Header Ads



"இனவாதத்திற்கும், முஸ்லிம்களின் ஆடைக்கும் சம்பந்தம் இல்லை" இதை, ஆதரிப்பது ஆபத்தானது...!

-Safwan Basheer-

இலங்கை முஸ்லிம்களின் அடையாளம்,

இனவாதம் இலங்கையில் துளிர்விடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்களின் ஆடையும்  ஒரு பேசுபொருளாக மாறிவிடுகின்றது.

உண்மையில் பேஸ்கவர் ஜுப்பா மாதிரியான ஆடைகள் இலங்கை சூழலுக்கு பொருத்தமா இல்லையா என்ற கேள்வி முஸ்லிம்கள் மத்தியில்கூட நிலவுகிறது.

ஆனால் அந்த ஆடைமுறை இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கிறது தேசிய ஒருமைப்பாட்டுக்கு தாக்கம் செலுத்துகிறது  போன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் எந்த அடிப்படையும் அற்றவை.

இலங்கை முஸ்லிம்களின் ஆடைமுறையில் ஏற்பட்ட மாற்றம்தான் இந்த இனவாதப் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் என்பது மாதிரியான ஒரு தோற்றப்பாடு உருவாக்கப்பட்டுவருகின்றது.

இதை சில முஸ்லிம்களும் ஆதரிப்பது ஆபத்தானது.

இந்த இனவாதப் பிரச்சினைக்கும் முஸ்லிம்களின் ஆடைமுறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இந்த இனவாதப் பிரச்சினைக்கும் முஸ்லிம்களில்ஒரு சிலர் மது அருந்துவதற்கும் சம்பந்தமில்லை.

இது எமது சமூகத்தின் உள்வீட்டுப் பிரச்சினைகள்இவைகளுக்கு தீர்வு காண்பது நம் சமூகக்கடமை.
ஆனால்,  இவைகளை காரணம் காட்டி இரவோடு இரவாக ஒரு ஊரையே எரித்துவிட்டு செல்வதை சிலர்நியாயப்படுத்த முயற்சிப்பதற்கு ஒரு போதும்,  அனுமதிக்கக் கூடாது.

இலங்கை முஸ்லிம்கள் இலங்கைச் சூழலுக்கு ஏற்றவகையில் தமது ஆடைமுறையை மாற்றிக்கொ ள்வது குறித்து சிந்திக்க வேண்டும்.

அதன் மூலம் ஒரு சில ஆடைமுறையில் இருக்கும் அசெளகரியங்களால் இஸ்லாம் குறித்து ஏனைய சமூகத்தவர்கள் கொண்டிருக்கும் தப்பபிப்ராயங்களை இல்லாமல் செய்ய முயற்சிக்க வேண்டும்.

நம் சகோதரர்கள் மது அருத்துவதை  நிறுத்த வேண்டும்.

அதற்கு காரணம் மது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று என்பதாக இருக்கவேண்டும்.

மாறாக முஸ்லிம்களில் ஒரு சிலர் மது அருந்துவதால்தான் முஸ்லிம்களின் சொத்துக்களை அழிப்பதற்கு காரணம் என்றோ,  முஸ்லிம்கள் அரேபிய ஆடை அணிவதுதான்இ வ்வளவு பிரச்சினைக்கும் காரணம் என்ற ,  தோற்றபாட்டை உருவாக்கவோ நாம் ஒரு போதும்இடமளிக்கக் கூடாது.

2 comments:

  1. Well said brother Safwan Basheer.

    ReplyDelete
  2. Our traditional dresses such as saree,salwar,sarong, trousers etc are polite and suit us well. As burqa is used by some robbers and criminals,we had better avoid it in countries like Sri Lanka.

    ReplyDelete

Powered by Blogger.