Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையும், ரணிலிடம் சில கேள்விகளும்..!

வெளி மாவட்டங்களிலில் இருந்து வந்தவர்கள் தான்  தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்றால்  அவர்கள்  யார் ?

வெளிநாட்டவர்களா ? அல்லது வேற்றுக் கிரகவாசிகளா ?

இல்லையே அவர்கள்  எமது நாட்டவர்கள்தானே ? 

அவர்கள்  திட்டமிட்டு முஸ்லிம்களை அழிக்க குழுவாக நாடு முழுவதும் செயற் படுகின்றார்கள் என்றால்  அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்களேன் ?

இருவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை  பேராபத்தாக மாறி உயிர்களையும், உடமைகளையும்  பலி எடுக்கும் அளவிற்கு ஊடுருவி நாட்டின் சகல பிரதேசங்களிலும் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டிருக்கும்  நிலையில் உங்கள்  அரசாங்கத்தினை பதவிக்கு அமர்த்தி அழகு பார்த்த முஸ்லிம்களுக்கு நீங்கள்  என்ன  கைமாறு   செய்யப் போகின்றீர்கள் ?

பெரும்பாலான  சிங்கள மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக 2015 ஆண்டு ஜனாதிபதித்  தேர்தலில் வாக்களித்தமைக்கான பரிசா  இன்று இடம் பெறும்  நிகழ்வுகள் ?

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் எப்போதாவது அரச எதிர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டதுண்டா ?

சுதந்திர இலங்கையில் அமையப்பெற்ற ஆட்சி முழுவதும் முஸ்லிம் தரப்பு  ஆளும் கட்சிகளில் பக்கம் தானே இருந்தனர் ?

அரச எதிர்ப்பு என்பது முஸ்லிம்களுக்கு தெரியாதே!!!! 

அப்படியாயின் ,,,,,,

நிலைமை மிக மோசமாகிக் கொண்டிருக்கும் நிலையில் எங்களால் முடிய வில்லை அல்லது அவர்கள்தான் இதனை  மேற்கொள்கின்றார்கள்   என்ற கதையினை அரசே கூறி னால்  இதனை கட்டுப்படுத்தும் அதிகாரம் யாரிடம்  இருக்கு ???

எம்.  எல்.  பைசால்  காஷிபி




1 comment:

  1. ரணில் முஸ்லிம்களுக்கு உதவி செய்வார் என்று நம்புவது ஒரு ஏமாளித்தனமாகும்

    ReplyDelete

Powered by Blogger.