Header Ads



ஹரீஸ் தூக்கப்படுவாரா..?

-Ahamed Safnee-

தனக்கு எதிராக செயற்பட்ட பிரதியமைச்சர் ஹரீஸை உடனடியாக இடைநிறுத்துமாறும், இவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதமர் ரணில் விகரமசிங்க வேண்டிக்கொண்டதற்கு இணங்க ஒழுக்காற்று  நடவடிக்கை எடுக்க முயற்சித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மூக்குடைந்த சம்பவம் ஒன்று 11.02.2018 அன்று அரங்கேறியமை வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதியமைச்சர் ஹரீஸ் அண்மையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சிங்கள பேரினவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களுக்கு எதிராகவும் அன்று சட்ட ஒழுங்குகள் அமைச்சராக இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து போராடிய பிரதியமைச்சர் ஹரீஸ் உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் பிரதமர் கோரியிருந்திருக்கின்றார். அதை நான் மேற்கொள்கின்றேன் சேர் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொலைபேசி ஊடாக அவருக்கு வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்.

இதன் காரணமாகவே குறித்த ஒழுக்காற்று நடவடிக்கை சென்ற 11ஆம் திகதி இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் ”ஹரீஸுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வரும், கட்சியின் செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கூட்டத்தில் பிரேரணை கொண்டு வந்தார். அதன் போது உள்ளிருந்த சில உயர்பீட உறுப்பினர்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு ஆதரவானவர்கள் இக்கருத்தை ஏற்றாலும் சிலர் பிரதியமைச்சர் ஹரீஸுக்கு ஆதரவாக இது சமூகப்பிரச்சினை கண்டி சம்பவம் தொடர்பாக பிரதியமைச்சர் ஹரீஸ் மேற்கொண்டது சரி ஆகவே இதற்கு எதிராக நாம் ஒழுக்காற்று நடவடிக்கையோ அல்லது இடைநிறுத்தமோ மேற்கொள்ளவேண்டிய அவசியமில்லை என தெரிவித்ததால் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களும், நிசாம் காரியப்பரும் அவரை சார்ந்த சிலரும் மூக்குடைந்ததுடன் ஒழுக்காற்று நடவடிக்கை முயற்சியில் தோல்லியடைந்தனர். 

குறிப்பாக ஹரீஸ் அவர்கள் பிரதமர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முஸ்லிம்களுக்கு எதிராகவும் நடைபெற்றுவரும் சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் பிரேரணைக்கு ஆதரவாக செயற்படுவோம் என எச்சரிகை  விடுத்திருந்தார். அது மாத்திரம் இன்றி அண்மையில் பிரதமர் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்பாக ஆராய ஒலுவிலுக்கு விரைந்து அம்பாறைக்கு செல்லாமல் எம்மை ஏமாற்றி விட்டார் என தெரிவித்திருந்ததுடன், அம்பாறை சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு ஒலுவிலுக்கு வருகை தந்த பிரதமருக்கு முன்பாக மிக காரசாரமாக சட்டநடவடிக்கையை எடுக்குமாறு உரையாற்றியதுடன் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் களத்திற்கு விரைந்தவரும் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை கருத்திற்கொண்டே பிரதமர் அமைச்சர் ஹக்கீமிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கோரியிருக்கின்றார். இதை நேரடியாக கையாள முடியாத ஹக்கீம் நிசாம் காரியப்பர் ஊடாக உயர்பீட கூட்டத்தில் இவ்விவாகரத்தை நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளதுடன் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பாகவும் மாத்திரமே பேசப்பட்டது எனவும் தெரியவருகிறது. இந்த உயர்பீட கூட்டத்திற்கு ஹரீஸ் சமூகவளிக்கவில்லையாகினும் அவருக்கு இந்த விடயம் தெரியாது. எனினும் ஹக்கீமின் அண்மைக்கால நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே அவர் இந்த உச்சபீட கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருந்தார் என நம்பகமாக தெரியவருகிறது.

