March 12, 2018

முஸ்லிம்கள் அதிகமாக, பிள்ளை பெறுகிறார்களா..?


எத்தனையோ பிரச்சினைகள் மத்தியிலும் இன்று இலங்கையில் மிக முக்கிய இடம் வகிப்பது முஸ்லீம்களின் சனத்தொகை உயர்வாகும். (மிச்சம் முக்கியம்)

இதை சாட்டாக வைத்தே ஒரு திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு நோக்கி பேரினவாதிகள் நகர்கிறார்கள் .இன்னுமொரு இனம்  அதற்கு தூபம் போட்டு மகிழ்கிறார்கள்.

அது எல்லாம் உண்மையா?

1)ஜாதகப் பொருத்தங்கள்....

பொதுவாக இலங்கையில்  பௌத்தர்களாகட்டும்,இந்துக்களாகட்டும் திருமணம் என்று வரும் போது ஜாதகம்,ஜோசியம் என பலவற்றை ஆராய்ந்து,தட்டிக் கழித்துக் கொண்டிப்பதால்  ஆண்,பெண் இரு தரப்பினரதும் திருமண வயது கூடிக் கொண்டே போகிறது.ஆனால் முஸ்லீம் பெண்கள் பெரும்பாலும்  22/23 வயதில் திருமணம் முடித்து விடுகின்றனர்.
இருபது வயதுகளில்  ஒவ்வொரு மாதமும் கருக்கட்டலுக்கு அதிக வாய்ப்புகள் இருக்க ,முப்பது வயதுகளில் அதற்கான வாய்ப்புகள் குறையும் என்பது எல்லோரும் அறிந்ததே.அதுவும் 35 வயதை கடந்த பின் குறிஞ்சி மலரும் நிகழ்வாகவே கருக்கட்டல் மாறிவிடுகிறது.

35 ல் பௌத்த,இந்து பெண் முதல் குழந்தைக்காய் தவமிருக்க  22 வயதில் திருமணமான முஸ்லீம் பெண் நான்கு பிள்ளைகளுக்கு தாயாகி விடுகிறாள்.

அதுவுமின்றி நல்ல நேரத்தில் கருக்கட்டப்படவில்லை,பிறக்கும் குழந்தையால் அப்பாவுக்கு,தாத்தாவுக்கு ஆபத்து என பல காரணங்களை சொல்லி கஷ்டப்பட்டு உருவான கருக்கள் இன்னுமொரு புறம் கலைக்கப்படுவதம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இனியெப்படி சனத் தொகை பெருக்க வீதம் அதிகரிக்கும்.?? 

2)கல்வி சார் நடவடிக்கைகள்...

என்னதான் பல்கலைக்கழம் தெரிவாகி விட்டாலும் முஸ்லீம்கள் திருமணத்தை தள்ளிப் போடுவதில்லை.

முதுமானி,கலாநிதி என மேற்படிப்பு படிக்கும் பெண்களும் திருமணம்,குழந்தை பேறு என எதையும் தள்ளிப் போடுவதில்லை.வயிற்றை தள்ளிக் கொண்டு படிக்க வருகிறாள் என பலரால்  முஸ்லீம் மாணவிகளை  நோக்கி பல்கலைக்கழகங்களில் அரங்கேறும் கேலிக் கூத்துகளே இதற்கு சாட்சி.

ஆனால் மற்ற சமூகப் பெண்கள் படித்து முடியும் வரை திருமணத்தை தள்ளிப் போடுபவர்களாகவே இருக்கிறார்கள்.

ஏலவே குறிப்பிட்டது போல படித்து முடித்து,தொழில் தேடி,வாழ்வில் settle ஆகி 30/35 கடந்த பின் கருத்தரித்தல் என்பது குறிஞ்சி மலர்வது போன்று இருப்பதால் சனத்தொகை வளர்ச்சி விகிதம் சரிவடைந்திருக்கலாம்.

இந்த இடத்தில் கசப்பான உண்மையொன்றும் இருக்கிறது.பல்கலைக் கழகத்திலோ,வேறு கல்வி நிறுவனத்திலோ கற்கும் காலப்பகுதியில் அடிக்கடி மேற்கொண்ட கருக்கலைப்புகளால் களைப்புற்ற கருப்பை, தேவையின் போது கருக்கட்டலை ஏற்காமையும் இங்கே கருத்தில் கொள்ளப்பட வேண்டும். பௌத்த சமூகத்தைப் பொருத்தவரை இது மிகச் சாமானியமான நிகழ்வு ஆகும்.

இனியெப்படி சனத்தொகை பெருக்க விகிதம் அதிகரிக்கும் ???

