March 14, 2018

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் சவூதியிலிருந்து ஒரு இலங்கையரின் கடிதம்

-இனியவன் இசார்தீன்-

ஜனாதிபதி  அவர்களே பிரதமர் அவர்களே எங்களை ஆளும் இலங்கை அரசாங்கமே,

தாய்நாட்டில் எங்களுக்குத் தன்னிறைவு கிடைக்காததால்; திரை கடலோடித் திரவியம் தேடி வந்தோம் நாங்கள்  இழப்பின் சோகத்தோடும் இதயக்குமுறலோடும் இஸ்லாமிய இன ஒடுக்குமுறைக்கெதிரான உணர்வுகளோடும் தொடமுடியாத  ஒரு தொலை தூரத்திலிருந்து  எங்கள் மனிதத் துயரத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறோம்

எதிர்பாராமல் கண்டி திகன  சம்பவத்தில் மரணித்த  சகோதரர் குமார  அவர்களுக்கும் மற்றும் இனவாதிகளால் வீட்டிற்கு வைத்த தீயில்  மாண்ட சகோதரர்; அப்துல் பாஷித்   அவர்;களுக்கும்  இந்த இருவரது குடுபம்பத்தினர்களுக்கும்  இதயம் நிறைந்த்  இரங்கலை  எங்கள் சமூகம் சார்பாகத்  தெரிவித்துக் கொள்கிறோம்

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முஸ்லீம்களைக் குறி வைத்து இனவாதிகள் தாக்கி வருகின்றனர். அத்தோடு  இக் கொடூர தாக்குதல்கள் எற்கனவே திட்டமிடப்பட்டதென்று இப்போது மக்களுக்குப் புலனாகியுள்ளது. முஸ்லீம்களை ஒடுக்குகின்ற  இந்த ஒரே  குறியில் அவர்களது கோடானு கோடி ருபாய் பெறுமதியான வீடுகளையும் வர்த்தக நிலையங்களையும் மசூதிகளையும் இனவாதிகள் உடைத்து எரித்து சின்னாபின்னமாக்கியுள்ளார்கள்

இதற்கு பல சிங்கள இளைஞர்களையும் யுவதிகளையும் பயன்படுத்தி  பலசேனாக்களும் பல காயக்களும் பல இனவாத பிக்குகளும் சில அரசியல்வாதிகளும்  ரணவக்க  கோத்தா போன்றவர்களும்  முன்னாள் இந்நாள் ஆட்சியாளர்களும்தான் இந்த வன்முறையின்; பின்னணியில்  சூத்திரதாரிகளாக இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை மக்கள் அறிந்திருக்கிறார்கள் ஆனாலும் நீங்கள் உரிய நேரத்தில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதால்தான்; இந் நிகழ்வு இதுவரை நீண்டு கொண்டிருக்கின்றது. இது இன்னுமின்னும் நிளும் நிலைக்கும் என்பதை உணர்ந்திருந்தும் மன ஊனமுற்றோர்களாய்  அரசியல்வாதிகள் இருப்பதால்தான் நீங்கள் இனவாத்ததை ஆதரித்து ஊக்குவிக்கிறீர்களென்றே இலங்கை  மக்களாகிய நாம் மனதில் எண்ணுகிறோம்

பிரதமர் அவர்களே ... 

பாராளுமனற ஆதரவுடன் அவசர காலச் சட்டத்தை நீங்கள்தானே அமுல்படுத்தினீர்கள் அதுவும் முஸ்லீமகளின் உடைமைகள் தாக்கி அழிக்கப்பட்ட இரண்டாம் நாள்தானே நீங்கள்; படையனுப்பினீர்கள். வெள்ளம் வடிந்த பின் ஓடி வரும் தாசில்தாரரைப் போல நீங்கள் கண்டி  விஜயம் செய்தீர்கள்... என்ன சோகம்  எவ்வளவ அவலம் .. அங்N;க அப்பாவி இஸ்லாமியர்களின்  உடைமைகளல்லவா அழிக்கப்பட்டுள்ளன. என்ன செய்வது பொறுமையாளர்கள் நாங்கள்  அல்லாஹ்விடமே பிரார்த்திக்கிறோம். அவன் எல்லாவற்றுக்கும் போதுமானவன்.  எதுவுமில்லை எங்களிடம் ஆனால் எங்கள் தேசத் தலைவர்களே!  உங்கள் கைகளில்தானே இருந்தது பிடில். தேசம் எரிந்து முடியம்வரை  வாசித்து விட்டீர்களே

பொதுபலசேனாவின் பேருவளை தாக்குதலுக்குப் பின்னர் ஓரிரு வருடங்கள் சந்தர்ப்பம் அமையாமல் போனதால் அதற்கு ஒரு வாய்ப்பாக சற்று முன் நிகழ்ந்த  சிங்கள இளைஞனின் மரணத்தைத் திட்டமிட்டே பயன் படுத்திக்கொண்டார்கள். உங்கள் அரசாங்கத்தின் நல்லாட்சி வரலாற்றில் இது ஒரு  சாதனையாகப் பதியப் பட்டுள்ளதை நீங்கள் நிச்சயம் உணராமலிருக்கமாட்டீர்கள்

வீட்டின் பின் கதவால் சென்று அச்சத்தோடிருந்த அப்பாவி முஸ்லீம்களை அடித்திருக்கிறார்கள். அதன் பின் அவர்களை வீட்டிற்குள்  பூட்டி வைத்துவிட்டு பயங்கரவாதிகளுக்கு பள்ளிவாயல்களை உடைக்க வழி  விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். 

