March 18, 2018

முஸ்லிம்களே, எனக்கு “இன நல்லிணக்க டியூசன்” வேண்டாமே...

(மனோ கனேசனின் பேஸ்புக்கிலிருந்து) (18/03/2018)

நான் பொதுவாக இந்நாட்டின் எல்லா இனவாதங்களையும் பற்றி சொன்னவற்றில் ஒன்றை மட்டும் தேடி பொறுக்கி எடுத்து, நான் சொல்லாத அர்த்தத்தை சொல்லியதாக திரித்து, புரிந்துக்கொண்டு, அதை பெருத்து பூதாகரமாக்கி, எனக்கு இப்போது “நல்லிணக்க டியூசன் எடுக்கும் சில நண்பர்களுக்கு;

இன்று, முஸ்லிம் சகோதர்களின் பிரச்சினை பற்றி ஐநா மனித உரிமை ஆணையாளர் அல் ஹுசைன் பேசுகிறார். நல்லது.

இலங்கையில் இருந்து முஸ்லிம் சமூக நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் ஜெனீவாவுக்கு, தூதுக்குழுக்களை அனுப்பி, இலங்கையின் சட்டம், ஒழுங்கு சீர் குலைவு தொடர்பில் புகார் செய்கின்றன. நல்லது.

இலங்கை வரும் ஐநா மற்றும் சர்வதேச பிரதிநிதிகளிடம் முஸ்லிம் அமைச்சர்கள், தலைவர்கள் நிலைமையை எடுத்து கூறுகின்றார்கள். நல்லது.

இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களிடம் புகார் செய்கின்றார்கள். நல்லது. தூதுவர்களும் தம் கண்டனங்களை, கவலையை அரசுக்கு தெரிவிக்கிறார்கள். நல்லது.

சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள், இலங்கையில் முஸ்லிம் உடன்பிறப்புகள் மீதான வன்முறை பற்றி பேச வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன. நல்லது.

உலகின் பல நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த இலங்கை முஸ்லிம் சகோதர்கள், உலக தலைநகரங்களில் இருந்தப்படி இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். நல்லது.

ஆனால், இதையேதானே அய்யா, 2009ம் வருடம் யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு நிராதரவான தமிழர்கள், கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளுக்கு நியாயம் வேண்டி சர்வதேச சமூகத்தை நாடி, செய்தார்கள்.

புலம் பெயர்ந்த தமிழர், தாயக உறவுகளுக்காக, உலக தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

அவ்வேளையில் தமிழருக்கு ஆதரவாக எம்மோடு நானறிய சிறிதுங்க ஜயசூரிய, விக்கிரமபாகு கருணாரத்ன, நிமல்கா பெர்னாண்டோ, பிரிட்டோ பெர்னாண்டோ, பிரியானி குணரத்ன போன்ற முற்போக்கு மற்றும் மனித உரிமை சிங்கள நண்பர்கள் மட்டுமே தெருவில் இறங்கினார்கள்.

ஆனால், அந்நேரம், இலங்கை வாழ முஸ்லிம் அரசியல் சமூக தலைவர்கள் எங்கே இருந்தார்கள்?

நிராதரவான தமிழருக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. சர்வதேச சமூகத்தை நாடிய தமிழரை, தேசத்துரோகிகள் என பட்டம் சூட்டும் இடத்தில் இருக்கவில்லையா?

ஐநா மனித உரிமை ஆணைக்குழு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊர்வலம் போகவில்லையா?

மகிந்த அரசுக்கு ஆதரவு தெரிவித்து, ஐநா சபையை, சர்வதேச சமூகத்தை, எதிர்த்து கடையடைப்புகள் செய்யவில்லையா?

அன்றைய மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளையை எதிர்த்து பேரினவாதிகள் நடத்திய கோமாளி எதிர்ப்புகளில் பங்கு பற்றவில்லையா?