3)கருத்தடை முறைகள்....

இவை பற்றி முஸ்லீம் பெண்களுக்கு சுகாதார பணியாளர்கள்  வற்புறுத்திக் கொண்டிருக்க ,பௌத்த மற்றும் ஏனைய பெண்கள் சுய விருப்பத்துடன் 5 வருடங்களுக்கு கருத்தரிப்பை தடை செய்யும் ஜடேல் முறையை அல்லது IUCD முறையை பிரசவத்தின் போதே செய்து முடித்திருப்பார்கள்.
நம் பெண்கள் மாத்திரை பாவிக்கிறேன்,ஊசி (டிப்போ) போடுகிறேன் என தயங்கிக் கொண்டிருப்பார்கள்.

பிள்ளை வளர்க்க துணையில்லை,தொழிலுக்குப் போகும் போது பார்த்துக் கொள்ள ஆள் இல்லை ,இன்னொரு பிள்ளையுடன் இந்த பிள்ளையின் பாடசாலை,டியூஷன்களிற்கு அலைய முடியாது ,சிசேரியன் என்றால் அடுத்த பிரசவம் ஆபத்தாய் அமையும் என ஆயிரம் காரணிகள் அவர்களிடம் இருக்கும்.ஆனால் நம்மவர்களுக்கோ எது நடந்தாலும் அல்லாஹ் பார்த்துக் கொள்ளுவான் என்ற தவக்குல் மட்டுமே இருக்கும்.கருத்தடை பற்றி யோசிப்பதில்லை.

 35 வயதை கடந்து கருத்தரித்தால் ஊனமுற்ற பிள்ளை பிறக்கும் என்ற வைத்திய ஆலோசனைகள்,பிள்ளை வளர்ப்பின் சிரமங்கள் ,மூத்த பிள்ளைக்கு பத்து வயதாகி விட்டது,தொடர்ச்சியாக மூன்று சிசேரியன்  மற்றும் சொத்து பங்கீடு போன்ற காரணங்களால் சிங்கள சமூகத்தில் பல பெண்கள் இரண்டு பிள்ளைகளுடனும்,இன்னும் சிலர் ஒரே பிள்ளையுடனும் LRT எனப்படும் நிரந்தர கருத்தடை செய்து கொள்கிறார்கள்.

ஆனால் உயிருக்கே ஆபத்து என்றாலும் முஸ்லீம் பெண்கள் நிரந்தர கருத்தடை நோக்கி செல்வதில்லை.விஞ்ஞானம்,ஆரூடம் எல்லாவற்றையும் மீறி தவக்குல் வைத்து நகர்கிறார்கள்.

இதனால் விரும்பியோ விரும்பாமலோ அடுத்த இரண்டு வருடத்தில் பிள்ளை பெற்றும் விடுகிறார்கள்,என்ன பாடு பட்டேனும் குழந்தை வளர்க்கத் தலை படுகிறார்கள்.

ஆனால் மற்ற சமூகத்தவர்கள் தவறி கருத் தரித்தாலும் கருக்கலைப்பு நிலையங்களைத் தான்  நாடுகிறார்கள்.

இனியெப்படி சனத்தொகை பெருக்க விகிதம் அதிகரிக்கும்???

இப்படி சொந்த செலவில் தனக்குத் தானே சூனியம் வைத்து விட்டு ஆய்வுகள்,அறிக்கைகள் என அள்ளி வீசுவதை என்னவென்று சொல்ல...?

முதலில் மேற்சொன்ன தடைகளை தகர்க்காமல் முஸ்லீம்கள் பெறுகிறார்கள் என புலம்புவதில் அர்த்தமில்லை.

(யாராவது சிங்களத்தில் மொழி பெயர்த்து அவர்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கலாம்.)

-Shekha Fauzuna Binth Izzadeen-

6 கருத்துரைகள்:

Great article, please somebody translate this into Sinahla and English and publish in social media to clear the doubts and bad thinking about us.

Dear Admin,

This topic is a well known secret but I don't against this matter meantime why can't you just properly handle your language? In some part on this article you are directly condemning/disgracing other ethnic. Like "Abortion is common among Kafeers, during the period of their studies..." yes that might be but you should not mentioned in public like this.

So just be careful with the language in how you publishing.


Regards,

bad article don't translate

சிங்கள பிள்ளைகள், பாடசாலைகளில் கருக்கலைப்பு செய்து கொள்வது மிகவும் சாதாரணம் என்ற வாசகத்தை மட்டும் எடுத்துவிடுக்ங்கள். மற்றவை சூப்பர்.

Post a Comment