Header Ads



இலங்கையில் சிவசேனா, மௌனம் கலைவாரா மனோ

-Azeez Nizardeen-

சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் கடந்த சில தினங்களாக முஸ்லிம்கள் விடயமாக தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்ட கருத்துக்களுக்கான நியாயங்களை மீண்டும் பதிவிட்டிருக்கிறார். (நேற்று அவரின் பதிவுகளுக்கு நான் இட்ட பின்னூட்டங்களை நீக்கியுள்ளார்.)

முஸ்லிம்களின் ஆடை கலாசாரம் தொடர்பான அவரது இனவாத நிலைப்பாட்டை பல ஆண்டுகளுக்கு முன்னரே நான் உணர்ந்தவன்.

90களில் மலையகத்தில் பதுளை தமிழ் மகளிர் கல்லூரியில் முஸ்லிம் பிள்ளைகள் ஹிஜாப் மற்றும் நீண்ட காற்சட்டை அணிவது தொடர்பான பிரச்சினை எழுந்தபோது முஸ்லிம் மாணவிகளின் ஹிஜாப் ஆடைக்கு எதிரான நிலைப்பாட்டையே அவர் கொண்டிருந்தார்.

அன்று இந்த பிரச்சினை தொடர்பாக கொழும்பு கொம்பனித் தெருவிலுள்ள கலாநிதி விக்ரமபாகு அவர்களின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலில் எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் கூட ஏற்பட்டது.

தலையை மூடுவதை இந்துக்கள் அபசகுணமாக கருதுவதாக மனோ கருத்து தெரிவித்தார்.

அப்போது அதே பாடசாலையில் கடமையாற்றும் கிறிஸ்த்தவ கன்னியாஸ்திரி தலையை மூடி ஆடையணிந்திருக்கின்றாரே  முஸ்லிம்கள் தலையை மூடினால் மட்டுமா உங்களுக்கு அபசகுணம் என நான் கேள்வி எழுப்பினேன்.

இந்தியாவில் வடநாட்டிலுள்ள இந்துக்கள் தலையை மூடி ஆடையணிவதை தமது கலாசாரமாக கொண்டிருப்பதை எடுத்துக்காட்டி இவரின் பொய்க் குற்றச்சாட்டை எதிர்த்து வாதிட்டேன்.

வாக்கு வாதம் கடுமையாக மாறியது. நிலைமையின் விபரீதத்தைப் புரிந்துகொண்ட கலாநிதி விக்ரமபாகு அவர்கள், இரண்டு பக்கத்தையும் சமாதானப்படுத்தியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

ஆனால் அண்மையில் மனோ கணேசன் முஸ்லிம்கள் தொடர்பாக வெளியிட்டு வரும் கருத்துக்களைப் பார்க்கும் போது அதே பழைய மனோ கணேசன் சகவாழ்வு என்ற அமைச்சர் பதவிக்குள் ஒளிந்துக் கொண்டு முஸ்லிம்களுக்கெதிராக இனவாதக் கருத்துக்களை பதிவிட்டு வருவதை புரியக் கூடியதாக இருக்கிறது.

இனங்களுக்கிடையில் சகவாழ்வுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இனவாதத்தைக் கிளறும் கருத்துக்களை வெளியிடுவதற்கோ, உபதேசம் என்ற போர்வையில் ஓர் இனத்தினரின் உள்ளங்களை நோகடிக்கும் கருத்துக்கைளை பதிவிடுவதற்கோ எவ்வித உரிமையுமில்லை என்பதை கூறிவைக்க விரும்புகிறோம்.

அண்மையில் பாராளுமன்றத்தில் முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பாகவும் முஸலிமகளின் ஆடை கலாசாரம் தொடர்பாகவும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் விதமாக உரையாற்றிய ஹர்ஷ டீ சில்வாவினதும், பிமல் ரத்னாயக்கவினதும் கருத்துக்களை நிதானமாக செவிமடுக்குமாறு மனோ முஸ்லிம்களை வேண்டியிருக்கிறார்.

இவர்கள் இருவரினதும் கருத்து கண் மூடித்தனமான ஆதாரமற்ற ஒருபக்கச் சார்பான கருத்து என்பதற்கான தகுந்த பதிலை அதே பாராளுமன்ற அமர்வில் முஜீபர் றஹ்மான் வழங்கியும் இருக்கிறார்.