ஒரு சிலர், சில அடி முன்னோக்கி போய் தமிழ், சிங்கள முரண்பாட்டை தம் நலனிற்கு பயன்படுத்த முனைய வில்லையா?
ஏனையோர் பரிதவித்த தமிழரின் ஜனநாயக அரசியல் சமூக தலைவர்களால், (கவனிக்க: புலிகளின் ஆயுத போராட்டம் அல்ல..!) நடத்தப்பட மனித உரிமை போராட்டத்துக்கும், தமக்கும் எந்தவித சம்பந்தமுமே இல்லை என்பது போல் ஒதுங்கியே இருக்க வில்லையா?

ஆக, 2010-2015 மகிந்த ஆட்சி காலத்தின் இறுதிப்பகுதியில், ஞானசாரர் முஸ்லிம் உடன்பிறப்புகளின் உடை, உணவு, மத விழுமியங்கள் ஆகியவற்றின் மீது அரச ஆசீர்வாதத்துடன் நேரடி தாக்குதல் நடத்த தொடங்கிய பிறகு தான், முஸ்லிம் அரசியல் சமூக தலைவர்கள், அரசியல் கட்சிகள் போராட்ட உணர்வு பெற்றார்கள்.

அவ்வேளையில் நான், “பழைய வரலாற்றை’ சுட்டிக்காட்டி, ஒதுங்கி இருக்கவில்லையே? நீங்கள் எமக்காக போராடவில்லையே! அன்று எம்மை தேச துரோகிகள் என்றீர்களே! என்றெல்லாம் சுட்டிக்காட்டி குறுகிய நோக்கில் நடந்துக்கொள்ள வில்லையே?

உண்மையில் நண்பர் ஆசாத் சாலி, கிழக்கில் இருந்து, விஷயம் தெரியாத, சுமார் இரண்டு ஆயிரம் முஸ்லிம் சகோதரர்களை கொழும்புக்கு அழைத்து வந்து, வெள்ளை உடை உடுத்தி, மிகப்பெரும் அரச ஆசீர்வாத ஊர்வலத்தை, மிக முக்கியமான ஒரு ஐநா மனித உரிமை ஆணைக்குழு தீர்மான தினத்தில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசின் வழிகாட்டலின்படி, என் தேர்தல் மாவட்டம் கொழும்பின் காலி வீதியில், பம்பலபிட்டி முதல் கொள்ளுப்பிட்டி வரை நடத்தினார்.

அதை நான் மிக கவலையுடன், ஆதங்கத்துடன், அமைதியாக பார்த்துகொண்டு இருந்தேன்.

பின்னர் அதே “அரச ஆசீர்வாதம்”, ஞானசாரருக்கு வழங்கப்பட்டது.

பின் நிலைமை மாற, அதே ஆசாத் சாலிதான் அக்கால கட்டத்தில், இலங்கை முஸ்லிம்களின் மிகப்பெரும் போராட்ட வீரராக வலம் வந்தார். நானும், விக்கிரமபாகுவும் அவருக்கு தேவையான ஆதரவை துணிச்சலுடன் வழங்கினோம்.

ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் தொடர்ச்சியாக நாம் மூவரும் சேர்ந்து கொழும்பில் வாராந்த அரச எதிர்ப்பு ஊடக மாநாடுகள் நடத்தினோம். போரட்டங்கள் நிகழ்த்தினோம். அதை கொழும்பு உடகவியலாளர்கள் அனைவரும் அறிவார்கள். (ஆனால், அப்போதும் பிரபல முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மகிந்த அரசுக்கு உள்ளே அமைச்சர்களாக இருந்தார்கள்..!)

ஆனால், நான், முஸ்லிம் மக்கள் எம் உடன்பிறப்புகள் என்றுதான் அப்போதும் இப்போதும் நினைத்து நடக்கிறேன். என்னிடம் இந்த சில்லறை சின்னத்தன இனவாதம் எப்போதும் இல்லை. ஆகவே எனக்கு “இன நல்லிணக்க டியூசன்” வேண்டாமே..!

19 கருத்துரைகள்:

Mr. Mano,
You understood wrongly about Muslims act those days...or You dont want to know about it..?
We all against to those criminal of LTTE (Either Tamil invaatham or Tamil groups inavaatham) and these days of Criminals like (Singhala groups inavaatham)
So, both are same and we acted against terrorism and criminals against the Muslim community...

