Header Ads



"முஸ்லிம்கள் மீதான வன்முறைகளின் பின்னணியில் பொலிசாரும், அரசியல் வாதிகளும் இருந்தமை அம்பலம்"

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட வன்முறைகளின் பின்னணியில் பொலிசாரும், அரசியல் வாதிகளும் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக 'ரொய்ட்டர்ஸ்' செய்தி வெளியிட் டுள்ளது.

பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் வன்முறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள் ளதுடன் மஸ்லிம்கள் மீது தாக்குதல்களையும் நடத்தியமைக்கான சி.சி.ரி.வி. ஆதாரங்க ள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்  அரசியல்வாதிகள் இந்த வன்முறைகளுடன் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் 'ரொய்ட்டர்ஸ்' நிறுவனத்தினால் நேற்று முன்தினம் வெளி யிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிசாருக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரும் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் மதத்தலை வர்களும் சிவில் பிர திநிதிகளும் விசேட அதிரடிப்படையினரால் தாக்கப்படும் சி.சி. ரி.வி. காட்சிகளை தாம் பார்வையிட்டதாகவும் இவ்வாறான தாக்குதல் சம்பவங்களை நேரில் கண்ட சாட்சிகளை தாம் சந்தித்ததாகவும் ரொய்ட்டர்ஸ் ஊடகவி யலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திகன நூர் ஜும்ஆ பள்ளிவாசலைப் பாதுகாத்துக் கொண்டு நின்ற முஸ்லிம்களை கலவரம் அடக்கும் பொலிசார் துரத்தியடிக்கும் சி.சி. ரி.வி. காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை " அவர்கள் எம்மைத் தாக்க வந்தனர். அவர்கள் சத்தமிட் டார்கள். மோசமான வார்த்தைகளைப் பிரயோகித்தார்கள். எங்களை தீவிரவா திகள் போல் பார்த்து "நீங்கள்தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்" என்றும் கூறினார்கள் என விசேட அதிரடிப் படையினரின் செயற் பாடுகளை முஸ்லிம்கள் விபரித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.