அப்படியான ஒரு முஸ்லிம் அடிப்படைவாதம் இலங்கையில் இருப்பதாக மனோ கணேசன் கருதுவதாக இருந்தால் அதற்குரிய தகுந்த ஆதாரங்களை அவர் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும், கொடுமைகள் நிகழ்த்தும் முஸ்லிம்கள் மீது அட்டகாசங்களை கட்டவிழ்த்து விடும் சிவசேனா அமைப்பு  தற்போது இலங்கையில் செயற்பட ஆரம்பித்திருக்கிறது.

வன்முறைக்கு வரலாறு படைத்த இந்த சிவசேனா அமைப்பு பற்றி வாய் திறக்காத மனோ கணேசன் இல்லாத முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியிருப்பதன் நுண் அரசியல் எங்களுக்குப் புரியாமல் இல்லை.

வடக்கு கிழக்கு மக்களின் இனஉறவுக்கு அச்சுறுத்தலாக மாற இருக்கும் ஓர் அடிப்படைவாதம் உருவாகியிருக்கும் நிலையில், இல்லாத ஒன்றை தேடும் ஆராய்சியில் மனோ கணேசன் இறங்கியிருக்கிறார்.

எது எப்படியோ,

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் சிவசேனா அமைப்பு தொடர்பாக மனோ கணேசன் அனுஷ்டிக்கும் கள்ள மௌனத்தைக் கலைந்து தனது முகப்புத்தக பக்கத்தில் கருத்துரைக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

12 comments:

  1. சபாஸ்! அஸீஸ் நிஸார்தீன்.

    ReplyDelete
  2. Thanks for letting us know about this guy. He and some other MPs try die hard to prove that Muslims are fundamentlists. We should be aware of these people who make baseless allegations for Muslims.

    ReplyDelete
  3. இனவாத கட்டுரை

    ReplyDelete
  4. சிங்கள இனவாதிகளை விட மோசமான இனவாதி இவன்.BBS ஞானசாரவை இவனுடைய அமைச்சுக்கு அழைத்து இவன் போட்ட வேடம் இவன் முகத்திரையை முற்றாக கிழித்துவிட்டது. இவன் அமைச்சிற்கு வந்த ஞானசார தமிழர்களுக்கும் முஸ்லிம் அடிப்படைவாதத்தால் பிரச்சினையென்று ஒரு படத்தை ஒட்டிவிட்டு சென்றான் அந்த படத்தை அழகாக இயக்கி ஏதோ ஞானசாராவிற்கு பயபடாதவனை போல் விம்பத்தை உருவாக்கியவன் தான் இந்த மனோ கணேசன் எனும் தமிழ் இனவாதி

    ReplyDelete
  5. Dear Writer,
    Thanks for recognising who deliberately infringing racism in order to get Sinhala and Tamil youth against minority Muslim.

    Please share all incident about all politician like him to be careful in future.

    ReplyDelete
  6. மஉண்மை சொன்னால் இனவாதியா?

    உங்களை பற்றி நீங்களே புளுகி கொண்டிருக்காதீர்கள். மற்றவர்கள் தான் சொல்லவேண்டும்.
    சிலர் முகத்துக்கு நேர் சொல்லுவார்கள், சிலர் முதுகுக்கு பின்னால் கதைப்பார்கள்.


    ReplyDelete
  7. அஜன்,சந்திரபால்,நிலவன் மார்க்ஸ்,இன்னும் இவர்கள் போன்றவர்களின் இஸ்லாம், முஸ்லிம் சமூகம் என்பவற்றிற்கெதிராக பேசும் கருத்துக்களை பிரசுரிக்காதீர்கள். அவர்களின் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சிந்தனைகளை வளர்க்க இடம் கொடுக்க வேண்டியதன் தேவை என்ன? அப்படி செய்தால் அது இனவாதம் என சிந்திக்காதீர்கள்.தன் சமூகத்தின் நலனுக்காக நடவடிக்கை எடுப்பது ஆதரவாக இருப்பது இனவாதம் ஆகாது . அல்லாஹ்வின் தூதரின் தன் சமூகத்தை நேசிப்பது இனவாதமாகுமா எனக் கேட்கப்பட்ட போது இல்லை தன் சமூகம் அடுத்த சமூகத்திற்கு அநீதி இழைக்கும் போது அதற்கு ஆதரவாக இருப்பதுதான் இனவாதம் என்றார்கள்.