Ok, then what.. ippa neenka poththittu irunthaa kaanum enduthaane solram.. enkalukkaaha pesu enru kenchavillaye..

Illaathathai irukku endru solli kulappaatheerhal enruthaane solram...

Tamil makkalukku saarfaaka enna vena seivam.. but LTTE ku thunai nikka maattom..

தோழர் மனோ, உங்கள் கருத்தை தொடர்ந்தும் பரவலான தமிழ் மக்களின் ஆதங்கமாக இதற்க்கு முன்னமும் கேட்டிருக்கிறேன். இதுபோன்ற நோவுகள் முஸ்லிம் மக்களுக்கும் உள்ளது.அவர்களும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை வைக்கிறார்கள். அவர்களது கவலைகளைப் புரிந்துகொள்வதுபோல உங்கள் கவலையைகலையும் நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் இப்போது செய்யவேண்டியது என்ன? எல்லாப் பக்கத்திலும் பாதகங்கள் நடந்த ஒரு இருண்ட காலத்தை நாமெல்லாம் சேர்ந்து கடந்து செல்வதற்க்கு உதவவேண்டிய இடத்தில் இருப்பவர்களின் நீங்களும் ஒருவரல்லவா. வாருங்கள் தமிழர் முஸ்லிம்கள் மலையக தமிழர் சிங்கள ஜனநாயகவாதிகள் எல்லோரையும் அணி திரட்டி ஒளியை நோக்கி நட்ப்போம்.

மனோகணேசன் அவர்களே, உங்களை முஸ்லிம்கள், முஸ்லிம்களுக்கு சார்பாக பேசவில்லை ( போராடவில்லை) என்றோ, அல்லது ஒரு முஸ்லீம் ( ஆசாத், ஹக்கீம், ரிசாத்...etc.) பிரபலங்களை குற்றம் சாட்டியதட்கோ இனவாதி என்று கூறவில்லை. முஸ்லிம்களின் மார்க்க கடமைகளில் ஒன்றான உடல்களை மறைக்கும் விடயத்தில், அவர்களின் உடை கலாச்சாரம் போன்ற அடிப்படை உரிமைகளில் எந்த அறிவும் அற்ற, மனம் பேதலித்தவன் போல், உங்களின் மனதில் உள்ள துவேசத்தை வெளிப்படுத்தினீர்கள். இந்த பதிவும் அந்த உங்கள் மனதின் ஆழத்தில் உள்ள வக்கிரத்தையும், துவேசத்தையுமே காட்டுகிறது. முஸ்லிம்கள் எந்த ஈழமும் கேட்டு ஆயுத போராட்டம் நடத்த வில்லை. அரசாங்கத்துடன் யுத்தம் செய்யவில்லை. புலிகள் வடமாகாணத்தில் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தார்கள். அப்படியான சூழலிலேயே தமிழர்களின் நீங்கள் மேட்கோள் காட்டிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் முஸ்லிம்கள் அவர்களும் அவர்களது மார்க்கமும் கும்பமும் என்று சொல்லி எவருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்கள். இலங்கையின் சட்டம் ஒழுங்குக்கு கட்டுப்பட்டு வாழ்கிறார்கள். அப்படியான ஒரு இனத்துக்கு ஏன் இப்படி ஒரு வன்முறை????? தயவு செய்து மொட்டடைத்தலைக்கும் முடங்காலுக்கும் முடிச்சு போட முனையாதீர்கள். எங்களுக்கும் ஆசைதான் தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களில் பங்கு கொள்வதட்கு. அவர்களுடன் அன்போடும் பாசத்தோடும் பழகுவதட்கு. பழையவைகளை சுட்டிக்காட்டி உங்களின் மனவக்கிரத்தை முஸ்லிம்களின் மார்க்கத்தில், அடிப்படை உரிமைகளில் சொறி சேட்டை விடுவதை தவிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் சொன்னது தவறுதான் என்றால் அல்லது அது பிழையாக விளக்கப்பட்டுள்ளது என்றால் அதட்கான நாகரிகமான முறையில் செய்யவேண்டிய விடயங்களை செய்வதுதான் ஒரு நல்ல தலைவனின் பண்பு. ஹக்கீமை விட உங்கள் மீது ஒரு அரசியல் மரியாதை பல முஸ்லிம்கள், புத்தி ஜீவிகளிடமும், பொதுநலவாதிகளிமும் இருந்தது. இந்த பிரச்சினைக்கு நாகரிமான முறையில் முற்று புள்ளி வைப்பது தான் எல்லோருக்கும் நல்லது. மன்னிப்போம் மறப்போம்!!!. உண்மைக்கும் நீதிக்கும் போராடுவோம்!!!!

