ வேண்டும‌ல்ல‌வா. ஏனெனில் க‌ல்யாண‌ம் இன்றி க‌ர்ப்ப‌ம் த‌ரித்தால் அந்த‌ குழ‌ந்தை அவ‌மான‌ச்சின்ன‌மாக‌ அல்ல‌வா இருக்கும். இதையா க‌ருணையை போதிக்கும் பௌத்த‌ த‌ர்ம‌ம் சொல்கிற‌து? இதையெல்லாம் தெரிந்துதான் இறைவ‌னின் ம‌த‌மான‌ இஸ்லாம் பெண்ணுக்குரிய‌ வ‌ய‌து அவ‌ள் ப‌ருவ‌ம‌டைத‌ல் என‌ வ‌ழி காட்டியுள்ள‌து. அத‌ன் ப‌டி மேற்ப‌டி பெண் முஸ்லிம் முறைப்ப‌டி திரும‌ண‌ம் செய்த‌தால் 15 வ‌ய‌தில் முறைப்ப‌டி குழ‌ந்தையை பெற முடியும்.

இதே போல் தேர‌ர் சொல்லியுள்ள‌ ப‌ல‌ விட‌ய‌ங்க‌ள் பிழையான‌வையாகும். அவ‌ற்றை ப‌ற்றி அவ‌ர் சொல்லியுள்ள‌து போன்று அவ‌ருட‌ன் க‌ல‌ந்துரையாட‌ உல‌மா க‌ட்சி எப்போதும் த‌யாராக‌ இருக்கிற‌து என்ப‌தை சொல்லிக்கொள்கிறோம்.

6 கருத்துரைகள்:

இதனை தமிழில் எழுதாமல் சின்களத்தில் எழுதி சின்கள பத்த்ரிகையில் பிரசுரிக்க சொல்ல வெண்டும்
நம்மிடம் இதை சொல்லுவதால் என்ன பயன்?

So Otha Thera doesn’t understand Tamil.......

மௌலவியின் பதில் பாரட்டத்தக்கது ஆனால் அந்த தேரர் சிங்களத்தில் பேசினால் நீங்கள் தமிழில் அல்லவா பதில் தருகின்றீர்கள் சிங்களம் தெரிந்த உலமாக்கள் இதற்கு பதில் தரவேண்டும் அப்போதுதான் அது அவருக்குச் சேரும். நீங்கள் சொல்வது எங்களுக்குச் சேரும் அதை நாங்கள் அவர்களுக்கு சேர்த்தாலும் அது எங்களின் கருத்துப் போன்றுதான் சேரும். ஆகவே இனியாவது ஜம்இயதுல் உலமாவில் உள்ள பொறுப்பு வாய்ந்த உலமாக்கள் சிங்களத்தில் வாணைத் திறங்கள் இல்லாவிட்டால் இந்த சமூகத்தில் அழிவிற்கு வழிகாட்டிய பாவத்தைச் சுமந்தவராகுவீர்கள்

மௌலவியின் பதில் பாரட்டத்தக்கது ஆனால் அந்த தேரர் சிங்களத்தில் பேசினால் நீங்கள் தமிழில் அல்லவா பதில் தருகின்றீர்கள் சிங்களம் தெரிந்த உலமாக்கள் இதற்கு பதில் தரவேண்டும் அப்போதுதான் அது அவருக்குச் சேரும். நீங்கள் சொல்வது எங்களுக்குச் சேரும் அதை நாங்கள் அவர்களுக்கு சேர்த்தாலும் அது எங்களின் கருத்துப் போன்றுதான் சேரும். ஆகவே இனியாவது ஜம்இயதுல் உலமாவில் உள்ள பொறுப்பு வாய்ந்த உலமாக்கள் சிங்களத்தில் வாணைத் திறங்கள் இல்லாவிட்டால் இந்த சமூகத்தில் அழிவிற்கு வழிகாட்டிய பாவத்தைச் சுமந்தவராகுவீர்கள்

mubarak maulavi we appreciate your explanation if they publish in singhala media it will be worth full

If anyone can translate it in sinhala with mubarak moulavi's name it is appreciable. It is duty of muslims

Post a Comment