Header Ads



"கோழியை நரியிடம், ஒப்படைக்க வேண்டாம்"

ஊடகவியலாளர் லசந்த விக்ர மதுங்கவின் படுகொலையைமை யப்படுத்தி என்னை கைது செய்ய முயற்சிகள்  இடம்பெறுவதாக தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு  செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ , இந்த விடயத்தில் அப்போதைய இராணுவ தளபதியாக இருந்த  சரத் பொன்சேகவை விசாரிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.  

கோழியை பாதுகாக்க நரியிடம் அதனை  ஒப்படைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  முன்னாள் பாதுகாப்பு  செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று வெளியிட்ட விஷேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

எவன்காட், ரக்னா லங்கா பாதுகாப்பு சேவை, மிக் விமான கொள்வனவு மற்றும் டி.ஏ.  ராஜபக்ஷ மன்றம் போன்ற விடயங்கள் ஊடாக விசாரனைகளை முன்னெடுத்து என்;மீது சேறு பூசிய நல்லாட்சி அரசாங்கம் தற்போது ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலையுடன் என்னை தொடர்புபடுத்த முயற்சிக்கின்றது. இவ்வாறான முயற்சிகளின்  ஊடாக என்னை கைது செய்வதே  அரசாங்கத்தின் நோக்கமாக காணப்படுகின்றது.

அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் இதற்கான ஊகங்களை பலசந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின்பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரின் சாட்சியத்தின் அடிப்படையில் குறித்த படுகொலையுடன் இராணுவ புலனாய்வுக்கு தொடர்பு இருப்பதாகவும் அப்போதைய இராணுவ புலனாய்வு பிரிவின் பொறுப்பாளரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் கீழ் கொலை குழு செயற்பட்டதாகவும் இவர்கள் கோத்தபாய ராஜபக்ஷவின் கட்டளையின் பிரகாரம் செயற்பட்டதாகவும் கடந்த வாரத்தில் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

போலியான தகவல்களை பரப்பி மக்களை திசைதிருப்பவும் உண்மைகளை மூடிமறைக்கவும் எடுக்கின்ற மோசமான முயற்சியாகவே இது காணப்படுகின்றது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட காலப்பகுதியில் மேஜர் ..ெஜனரல் கபில ஹெந்தவிதாரண இராணுவ சேவையில் ஓய்வு பெற்றிருந்ததுடன் பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலானாய்வு பிரிவின் தலைவராகவும்  செயற்பட்டிருந்தார். தேசிய  புலனாய்வு பிரிவின் தலைவர் இராணுவத்திற்கு பொறுப்புடையவர்  அல்ல. பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் சிவில் கடமையையே அவர் மேற்கொண்டிருந்தார்.

இராணுவ புலனாய்வு பிரிவுகள் இராணுவ நிர்வாகத்தின் கீழே காணப்படும்.  பாதுகாப்பு அமைச்சின் கீழ் அல்ல.  அதே போன்று அந்த புலனாய்வு பிரிவுகளின் செயற்பாடுகள் இராணுவ புலனாய்வு பணிப்பாளர் சபையின் கீழ் நிர்வகிக்கப்படும். அப்போது அதன் பொறுப்பாளராக பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் அமல் கருணாசேகர செயற்பட்டார். இராணுவ புலனாய்வு பிரிவின் அனைத்து நடவடிக்கைகளையும் இராணுவ தளபதிக்கே அவர் அறிவித்தார். இந்த காலப்பகுதியில் இராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா பதவி வகித்தார்.உள்நாட்டு போரின் உச்சகட்டமான குறி;த்த  காலப்பகுதியில் இராணுவ தளபதியின் அறிவுறுத்தல்களோ கட்டளைகளோ இன்றி எந்தவொரு இராணுவ புலனாய்வும் செயற்படாது என்பது பாதுகாப்பு துறைசார் சிறிய அறிவு காணப்படுவர்களுக்கும்  தெரிந்த விடயமாகும்.