Hon, Mano Ganesan,

Concequence of expulsion of the Muslims from the Northern province was an act of ethnic cleansing carried out by the Tamil militant Liberation Tigers of Tamil Eelam (LTTE) organisation in October 1990. Due to increasing tensions between the Muslims (Moors) and Tamils in the North Sri Lanka, the LTTE forcibly expelled the 72,000 strong Muslim population from the Northern Province.

An apology has been issued by Tamil leaders in Sri Lanka to the country's Muslim minority for "massacres" carried out by the Tamil Tiger rebel group during the civil war 20 years ago.

The rebels have shooting to dead more than 300 Muslims inside two mosques in the eastern town of Kattankudi- Batticaloa in August 1990, and of attacking others in surrounding areas. This was one in many other bomb blast carried out by LTTE then How can Muslim will support LTTE Mr Mano Ganesan please tell us?LTTE and Sinhala Terrorist doing the same .

Mr. Mano not need tution
You need to know the clear vision what is the fact and what is going on

மிஸ்டர் மனோ,

நல்லிணக்கம், சகவாழ்வு என்றால் என்னவென்று முதலில் வரைவிலக்கணம் தெரியாத ஒருவனாக வலம் வருவது, வெட்கக்கேடு.

இந்தப் பதவியை, இவனுக்கு யார்தான் கொடுத்தார்களோ யாமறியோம்.

முஸ்லிம்களை பற்றிக் காழ்ப்புணர்ச்சியுடன் வாந்தியெடுத்ததற்கு எந்தவித பதிலும் இல்லை.

2009 இல் தமிழ்ப் பயங்கரவாதம் முடிவிற்கு கொண்டுவந்தது, இவனுக்குப் பெரும் கவலையளிக்கிறது போல.

முஸ்லிம்கள் மட்டுமல்ல, தமிழ் அரசியல்வாதிகள்கூட தமிழ்ப் பயங்கரவாதிகள் அழிந்தது தமிழருக்கு நல்லது என்று நினைக்கிறார்கள். நினைத்தும் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்ப் பயங்கரவாதிகள், முஸ்லிம்களின்மேல் காட்டு தர்பார் நடத்தியது, கப்பம் வாங்கியது, கொத்துக் கொத்தாகக் கொன்றொழித்தது, கொள்ளையடித்தது, இருந்த இடங்களையெல்லாம் விட்டுத் துரத்தியடித்தது எல்லாம், இந்த மனோ என்ற மனோவியாதி பிடித்தவர்களுக்கெல்லாம் தெரியாது.

தெரிந்தும் தெரியாமல் நடிக்கிறார்கள்.

எல்லா அட்டூழியத்தையும் வாங்கி கட்டிக்கொண்ட அப்பாவி முஸ்லிம்கள், தமிழ்ப் பயங்கரவாதிகள் அழிந்ததைப்பற்றிக் கதைக்கக்கூடாது.

சந்தோஷப்படக்கூடாது. பாற்சோறு சாப்பிடக்கூடாது. ஜெனீவாவில் போய் இலங்கை அரசிற்கு ஆதரவாகக் கதைக்க கூடாது.

என்றெல்லாம் எதிர்பார்ப்பது, ஒரு கோமாளித்தனம் மட்டுமல்ல, கடைந்தெடுத்த நயவஞ்சகத்தனம்.

