Header Ads



"இப்படிப் பேசுவதும், பதிவிடுவதும் இனவாதத்தை ஆதரிக்கும் செயல்"

-Kalai Marx-

இனவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு பலியாகாதீர்கள் தமிழர்களே!

//வன்னியில் இறுதி யுத்தம் நடந்த போது "அவர்கள்" (முஸ்லிம் மக்கள்) வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதனால், "நாங்கள்"(தமிழ் மக்கள்) ஏன் "அவர்களுக்காக" குரல் கொடுக்க வேண்டும்?//

இப்படிப் பேசுவதும், பதிவிடுவதும் இனவாதத்தை ஆதரிக்கும் செயல் ஆகும். எல்லாவற்றுக்கும் முதலில், மக்களை இன அடிப்படையில் "நாங்கள்", "அவர்கள்" என்று பிரிப்பது இனவாதத்தின் பாலபாடம் ஆகும்.

- அப்போது நடந்த இறுதி யுத்தம், அமெரிக்கப் பாணியில் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று அறிவிக்கப் பட்டு தான் நடந்தது. அதனை அமெரிக்காவும் ஆமோதித்தது என்பது வேறு விடயம்.

- இறுதிப் போரின் வெற்றியானது புலிகள் இயக்கத்திற்கு எதிரான வெற்றியாக கருதப் பட்டது. பொது மக்களில் பெரும் பகுதியினர், எப்படியாவது போர் முடிந்தால் சரி என்றும் நினைத்தனர்.

- அதை "தமிழினத்திற்கு எதிரான வெற்றி" யாக எடுத்துக் கொண்டவர்கள் இனவாதிகள் மட்டுமே. அது ஒட்டுமொத்த சிங்கள, முஸ்லிம் மக்களின் கருத்து அல்ல.

- பெரும்பாலான சிங்கள, முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாது, குறிப்பிட்டளவு தமிழர்கள் கூட, புலிகள் தோற்கடிக்கப் படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இருப்பினும், மக்கள் இழப்புகள் குறித்துக் கவலைப் பட்டவர்கள் மூவினங்களிலும் இருந்தனர்.

- தென்னிலங்கை ஊடகங்கள் எல்லாம் போர் நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பொது மக்கள் இழப்பை புறக்கணித்தன. கடுமையான செய்தித் தணிக்கை விதித்த அரசின் உத்தரவுக்கிணங்க மிகக் குறைவான எண்ணிக்கையை காட்டின.

- பொதுவாக ஊடகங்கள் சொல்வதை நம்பும் மக்கள் தான் அதிகம். பெரும்பாலானவை பிரச்சார ஊடகங்கள் தான். அமெரிக்கா முதல் இலங்கை வரை இது தான் யதார்த்தம். தமிழர்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

- ஆகவே, "சிரித்தார்கள்... வேடிக்கை பார்த்தார்கள்.." என்று ஒட்டு மொத்த (சிங்கள, முஸ்லிம்) மக்களின் மீதும் பழிபோடுவது தவறானது. இது இனவாதிகளின் அரசியல் அபிலாஷைகளை கருத்தில் கொண்டு பரப்பப் படுகின்றது. இதைத் தான் சிறிலங்கா பேரினவாத அரசும் எதிர்பார்க்கிறது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சும்மாவா சொன்னார்கள்?

5 comments:

  1. புலிகள் தவறு செய்து அதை நியாயமென்று சில தமிழ் சகோதரர்கள் வாதாடுவது பெரும் அறியாமை தன்மை.சிங்களவர்களின் பெரும்பாண்மையான மக்கள் சமாதான விரும்பிகள் ஒரு சில சிங்கள மக்கள் செய்த தவறை வைத்து இந்த குட்டி நாட்டை பிரித்து தா என்று ஆயுதமுலம் போராடி ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று விட்டு நியாயம் என்று சொல்லுவது எந்த விதத்திலும் ஏற்க முடியாது.இலங்கை நாடு தமிழர்,சிங்களவர் ,முஸ்லிம்கள் என்று அனைவருக்கும் சொந்தமான நாடு அதை ஒரு குழு பிரிச்சி தாங்கள் என்று போராடுவதில் என்ன நியாயம்?
    முஸ்லிம்களுக்கும் கண்டி பிரதேச பிரச்சினையால் முஸ்லிம்களுக்கு அதிக இழப்பு தான் அதட்கு நாங்கள் ஒருநாளும் யாரையும் கொல்லவுமில்லை,நாட்டை பிரிச்சி தா என்று கேட்கவுமில்லை.எங்களுக்கு பிரச்சினை இருந்தால் நாங்கள் நல்ல முறையில் அணுகி தான் அதை தீர்க்க வேண்டும்.நாங்கள் எதிரிகளின் உயிர் உடமை கூட உயர்ந்தது என்று மதிக்கும் மக்கள்.எங்களுக்கு ஒன்றுக்கு ஆயிரம் என்று கொல்ல முடியும் அதை எங்கள் மதம் இலகுவாக ஏற்கவில்லை ஏனெனில் கொலை பாவத்திலும் பாவமான செயல்.