எது எவ்வாறாக இருந்தாலும், இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளுக்கு உடனடியாக குரல்கொடுக்கும் கட்சியாகவும், முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்கவும் துணிந்து செயற்பட வேண்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இன்று எங்கே சென்று கொண்டிருக்கின்றது..? இனத்திற்கு பிரச்சினை வரும் போது குரல்கொடுத்த ஹரீஸை கட்சியை விட்டு வெளியேற்ற நினைக்கும் தலைமை யாருக்கும் பின்னால்? யாரின் நிகழ்ச்சி நிரலுக்கு சென்றுள்ளது என நாம் சிந்திக்க வேண்டும்! அத்துடன் இவ்விவகாரம் தொடர்பாக பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் தக்க தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் அல்லவா..!! 

13 comments:

  1. இந்த மனிதர் தான் அன்று அம்பாறை பள்ளித்தாக்குதல் சம்பவத்துக்கு தலைநிமிர்ந்து காஃபீர்கள் எதிர்க்க எதிர்க்க முன்னோக்கி சென்றார்.அல்லாஹ் இவருக்கு மென் மேலும் தைரியத்தை செய்வானாக ஆமின்!நான் எந்த கட்சியும் சாராதேவன் ஆனால் இவரின் வீரத்தை பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  2. Mmmm if this is a true news..

    Ranil is exposing his reality and
    Our so called leaders prove that they have no back bones and ....

    ReplyDelete
  3. ரணிலின் சேவனாக ஹக்கீம் காணப்படுகின்றார் .

    ReplyDelete
  4. இப்பயாவது புரிகிறதா எங்கள் கட்சி எதைநோக்கி பயணிக்கிரத்தண்டு, அதன் இயக்குனர்கள் யாரென்று. முஸ்லிம்களுக்கென்று SLMC சும்மா பெயருக்குத்தான். அதன் நடவடிக்கை ஜனாதிபதிக்கும் பிரதமருமருக்கும் ஆமாம், ஓமோம் தான்.

    ReplyDelete
  5. முஸ்லீம் காங்ரஸ் கட்சியினர் யு.என்.பி
    கட்சி முலமே எம்பியாக தெரிவு செய்யப்
    பட்டவர்கள். இதன் மூலம் அமைக்கப்பட்ட அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளையும்பெற்று
    அதன்.அத்தனை சுகபோகங்களையும்
    அனுபவித்து வருபவர்கள் ரணில் விக்கிரம சிங்கா அவர்களின் முற்று
    முழுதான சிபார்சுடன்தான் இவரகள்
    அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டவர்கள்.எனவே எவ்வாறு இவர்கள் ரணில் அவர்களை
    ஏசலாம் பேசலாம்? அரசங்கத்தையும்
    அமைச்சர் பதவிகளையும் துறந்துதான்
    இவர்கள் கதைக்கவேண்டும். இதைத்தான் நாங்கள் அப்போது இருந்து சொல்லி வருகின்றோம் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டு சுதந்திரமாக தனது
    சமூகத்துக்கெதிராக முன்னெடுக்கப்படும் அநியாயத்தையும்
    அநீதிகளையும் பற்றி வாய் திறகக்க
    முடியாமல் நமது முளு சமூகத்தையும்
    ரயூப் ஹக்கீம் அடகு வைத்துள்ளார்
    என்பதற்கு இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும் என்பது பற்றி
    முஸ்லீம்சமூகம் சிந்திக்கவேண்டும.