மிஸ்டர் மனோ, இன்னமும் கள்ள மௌனம் காக்காமல், முஸ்லிம்களின் உடை, அரேபியாக் கலாசாரம் என்றெல்லாம் பொரிந்து தள்ளினீர்களே, அதற்கான பதிலா அழிப்பதுதான், உமது கடமையேயொழிய, ஜெனீவா சென்றது, பாற்சோறு சாப்பிட்டது, முஸ்லீம் அமைச்சர்கள் அழிந்துபோன தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்காமல் விட்டது எல்லாம் ஈங்கு கதைப்பது, உமது உள்ளத்தில் ஆழமாக இடம்பிடித்திருக்கும் இனக்குரோதத்தை படம் பிடித்துக் காட்டுகிறது.

புலம் பெயர்ந்த தமிழர்கள், இலங்கை அரசிற்கு எதிராக ஜெனீவாவில் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை, சுமந்திரன் போன்றோர் அரசுடன் இணைந்து தட்டிக் கழிப்பது, எல்லாரும் தெரிந்ததுதான்.

எந்த முஸ்லீம் அமைச்சரும், புலம் பெயர்ந்த தமிழர்கள் அரசிற்கு எதிராக வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இருந்ததில்லை.மிஸ்டர் மனோ,

எந்த முஸ்லீம் அமைச்சரும், புலம் பெயர்ந்த தமிழர்கள் அரசிற்கு எதிராக வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இருந்ததில்லை.திரு.மனோ கணேசன் அவா்களே, அண்மைக் காலங்களில் உங்கள் செயற்பாடுகளைக் கண்டு நீங்கள் ஒரு நல்ல அரசியல் தலைவா் என்று எண்ணும் அளவிற்கு உங்கள் செயற்பாடுகள் அமைந்திருந்தன.
ஆனால் அந்த எண்ணங்களை தவிடு பொடியாக்கி விட்டீா்கள்.

பயங்கரவாத இயக்கமான LTTE இனா் அரச படையினருடன் மட்டும் யுத்தம் செய்ய வில்லையே.

அவா்களும் அப்பாவி முஸ்லிம்களை இறைவணக்கத்தில் இருக்கும் போது கொன்று குவிக்கவில்லையா?
யாழ்பாணத்தில் முஸ்லிம்களை இனச் சுத்திகாிப்பு செய்யவில்லையா?
இவ்வளவுக்கும் முஸ்லிம்கள் அவா்களுக்கு செய்த குற்றம்தான் என்ன?

பயங்கரவாத இயக்கமான LTTE இனருடனான யுத்தத்தில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப் படுவதை பாா்த்து நாங்கள் ஒன்றும் இனவாத கருத்துக்கள் வௌியிடவில்லையே. அதற்கு பதிலாக கவலைப்பட்டோம், மனம் வருந்தினோம்.

எமது கலாச்சாரத்தில் கை வைக்க உங்களுக்கு எப்படி முடியும்.கௌரவ மனோ கணேஷன் அவர்களே
முஸ்லீம்களுக்கெதிரான வன்முறை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது
அதை நியாப்படுத்துவதுபோல் முஸ்லீம்
அடிப்படை வாதம்பற்றிய தங்கள் கூற்று
எம்மை சீண்டி விட்டது.இஸ்லாத்தை
விளங்காமல் அதில் இல்லாத ஓன்றை
நீங்கள் கையிலடுத்தது வருந்ததக்க
விடயம்.அம்பாறை,கண்டி கலவரங்களை ஆயுதம் தரித்த தமிழ்
ஈழப்போராட்டத்தோடு இங்குஒப்பிட்டு
ஒப்பாரிவிடும் உங்களை என்னவென்று சொல்வது.

MR.Mano, ippothu otrumaiyaga irukkum Muslim, Thamil uravugalai pirikka muyatchikkatheergal. Kevalam inthe vakkugalukkaga ungal udan pirantha sagotharanaiye kalatri vittawarthane neengal

Rana Felip,

He is talking about the Resolution brought by america on 2012 to 2014 where never mentioned about any rebels but mentioned about the reconciliation of war victims.
And he is talking about the illegal activities of muslims in east and north by using the contradiction between tamils and singalese.
1.Grabbing tamils' lands
2. Grabbibg of hindu temples in east, we have many evidence also which i can submit
3.illegal arabic funded religious convertion prigrammes
4. Misuse of indian 50 000 housing schemes by Rishad in North
5. Illegal settlements of muslims and deforestations in north
6.etc.........
These all are proved and confirmed. This is just nothing among other jeolusy activities of your community. First try to understand the concept of his anxious on fundamentalists.

