Header Ads



ஆர்ப்பாட்டங்களை அடக்க வேண்டும் - சம்பிக்க சீற்றம்

பணிப்புறக்கணிப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் சில சந்தர்ப்பங்களில் தேவையானால் அடக்க வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆயிரத்து 414 வேலை நிறுத்தங்களும், ஆர்ப்பாட்டங்களுக்கு நடந்துள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாள் ஒன்றுக்கு நான்கு ஆர்ப்பாட்டங்கள் என்ற கணக்கில் 2016 ஆம் ஆண்டு ஆயிரத்து 414 ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. இந்த நிலைமையை தடுக்க உடனடியாக தீர்வு காணவேண்டும்.

அதேபோல் தனி நபர்களுக்கு இடையிலான மோதல்கள், இனம் மற்றும் மதங்களுக்கு இடையிலான மோதல்களாக மாறுகின்றன.

உடனடியாக இவற்றை தீர்க்கவும் தலையிடவும், கட்டுப்படுத்தவும் சில சமயங்களில் அடக்குமுறை அவசியமாக இருக்கின்றது.

ஊடகங்கள் உட்பட அனைத்து துறைகள் சம்பந்தமாக துரிதமான வேலைத்திட்டம் நாட்டுக்கு அவசியம் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. We dont understand anything about present govt situation.we dont know those who bad those who act good.

    ReplyDelete
  2. Muslims not ready to trust you

    ReplyDelete
  3. It is a matter of delight to have Mr. Champika Ranawaka come out with a sense of responsibility, true patriotism, and openness in the matter of daily strike actions, agitations, Hartals , etc.

    ReplyDelete
  4. We all know that back seep. You never come to the seat of this President sure.

    ReplyDelete

Powered by Blogger.