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் யாழ்பாணத்திலிருந்து விரட்டப்பட்ட போது .....

    ReplyDelete
  3. காளி மக்ஸ் அண்ணாச்சி,
    இறுதிப்போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டு வகைதொகையினர் காணாமலாக்கப்பட்டனர் என்பதை இன்று உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதற்காக தமிழர்கள் நிற்கதியான நிலையில் கூட போராடினர். உலகத்தின் கவனத்தை ஈர்க்க பனியிலும் மழையிலும் போராடினர். அப்போது சிறீலங்கா அரசைக்காப்பாற்ற அரபு நாட்டுத்தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க ஸ்ரீலங்காவில் இருந்து முஸ்லிம் பிரதிநிதிகளை அனுப்பி முண்டு கொடுத்தது யார்?
    இன்று ஸ்ரீலங்கா அரசு கூட போர்க்குற்ற்ம் நிகழ்ந்திருக்கலாம் என ஒத்துக்கொள்ளும் நிலையில் உள்ளது.
    அது மட்டும் அல்லாது ஸ்ரீலங்காவின் ராணூவ அதிகாரி போரை முடிவுக்குக்க்கொண்டுவர முஸ்லிம்களே உளவுபார்த்தார்கள் என ஒப்புக்கொண்டுள்ளார்!
    நீங்கள் என்னதான் உதவி செய்தாலும் சிங்களவருக்கு உங்களைப் பிடிகாது என்பதுதான் உண்மை!
    இனிமெலாவது எரியும் வீட்டில் கொள்ளி புடுங்கும் விளையாட்டை நிறுத்துங்கள்!

    முஸ்லிம்கள் யாழில் இருந்து விரட்டப்பட்டத்ற்கு புலிகள் சொன்ன நியாயம் இன்று ஸ்ரீலங்கா ராணுவ உயர் அதிகாரியின் வாயால் நிரூபிக்கப்பட்டு விட்டது என்கிறார்கள் புலி ஆதரவாளர்கள்!
    பார்த்தீர்களா சிங்களவர்கள் இன்று நீங்கள் செய்த உளவு வேலையை அழுவது போல் சொல்லி உலகத்துக்கு காட்டிக்கொடுத்து விட்டார்கள்!

    ReplyDelete
  4. @Bulli Bulli,
    இன்னும் அடி விழ விழ சில பல கோரிக்கைகள் தானாக எங்களை அறியாமல் வரும். தமிழர்கள் இதை போல் எத்தனையோ கலவரங்களை சந்தித்திருக்கின்றார்கள். அதில் ஒன்று தான் 1983. உயிரிழப்புகள் 3500 க்கு மேல் ஒரே நாளில். இலங்கையை விட்டு வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை சுமார் 200 000 ஆறு மாதங்களில். சொத்து உடமை இழப்புகள் இன்னும் கணக்கிலேபியுக்கப்படவும் இல்லை அவை எண்ணிலடங்காதவை. எனவே தயவு செய்து இது போன்ற சிறு சிறு கலவரங்களை ஒப்பிட்டு பேசுவதை நிறுத்துங்கள். இதட்கு மேலும் நீங்கள் இப்படித்தான் என்றால் அதட்கு வேறு பெயர் உண்டு.

    ReplyDelete
  5. @Anusath Chandrabal::போங்கடா கொலைகார ரஸ்கொல்கள் பேச்சி வார்த்தைகள் மூலமாக தீர்க்க வேண்டிய பிரச்சினையே சும்மா சண்டையை போட்டு தோல்வி கண்டு இப்ப நாய் குலைக்கிற மாதிரி கத்துர.

    ReplyDelete

Powered by Blogger.