மிக் விமான கொள்வனவு தொடர்பில் எனக்கு எதிராக வெளியிடப்பட இருந்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டதாக அரசியல் தரப்புகள் சேறு பூசும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறான போலியான பிரச்சாரங்களை மேற்கொள்பவர்கள் ஒரு விடயத்தினை மறந்து விட்டுள்ளனர். அதாவது மிக் விமான கொள்வனவு தொடர்பில் எனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டியிருந்த சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக அன்று வழக்கு தாக்கல் செய்திருந்தேன் .குறித்த வழக்கில் நான் வெற்றியீட்டியும் இருந்தேன் .அத்துடன் தவறான செய்தியை வெளியிட்டமைக்காக சண்டே லீடர் பத்திரிகைக்கு பகிரங்கமாக மன்னிப்பு செய்தியை பிரசுரிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 



எனவே லசந்த விக்ரமதுங்கவின் குற்றச்சாட்டுகளுக்கு நான் அன்று சட்டத்தின் பிரகாரம்  பதிலளித்தேன்.; பகிரங்கமாக மன்னிப்பு கோரியமையினால் அதற்கு பின்னர் சண்டே லீடர் பத்திரிகையுடன் எவ்வித முரண்பாடுகளும் காணப்படவில்லை. ஆனால் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்படுவதற்கு இரண்டு வாராங்களுக்கு முன்னர் அப்போதைய இராணுவ தளபதியான சரத் பொன்சேகாவை விமர்சித்து செய்தி வெளியிடப்பட்டது. இதன் போது சரத் பொன்சேகா நான் பின்பற்றிய சட்ட நடவடிக்கைகளை அவர் பின்பற்றாதிருந்தார். ஆனால் குறித்த செய்தி தொடர்பில் கோபம்  கொண்டிருந்திருந்தார். லசந்த படுகொலை தொடர்பில் இன்று விசாரனைகளை முன்னெடுக்கும் பொலிஸார் இந்த விடயத்தினை கவனத்தில் கொள்ள வேண்டும் .

வேறொரு விசாரணைக்காக இரகசிய பொலிஸார் என்னை அழைத்திருந்த போது ,லசந்த படுகொலை செய்யப்பட்ட காலப்பகுதியில் கொழும்பு இராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பாளராகயிருந்த 112 ஆவது படையணியின் தளபதி பிரிகேடியர் கெப்பெட்வலானவின் கீழ் செயற்பட்ட இராணுவ  குழுக்களின் செயற்பாடுகள் குறித்து கண்டறியுமாறு இரகசிய பொலிஸாரிடம் கேட்டு கொண்டேன். ஆனால் அரசியல் தலையீடுகள் காரணமாக அந்த விடயங்கள் இடம்பெறவில்லை. 

லசந்த விக்மதுங்கவின் படுகொலை தொடர்பில் அன்று எதிர்கட்சி தலைவராக இருந்த ரணில் விக்ரமசிங்க இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் குற்றம்  சுமத்தியிருந்தார். முன்னாள் சபாநாயகரான ஜோசப் மைக்கல் பெரேராவும் இவ்வாறான குற்றச்சாட்டினையே முன்வைத்திருந்தார். இவர்கள் தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற போதிலும் அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை விவகாரத்தினை திசைதிருப்பி வருகின்றனர்.

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு காரணம் அவர் எழுதிய செய்தி என்றால் ,அவ்வாறான அவதூறு செய்தியை வெளியிட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து என்னை விசாரணை செய்யும் பொலிஸார் அதே ஈடுப்பாட்டை அப்போதைய இராணுவ தளபதியான சரத் பொண்சேகாவிடமும் காட்ட வேண்டும். தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அன்று லசந்த படுகொலை தொடர்பில் அப்போதைய இராணுவ தளபதி சரத் பொண்சேகா மீது குற்றம் சுமத்தினார். எனவே தற்போதைய சட்டம் ஒழுங்கு அமைச்சர்i; என்ற வகையில் சரத் பொண்சேகாவிற்கு எதிரான அன்றைய குற்றச்சாட்டை இன்று விசாரணை செய்ய முடியும்.  ஆனால் இன்று நரிக்கு கோழியை பொறுப்பளிப்பதை போன்று பொன்சேகாவிற்கு பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பினை வழங்க அரசியல்வாதிகள் ஆலோசணை வழங்கி வருகின்றனர். 

அரசியல் சுய நலன்களுக்காக பொலிசார் போலியான சாட்சியங்களை தயாரித்து நாட்டின் சட்டம் ஒழுங்கை சீரழிப்பதனால் நாடு மாத்திரம் அல்லாது சர்வதேசத்திலும் பாரிய அகௌரவமும் ஏற்பட்டுள்ளது. எனவே அநீதிக்கு எதிராக போராட வேண்டிய நிலையே மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. இவ்வாறான மோசடி அரசாங்கங்களை மக்கள் விரட்டியடித்த வரலாறு உலகில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான பதிலடியை இலங்கை மக்களும் விரைவாக கொடுப்பார்கள் என தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.