Header Ads



கலவரங்கள் ஏற்படும் நிலைமையில், ஓதுவதற்க்கு நபியவர்கள் காட்டி தந்த துஆ.

اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ‪ ‬الْحِسَابِ اَللّهُمَّ اهْزِمْ
‎الأَحْزَابَ اَللّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ

அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி[B], ஸரீஅல் ஹிஸாபி[B], அல்லாஹும்மஹ்ஸிமில் அஹ்ஸாப்(B], அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வஸல்ஸில்ஹும்.

இதன் பொருள் :

இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக!

ஆதாரம்: புகாரி 2933, 4115

அல்லது

‎اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ‪ ‬السَّحَابِ وَهَازِمَ الأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ

அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(B] வமுஜ்ரியஸ் ஸஹாபி(B] வஹாஸிமல் அஹ்ஸாபி(B] இஹ்ஸிம்ஹும் வன்ஸுர்னா அலைஹிம்.

இதன் பொருள் :

இறைவா! வேதத்தை அருளியவனே! மேகத்தை நடத்திச் செல்பவனே! எதிரிகளைத் தோல்வியுறச் செய்பவனே! இவர்களைத் தோல்வியுறச் செய்! எங்களுக்கு உதவி செய்!

ஆதாரம்: புகாரி 2966, 3024

1 comment:

  1. நண்பரே நபியவர்கள் இன்னொரு துஆவையும் சொல்லி தந்துள்ளார்கள். மேலும் அல்லாஹ் எதரிகளை எதிர்தது போராடச்சொல்லியுள்ளானே தவிர துஆ மாத்திரம் செய்தால் போதும் என்று சொல்லவில்லை. மேலும் அல்லாஹ் கோழைகளை நேசிப்பதில்லை.

    6370. முஸ்அப் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
    (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் இந்த ஐந்து விஷயங்களிலிருந்தும் பாதுகாப்புக் கோருமாறு கூறி, அவற்றை நபி(ஸல்) அவர்கள் தெரிவித்ததாகக் கூறுவார்கள். (அவை:) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் புக்லி, வ அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க அன் உறத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ற். (பொருள்: இறைவா! உன்னிடம் நான் கருமித் தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)

    ReplyDelete

Powered by Blogger.