Header Ads



இது ஒரு முடிவுரை அல்ல, தொடர்கதை


இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வண்முறைகள் என்பது இன்று நேற்று தற்செயலாக உருவானதொன்றல்ல மாறாக இது அன்று முதல் இன்று வரை இந்த நாட்டை ஆட்சி செய்து வரக்கூடிய அத்தனை தலைவர்களாலும் கட்சிகளாலும் அவ்வப்போது அவர்களின் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய அல்லது ஆடசியைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டிய தேவைகள் ஏற்படுகின்ற போதெல்லாம் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் காலா காலமாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டு வரக்கூடிய ஒன்றாகும்.

எப்பொழுதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு தங்கள் ஆட்சியைத் தக்கவைத்து கொள்வதற்கு அல்லது ஆட்சியை அடைந்து கொள்வதற் அல்லது தங்கள் பிரச்சினைகளை மூடி மறைப்பதற்கு தேவை ஏற்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் அவர்கள் பயன்படுத்தும் ஒரே உபாயம் இனவாதமேயாகும் என்பதுதான் நமது இலங்கை அரசியலின் நீண்டகால அரசியல் வரலாற்று உண்மையாகும் 

முப்பதாண்டு காலம் இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்ததனால் அக்காலப்பகுதியில் மாத்திரம் அரசியல்வாதிகளால் தங்களது இனவாதத்தினை நம்பக்கம் செலுத்துவதற்கான எந்தவொரு தேவைப்பாடோ அல்லது அதற்குண்டான சந்தர்ப்ப சூழ்நிலைகளோ இருக்கவில்லை ஆதலால் அக்காலப்பகுதியில் அந்தப் பணியை ஆயுதம் தாங்கிய அரக்கர்களான புலி தீவிரவாதிகள் நம் மக்கள் மீது அரங்கேற்றினார்கள்.

அத்துடன் கண்டி சம்பவங்களுடன் தொடர்புடைய சில தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு விட்டதனாலும் இது பற்றி விசாரனை நடாத்துவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப் படுவதனாலும் இத்துடன் நமக்கெதிரான இந்த இனவாதத்திற்கும் வண்முறைகளுக்கும் முடிவுரை எழுதப்பட்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதென்று நாம்  நினைத்து விடக் கூடாது இவைகள் அனைத்தும் வெறும் கண் துடைப்பு மாத்திரமே என்பதை நமது நீண்டகால அரசியல் வரலாறு தெரிந்த அனைவரும் ஏற்றுக்கொள்வர்.

ஆகவே அரசுத் தலைமைகளுக்கு எப்பொழுதெல்லாம் இவ்வாறான தேவைகள் ஏற்படுகின்றனவோ அவ்வேளைகளில் மீண்டும் இவ்வாறான இனவாதம் அரங்கேற்றப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஆகவே முஸ்லிம்களாகிய நாம் மீண்டும் மீண்டும் விழுந்த  குழியிலேயே விழாது மிகவும் அவதானமாகவும் கவனமாகவும் எந்நேரமும் விழிப்பாக இருப்பதுடன் இதற்கு முடிவுரை எழுதி முற்றுப் புள்ளி வைப்பதற்கும் நம்மை நாம் தயார்படுத்திக் கொள்தல் மிகவும் அவசியமாகும்.


இப்படிக்கு
மௌலவி முனாப் நுபார்தீன்

No comments

Powered by Blogger.