Header Ads



சிங்களவர் போன்று முஸ்லிம்களும், பொறுமையாக இருக்க வேண்டும் - மஹிந்த

சிங்கள மக்கள் பொறுமையாக இருப்பதை போல் முஸ்லிம் மக்களும் பொறுமையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்,நாட்டில் ஏற்பட்டுள்ள இனங்களுக்கிடையேயான அசாதாரண சூழ்நிலைக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை தான், நான் செய்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று -09- வெள்ளிக்கிழமை காலை கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி, சர்வ மதத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

முஸ்லிம் மக்கள் என்னிடம் வேண்டிக்கொண்ட தன் அடிப்படையில் தான் இந்த கலந்துரையாடலில் நான் கலந்துகொண்டேன் என தெரிவித்த அவர் ஒரு மத்தியஸ்தராகவே இங்கு நான் செயல்பட்டதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து அரசு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அமைதியுடனும், பொறுமையுடனும் அனைத்து மக்களும் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

8 comments:

  1. இவன் தான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணம்.இரண்டு முறை ஜனாதிபதி தொழிலை செய்த பிறகு ஒழுங்கா மரியாதையோடு வீட்டில் இருந்து இருந்த இப்படி எல்லாம் பிரச்சினை வந்து இருக்காது.இவன் திரும்ப ஜனாதிபதியாக வேண்டும் என்ற காரணத்தால் தான் பாதி பேர் இவன் பக்கம் மற்ற பாதிமார் மறுபக்கம் இருந்து போராடுகின்றார்கள்.

    ReplyDelete
  2. நடைபெற்று முடிந்த கலவரத்தின்போது யாரு பொறுமையாக இருந்த ? முஸ்லிம்களாகிய நாங்க தானே ! ஏன் மகிந்தா தலைகீழாகா பேசுகிறாய் ?

    ReplyDelete
  3. Iam also rising the same question as Mr. Haleem's saying.

    ReplyDelete

Powered by Blogger.