    ReplyDelete
  6. அரசியல் நயவஞ்சகத்தில் கைதேர்ந்தவர்கள் அல்லாஹ்வின் பெயரால் அதிகாரத்துடனும் பணச் செல்வாக்குடனும் எல்லாவற்றுக்கும் மேலாக தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்ளவும்தான் முன்னிலையில் இருப்பார்கள். அவர்களை சமூகம் இனம்கண்டு அதற்குரிய பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  7. முஸ்லீம் காங்ரஸ் கட்சியினர் யு.என்.பி
    கட்சி முலமே எம்பியாக தெரிவு செய்யப்
    பட்டவர்கள். இதன் மூலம் அமைக்கப்பட்ட அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளையும்பெற்று
    அதன்.அத்தனை சுகபோகங்களையும்
    அனுபவித்து வருபவர்கள் ரணில் விக்கிரம சிங்கா அவர்களின் முற்று
    முழுதான சிபார்சுடன்தான் இவரகள்
    அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டவர்கள்.எனவே எவ்வாறு இவர்கள் ரணில் அவர்களை
    ஏசலாம் பேசலாம்? அரசங்கத்தையும்
    அமைச்சர் பதவிகளையும் துறந்துதான்
    இவர்கள் கதைக்கவேண்டும். இதைத்தான் நாங்கள் அப்போது இருந்து சொல்லி வருகின்றோம் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டு சுதந்திரமாக தனது
    சமூகத்துக்கெதிராக முன்னெடுக்கப்படும் அநியாயத்தையும்
    அநீதிகளையும் பற்றி வாய் திறகக்க
    முடியாமல் நமது முளு சமூகத்தையும்
    ரயூப் ஹக்கீம் அடகு வைத்துள்ளார்
    என்பதற்கு இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும் என்பது பற்றி
    முஸ்லீம்சமூகம் சிந்திக்கவேண்டும.

    ReplyDelete
  8. ஹக்கீம் மானமுள்ள, சாணக்கியமுல்ல தலைவனாக இருந்தால்,

    கிழக்கு மாகாணத்தையாது தனக்கு கீழ் கொண்டு வந்து இருக்கவேண்டும்.

    இல்லாவிட்டால் கட்சியை விட்டே ஓடியிருக்க வேண்டும் .

    ReplyDelete
  9. அல்லாவுக்கு அடுத்த படியாக இந்த நாட்டில் நல்லாட்சி அரசாங்கத்தை வழிநடத்திச் செல்லும் ஜனாதிபதி , பிரதமர் மீதும் ,பாதுகாப்புப் படை மீதும் நம்பிக்கை வைத்து முஸ்லிம் சமூகத்தின் இருப்பையும் பாதுகாப்பையும் ஒப்படைத்து இருந்தோம் ஆனால் அரசாகமும் பாதுகாப்பு படையும் முஸ்லிகளுக்கு உச்சப் பாதுகாப்பை வழங்க தவறிவிட்டது . என்று முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சரும்மான சட்டத்தரணி HMM ஹரிஸ் கடந்த 2018.03.07 இல் பாராளுமன்றத்தில் துணிச்சலுடன் ஆற்றிய உரையானது முஸ்லிம் சமூகத்துக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளதுடன் வரலாற்ப் பதிவாகவும் அமைந்துள்ளது.

    ReplyDelete
  10. அல்லாவுக்கு அடுத்த படியாக இந்த நாட்டில் நல்லாட்சி அரசாங்கத்தை வழிநடத்திச் செல்லும் ஜனாதிபதி , பிரதமர் மீதும் ,பாதுகாப்புப் படை மீதும் நம்பிக்கை வைத்து முஸ்லிம் சமூகத்தின் இருப்பையும் பாதுகாப்பையும் ஒப்படைத்து இருந்தோம் ஆனால் அரசாகமும் பாதுகாப்பு படையும் முஸ்லிகளுக்கு உச்சப் பாதுகாப்பை வழங்க தவறிவிட்டது . என்று முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சரும்மான சட்டத்தரணி HMM ஹரிஸ் கடந்த 2018.03.07 இல் பாராளுமன்றத்தில் துணிச்சலுடன் ஆற்றிய உரையானது முஸ்லிம் சமூகத்துக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளதுடன் வரலாற்ப் பதிவாகவும் அமைந்துள்ளது.

    ReplyDelete
  11. first of all you have to trace the truthfulness of the article and then let your comments...

    ReplyDelete

Powered by Blogger.