Dear Mano sir, உங்கள் பதில் சுப்பர்.
ஆனால், இது அடிபடைவாதிகளுக்கு விளங்காது.

முஸ்லிம். தலைவர்கள் பணம்-பதவகளுங்காக எந்த விதமான கீழ்த்தரமான வேலையும் செய்செய்ய்கூடியவர்கள். , தமிழர்களுக்கு துரோகம் செய்வது என்பது ஒரு ஜுஜுப்பி வேலை..

அது தான் இப்போ சிங்களவர்கள் பயப்படுகிறார்கள், வேறு எவரும் தாங்கள் கொடுத்ததை விட அதிக பணம் கொடுத்தால், அதைய துரோக வேலையை தங்களுக்கும் செய்வார்கள் என்று.

கௌரவ மனோ கணேஷன் அவர்களே
முஸ்லீம்களுக்கெதிரான வன்முறை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது
அதை நியாப்படுத்துவதுபோல் முஸ்லீம்
அடிப்படை வாதம்பற்றிய தங்கள் கூற்று
எம்மை சீண்டி விட்டது.இஸ்லாத்தை
விளங்காமல் அதில் இல்லாத ஓன்றை
நீங்கள் கையிலடுத்தது வருந்ததக்க
விடயம்.அம்பாறை,கண்டி கலவரங்களை ஆயுதம் தரித்த தமிழ்
ஈழப்போராட்டத்தோடு இங்குஒப்பிட்டு
ஒப்பாரிவிடும் உங்களை என்னவென்று சொல்வது.

அண்ணன் ஜெயபாலன்,
இந்தக்கருத்தை ஏன் நீங்கள் மனோகணேசனின் முகநூல் பக்கத்தில் பதிவிடவில்லை? அவருக்கு அளிக்கவேண்டிய பதிலை இங்கு ஏன் செய்யவேண்டும்?
மேலும் அவர் சுட்டிக்காட்டிய விடயங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதை விடுத்து பொத்தம் பொதுவாக வலி வேதனை என ஏன் மழுப்புலிறீர்கள்?
இதைத்தானே சிங்கள பெளத்தர்கள் சொல்கிறார்கள்! ட்மக்கெதிராக தமிழர்கள் சோழர்களுடன் கைகோர்த்தார்கள், முஸ்லிம்கள் போத்துக்கீசருடன் சேர்ந்தார்கள், இன்று அரபியருடன் சேர்ந்து அபயா போடுகிறார்கள் பேரீச்சமரம் வளர்த்து எரிச்சலூட்டுகிறார்கள் என?
மனோ கணேசன் கேள்விகளை நேரடியாக கேட்டிரிக்கிறார் அதற்கு பதிலை பூசி மெழுகி வழங்குதல் கவிடை எழுதுவொஇஒர்க்கு கைவந்த கலை ஆனால் அரசியலில் எடுபடாது!

Abdul Hassen,
நீங்கள் சொல்வது மிகச்சரி !
பொல்லடிக்கே ஐநா அது இது என ஒப்பாரிவைப்போரை ஷெல்லடிக்கு உள்ளான ச்முகத்துடன் ஒப்பிடுவது தவறு !

Mano: You are not qualified to be a minister if you do not understand which matters you are comparing about. Muslims were indeed sad when innocent Tamils were murdered during the final war. Here, you are advising not to follow Middle East culture!!!.We are following what is prescribed in our religion on which other communities have no rights to be against. Ethnic minded, evil& jealousy elements supported by politicians are the causes for the recent violence not Muslims' clothes.

Thanks for clarifying. We want to see what steps you have taken to unite all 3 races in the country as a Minister who hold such a portfolio.

Post a Comment