    ReplyDelete
  8. @GTX,
    நீங்கள் சொல்வது உண்மை என வைத்தாலும் இப்போ உங்களுடைய ஆசாத் சாலி தலைமையில் பனிரெண்டு பேர் கொண்ட குழு BBSஐ சந்தித்து அவர்களுக்கு எதிரான வழக்குகளையும் வாபஸ் வாங்குவதாக கூறினார்களே அதிகை நீங்கள் எவ்வாறு பார்க்கிண்றீர்கள். முதலில் உங்கள் இனத்துக்கான விடிவை உங்கள் தலைமையிடம் தேடுங்கள் அல்லது அவ்வாறான தலைமையை தேடுங்கள். அதை விடுத்து மற்றவர்கள் மீது பழி சுமத்துவது மேலும் உங்களை பின்னோக்கியே கொண்டு செல்லும்

    ReplyDelete
  9. @Abu Zeena,
    ஆமாம் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு வீதம் முஸ்லிம்களுக்கே பொருந்தும். காலம் காலமாக தங்கள் இருப்பை பெருபிக்கவும் அடுத்தவன்இருப்பை கேள்விக்குறியாகவும் எது நேர்மை எது நியாயம் என அறிந்து கொண்டும் எதை இஸ்லாம் போதிக்கிறது அதட்கு எதிராக நின்று கிட்டும் உங்களுடைய இனத்தின் விருத்திக்காக ஜால்ரா போட்டு கொண்டும் இனவாத சிந்தனையில் ஊறிப்போய் இருப்பவர்களும் தத்துவங்கள் பேச தகுதி அற்றவர்கள்

    ReplyDelete
  10. Dear Mano Ganesan,

    1.மலையக மாவட்டங்களில் பெரும்பாலும் பதுளை மாவட்டத்துல சுமார் இறுதி 15 வருடங்களில் மாத்திரம் 60000 பேர் இஸ்லாமிய மதம் மாற்றப்பட்டார்களே அதட்கு உங்களின் பதில் என்ன?
    2.புனித இஸ்லாத்தை ஒரு வியாபாரமாக மாற்றி பரப்பும் செயல்களில் ஈடுபடும் அரபு நாட்டு கயவர்களுடன் கைகோத்து நிட்கும் உள்நாட்டு இனவாத கபோதிகளுக்கு முஸ்லிம்களின் உரிமை பற்றி பேச தகுதி இல்லை
    3.வெவ்வேறு இனத்தவர்கள் தங்கள் முகத்தை பகுதியாகவே மறைகின்றார்கள் முழுமையாக இல்லை. உதாரணமாக முழுமையாக மறைத்தால் பாடசாலையில் மாணவிகளை எப்பிடி ஆசிரியரால் இனம் கண்டு கொள்ள முடியும் மட்டம் வாக்கு செலுத்தும் போதும் பிற இடங்களிலும் எவ்வாறு இவர்கள் குடியிருக்கும் நாட்டின் இறைமையை காப்பார்கள்?

    ReplyDelete
  11. Anusath Chandrabal,

    அவர்கள் பலவந்தமாக இஸ்லாத்திற்கு மாற்றப்பற்றிருக்க மாட்டார்கள். புனித இஸ்லாத்தை படித்து, உண்மையை விளங்கி இஸ்லாத்தை அவர்களது வாழ்வியலாக ஏற்றிப்பார்கள். அவர்கள் அதிஷ்டசாலிகள். இவுலக வாழ்விற்கு பிறகு அவர்களுக்கு நிரந்தர சுவனம் உண்டு.

    ReplyDelete
  12. இலங்கையின் தேசீய ஆடையை தாங்கள் எப்போதும் அணியாதது ஏன்? ஏனைய மதத்தவர்கள் மேற்கத்தைய ஆடைகளை அணிந்து இந்நாட்டின் தேசீயத்தை சீரழிக்கும் செயலை கண்டிக்காதது ஏன்? கோட் அணியும் பிரதமரை விமர்சிக்காதது ஏன்? இப்படிப்பட்ட முஸ்லிம்கள் இதுவரை அளித்த வாக்குகளை உங்களால் புறக்கணிக்க முடியுமா?

    ReplyDelete

Powered by Blogger.