Header Ads



"கிளர்ச்சி செய்யும் அமைச்சர்களை, அரசாங்கத்திலிருந்து நீக்குவது அவசியமானது"

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக கையொப்பமிட்ட சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களை பதவி நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ஒருவரும், இரண்டு பிரதி அமைச்சர்களும் இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுக்கூட்டத்தில், குறித்த அமைச்சர்களை பதவி நீக்குமாறு கோருவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

விரைவில் பிரதமர் ரணில், இது குறித்து ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்க உள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்யும் அமைச்சர்களை அரசாங்கத்திலிருந்து நீக்குவது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த அமைச்சர்கள் தங்களது தீர்மானத்தை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. மக்களின் சொத்துக்களைச் சுரண்டி சூறையாடி களவாடும் அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் என்ன செய்யவேண்டும் என்று சொல்வீர்களா?

    ReplyDelete

Powered by Blogger.