திகன பொலிசாரும் ஆயதப்படையினரும் காவலிருக்க அந்தப் பள்ளிக்குள் படுத்திருந்த மௌலவியை எழுப்பி அச்சழூட்டி ; கையில் கத்தியைத் திணித்து வைத்து விடடு; 'செல்பி' எடுத்து இனவெறியரகள் அதை வாட்ஸ்அப் மூலம் பலருக்கும் அனுப்பியிருக்கிறார்கள்  

முஸ்லீம்களுக்கெதிரான   இந்த இனவெறித் தாக்குதலின் அழிவால் வரத்தகம் வீழ்ந்துள்ளது  அந்நியச்செலாவணி  குறைந்துள்ளது  வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அறபு நாடுகளில் தற்காலிகமாக  நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அது மட்டமல்லாமல் இலங்கை அரசாங்கத்தின் மீது வெளிநாட்டவர்களதும் ஐ. நா. சபையினதும் நன்னம்பிக்கையும் நட்புறவும்  இப்போது பாதிப்படைந்;துள்ளது  மொத்தமாக இலங்கையின்  தேசிய வருமானமும் பொருளதாரமும் முன்னெப்போதும் இல்லாதவாறு  20 விகிதத்தால்  வீழ்ச்சியடைந்துள்ளது கவலையளிக்கின்றது.

இலங்கை ஜனாதிபதி  அவர்களே.

வார்த்தைகளை நம்பினோம் வாக்களித்தோம்  உங்களைப் பதவியில்  அமர்த்தினோம் ஆனால் இதுவரை எங்களுக்கு என்ன கை மாறு செய்தீர்கள்?

 ஆகக் குறைந்தது நாட்டில் சட்டம் ஒழுங்கையாவது நிலை நாடட் நடவடிக்கை எடுத்தீர்களா? இனவாதத்தை ஒழிக்க அமைதியை உண்டாக்க மத நல்லிலக்கணத்தை கடடியெழுப்ப என்றாவது திட மனம் கொண்டீர்களா? 

34வது கொமிசன்; றிப்போரட்டில் முன்னாள் அரசாங்கத்தின் அங்கத்தவர் பெயரகள்  அதிகம் இருப்பதால்; ஊழல்  குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டுமென்றுதானே சமீபத்தில் அவர்களுடன் நீங்கள் ரகசிய சந்திப்பு ஒன்றை நடத்தியதாக  அறிகிறோம்   அது எப்படி இருந்தது ஒப்பநதமானதா ? அல்லது ஒத்துக்கொள்ள முடியாமல் போனதா?


இந்நாட்டின் இனவாதத்திற்கும்  மனித உரிமை மீறல்களுக்கும் இனி  நீங்களல்லவா பொறுப்புக் கூற வேண்டும் அந்த உங்கள் அனுபவத்தை அரசியல் தந்திரத்தை முதலில் மக்களுக்கு கொஞ்சம் வெளிப்படுத்துங்கள்.

அரசியல் என்பது தாழ்ந்து கிடக்கும்  மக்கள் வாழ்க்கைத் தரத்தை  மேம்படுத்துகின்ற  ஒரு துறை. மனித அமைதியையும்  மானுட மகிழ்ச்சியையும்  மக்கள் சுதந்திரத்தையும்  அவற்றை அனுபவிக்கும் உரிமையையும் வழங்குவதே அரசாங்கம். 

கல்வியிலும் சி;ந்தனையிலும் வறுமையுpலும் தாழ்ந்து கிடக்கும் ஏழை மக்களின் பள்ளத்தில் இறங்கி அவர்களோடு கை குலுக்கிக் கொள்வதல்ல அரசியல்வாதியின் நோக்கம். கை குலுக்கி விடுவதோடு நின்று விடாமல் கைதூக்கி  விடுவதுதான்  அரசியல்; தர்மம். அதை வௌ;வேறாகப் பார்க்காமல்; சமத்துவமாய் செய்வீர்;கள் என எதிர்பார்க்கிறோம்.அது நிகழ்ந்தால் உங்களை ஒவ்வொரு வாக்கியமாக ஒவ்வொருவரும் மனப்பாடம் வெய்வார்கள் நம் நாட்டு மக்கள்.

சவூதி அரேபியா 
14.03. 2018

0 கருத்துரைகள்:

Post a Comment