Header Ads



அப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்

இனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள்ளது.

கண்டி, திகணையில் போதையில் இருந்த முஸ்லிம் வாலிபர்களின் தாக்குதல் காரணமாக உயிரிழந்த குமாரசிங்க எனும் சிங்கள சாரதியின் மரணத்தை சாக்காக வைத்துக் கொண்டு முஸ்லிம்களுக்கெதிரான பாரிய இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.

இம்மாத ஆரம்பத்தில் நடைபெற்ற குறித்த வன்முறை வெறியாட்டங்களில் சுமார் 900 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை முஸ்லிம்கள் இழந்திருந்தனர்.

அத்துடன் கண்டி, திகணை நகரம் முற்றாக நொறுக்கப்பட்டு முஸ்லிம்களின் கடைகள் இனவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. அவ்வாறு தீக்கிரையாக்கப்பட்ட கடையொன்றுக்குள் சிக்கி மூச்சுத் திணறி, குமாரசிங்கவின் சம்பவத்துடன் எந்தவகையிலும் தொடர்பில்லாத அப்துல் பாசித் எனும் இளைஞன் உயிரிழந்திருந்தார்.

அவரது சகோதரர் பயாஸ் சம்சுத்தீனும் தீக்காயங்களினால் பாதிக்கப்பட்டு இன்றுவரை மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

பயாஸ் சம்சுத்தீன் குடும்பத்தினா் தங்கள் குடும்பத்தின் திறமைமிகு மாணவன் அப்துல் பாசித்தை இழந்தது மாத்திரமன்றி,வருமானத்துக்கு வழியாக இருந்த வர்த்தக நிலையம், குடியிருந்த வீடு அனைத்தையும் இழந்து நடுத்தெருவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் நிர்க்கதி நிலை குறித்து கேள்வியுற்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவர் ஐம்பதினாயிரம் ரூபாவை அக்குடும்பத்தினருக்கு அன்பளிப்பாக வழங்க முன்வந்துள்ளார்.

எனினும் தற்போதைய நிலையில் தம்மை விட உயிரிழந்த குமாரசிங்க எனும் சிங்கள சகோதரரின் குடும்பத்தினருக்கே உடனடி உதவிகள் தேவைப்படுவதாக வலியுறுத்திய பயாஸ் சம்சுத்தீன், மேற்குறித்த அன்பளிப்புத் தொகையை சிங்கள சாரதியின் குடும்பத்தினருக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அக்கரைப்பற்று வர்த்தகரும் அதனை ஏற்று ஐம்பதினாயிரம் ரூபா பணத்தை சிங்கள சாரதி குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளார்.

இச்சம்பவம் திகணை பிரதேசத்தில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பயாஸ் சம்சுத்தீன் குடும்பத்தினர் பாதிப்புகளுக்கு மத்தியில் வௌிக்காட்டிய மனிதாபிமானம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

5 comments:

  1. This is what we called ahlaaq

    ReplyDelete
  2. a few hundred racists can destroy so much good things people built for centuries between communities in some minutes. the worst part is no one is able to control them. no wonder we are always a DEVELOPING NATION.

    ReplyDelete
  3. Total stupidity.

    That Kumarasinge family already got more than what they needed.
    This is the "Haq" of Bashid family and they should have taken this.

    ReplyDelete
  4. government gave 500 thousands . many donations from Muslims.

    ReplyDelete
  5. Both the donars would get rewards from Allah, in sha Allah.

    ReplyDelete

Powered by Blogger.