Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகளின், முக்கிய வேண்டுகோள் இது


கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைக்கு காரணமானவர்களில் இதுவரை கைது செய்யப்படாதவர்களை உடன் கைது செய்யுமாறும் இந்த வன்முறையின் போது கவனயீனமாக செயற்பட்ட பொலிஸாருக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அலரிமாளிகையில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பிற்கு முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரன்ஜித் மத்தும பண்டார, பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். 

இந்த சந்திப்பின் போது முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்தனர். இதன்போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கும் போது,

கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும் இன்னும் பலர் கைது செய்யப்படாமல் உள்ளனர். ஆகவே இவர்களை உடன் கைது செய்ய வேண்டும். இந்த விடயத்தில் துரிதமாக செயற்பட வேண்டும். 

மேலும் வன்முறையினால் சேதமைடைந்த வீடுகள் மற்றும் பள்ளிவாசலுக்கான நஷ்டஈடு வழங்குவதனை துரிதப்படுத்த வேண்டும். 

அத்துடன் இந்த வன்முறையின் போது பொலிஸார் மிகவும் கவனயீனமாக செயற்பட்டுள்ளனர். ஆகவே இது தொடர்பில் விசாரணை செய்து கவனயீனமாக செயற்பட்ட பொலிஸாருக்கு எதிராக  உரிய சட்ட  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்துடன் வன்முறையின் ஏற்பட்ட பகுதிகளின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் விடயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்தனர். 

இதனையடுத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை நன்றாக செவிமடுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்.பிக்களின் கோரிக்கை விடயத்தில் விசேட அவதானம் செலுத்தினார்.

இதனையடுத்து கண்டி சம்பவம் போன்று இனிமேலும் இவ்வாறான வன்முறைகள் இடம்பெறாமல் இருக்க அரசாங்க உரிய வேலைத்திட்டங்களை தயாரிக்க வேண்டும் என முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எம்.எம்.மின்ஹாஜ்

3 comments:

  1. இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் இயந்திரம் ( நீதி மன்றம், போலீஸ், பாதுகாப்பு படை) சரியாக இயங்க வில்லை என்றால் அதட்கான ஒத்துழைப்பை சிறுபான்மை மக்கள் கொடுக்கக் கூடாது. அதை எதிர்த்து, தொடர் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். பொது பல சேனாவோ, பெளத்த மதகுருவோ சட்டத்தை தங்கள் கையில் எடுத்து கொண்டு சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் நடவெடிக்கையை தடுப்பதட்கான நடவடிக்கைளை துரிதப்படுத்தப்பட வேண்டும். வெறுமனே வாக்குறுதிகளை நம்பி முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளை இழந்து இரண்டாம் தர பிரைஜைகளாக வாழமுடியாது. கடந்த 15 வருடங்களாக இலங்கையில் இப்படியான நிலை உருவாவதட்கான முழுப்பொறுப்பும் இந்த முஸ்லீம் எம்பி மாறையும் முஸ்லீம் கட்சிகளுமே சாரும். ஏனெனில் அவர்கள் சரியான அழுத்தத்தை அரசாங்கத்துக்கு கொடுத்து சட்டம் ஒழுங்கு சரியாக அமுல்படுத்த பட்டிருக்க வேண்டும். இனிமேலும் ஒரு சிறுசம்பவம் நடந்தாலும் அதட்கான முழுப்பொறுப்பையும் இந்த முஸ்லீம் எம்பிக்களும் முஸ்லீம் கட்சிகளுமே பொறுப்பெடுக்க வேண்டும். இவர்கள் இன்னும் மக்களை ஏமாற்றுவார்களானால் இவர்களுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்க வேண்டும். அல்லது வீதியில் இறக்கப்பட்ட வேண்டும்.

    ReplyDelete
  2. இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் இயந்திரம் ( நீதி மன்றம், போலீஸ், பாதுகாப்பு படை) சரியாக இயங்க வில்லை என்றால் அதட்கான ஒத்துழைப்பை சிறுபான்மை மக்கள் கொடுக்கக் கூடாது. அதை எதிர்த்து, தொடர் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். பொது பல சேனாவோ, பெளத்த மதகுருவோ சட்டத்தை தங்கள் கையில் எடுத்து கொண்டு சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் நடவெடிக்கையை தடுப்பதட்கான நடவடிக்கைளை துரிதப்படுத்தப்பட வேண்டும். வெறுமனே வாக்குறுதிகளை நம்பி முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளை இழந்து இரண்டாம் தர பிரைஜைகளாக வாழமுடியாது. கடந்த 15 வருடங்களாக இலங்கையில் இப்படியான நிலை உருவாவதட்கான முழுப்பொறுப்பும் இந்த முஸ்லீம் எம்பி மாறையும் முஸ்லீம் கட்சிகளுமே சாரும். ஏனெனில் அவர்கள் சரியான அழுத்தத்தை அரசாங்கத்துக்கு கொடுத்து சட்டம் ஒழுங்கு சரியாக அமுல்படுத்த பட்டிருக்க வேண்டும். இனிமேலும் ஒரு சிறுசம்பவம் நடந்தாலும் அதட்கான முழுப்பொறுப்பையும் இந்த முஸ்லீம் எம்பிக்களும் முஸ்லீம் கட்சிகளுமே பொறுப்பெடுக்க வேண்டும். இவர்கள் இன்னும் மக்களை ஏமாற்றுவார்களானால் இவர்களுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்க வேண்டும். அல்லது வீதியில் இறக்கப்பட்ட வேண்டும்.

    ReplyDelete
  3. All these MPs and ministers should go with a clear project plan to insist the PM to act immediately on the schedule. These people as usual told him this and that for action. There is no such system in the world now. Everything is planned and programmed, We should forward Nos one,two three so on for him to take action. Such formal talk and requests are nothing in this era but wasting time and energy.

    ReplyDelete

Powered by Blogger.