Header Ads



"பாதுகாப்பு உயர்சபையை, உடனடியாகக் கூட்டு" - ரிஷாட் அவசர வேண்டுகோள்

-ஊடகப்பிரிவு-

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு பாதுகாப்பு உயர்சபையைக் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 

அம்பாறை பிரதேசத்தில் தொடங்கிய வன்முறை சம்பவங்கள் இப்போது கண்டி மாவட்டத்தில் பரவி, அங்குள்ள பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டு, முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் மற்றும் சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் வாழும் குடியிருப்புக்கள் மீது சரமாரியாக கல்வீச்சுத் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளதுடன் முஸ்லிம்கள் பலர் தாக்கப்பட்டு காயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

கண்டி திகன பிரதேச முஸ்லிம்கள் வெளியேவர முடியாது வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தில் அவர்கள் இருக்கின்றனர். 30 வருட பேரழிவின் பின்னர் நாட்டிலே சமாதானம் ஏற்பட்டு இனங்களுக்கிடையில் நல்லுறவு வளரும் இந்த சந்தர்ப்பத்தில், இனவாத சக்திகள் சமூகங்களுக்கிடையே குரோதங்களை ஏற்படுத்தி, நாட்டில் அமைதியின்மையை தோற்றுவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.

இனங்களுக்கிடையே இவ்வாறான முரண்பாடுகளைத் தோற்றுவித்து, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி பொருளாதாரத்தை பலவீனம் அடையச் செய்வதின் பின்னணியாகவே இந்த தீய சக்திகளின் செயல்பாடுகளைக் கருத வேண்டும்.

பள்ளிவாசல்களும், முஸ்லிம்களின் சொத்துக்களும் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுவது இனவாதிகள், அந்த சமூகத்தின் மீதுகொண்ட காழ்ப்புணர்வின் காரணத்தினாலேயே என்று புலப்படுகின்றது.

இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் நாடு அதலபாதாளத்துக்கு செல்வது தவிர்க்க முடியாமல் போய்விடும் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் ரிஷாட், உடனடியாக அந்தப் பிரதேசத்தில் நீடித்த பாதுகாப்பை பலப்படுத்தி நிலைமையை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.   

4 comments:

  1. நல்லதொரு காதல் கடிதம்.. அறிக்கை அரசியலை விட்டுவிட்டு உடனடியாக தங்களின் சுகபோக வாழ்க்கையை தியாகம் செய்து அமைச்சு பதவியை தூக்கி வீசி விட்டு வெளியேறவும்..

    ReplyDelete
  2. ​இந்த கருத்தைக்கூறும்போது எனக்கு தயவுசெய்து அரசியல் சாயம் பூசிவிடாதீர்கள். ஏனெனில் நான் அரசியலுக்கு அப்பால் மனிதநேயத்துடனும் சமூகத்தின் ஒரு அம்சம் என்றவகையில் சமூக உணர்வுடனும் எழுதுபவன். மேலே உள்ள அமைச்சரின் கருத்துக்களை தயவுசெய்து மீண்டும் ஒருமுறை படியுங்கள். அவர் சமூக உணர்ச்சியுடன் தனது சமூகத்துக்கு விரோதமான வன்முறையைக் கண்டிக்கின்றார். அவர் நீங்கள் கூறுவதுபோல் பதவி துறந்து வௌிவந்தால் ஒரு சாதாரண மனிதன். குறைந்த பட்சம் இதுபோன்ற இணையத்தளங்கள் கூட அவருடைய கருத்துக்கு மதிப்பளிக்கமாட்டாது.அவர் அதிகாரத்துடன் இருப்பதனால் அவருடைய கருத்துகளை அரசியல் உயர்மட்டங்கள் கேட்கின்றன.அதற்கு உரிய நடவடிக்ைகயும் எடுக்கின்றன. எனவே இதுபோன்ற சிந்தித்து பேச எழுத வேண்டிய நேரங்களில் இவ்வாறு கீழ்த்தரமாக எழுதுவது யாருக்கும் நிச்சியம் பயன்படாது. அதற்கு மாற்றமாக மேற்படி அமைச்சருக்கு அல்லாஹ் அருள்பாலிக்க வேண்டும் என்றும் அவனுடைய பாதுகாப்பையும் அருளி இந்த சமூகத்தில் அவரையும் அனைத்து முஸ்லிம்களையும் இந்த நாட்டில் நல்ல மனிதர்களையும் அல்லாஹ்வின் அருளால் காப்பாற்ற வேணடும் எனவும் பிரரத்திப்போம். எல்லாவற்றையும் அறிந்தவன் அல்லாஹ் மாத்திரம்தான்ا اللهم عليك توكلنا وإليك أنبنا واليك المصير، الله ولي ذلك والقادر عليه،

    ReplyDelete
  3. இப்பிரச்சினை குறித்து விசாரணை நடத்த வேண்டும். அதில் நீதமான தீர்ப்புகளும் வழங்கப்பட வேண்டும்

    ReplyDelete
  4. இந்த 21 பேரும் அரசுடன் இருந்து இந்த சமூகத்திற்கு செய்த சேவைகள் என்ன.. தயவுசெய்து பட்டியல் படுத்துங்கள் இப்போது அரசுடன் ஒட்டிக்கொண்டு தேன் நிலவு கொண்டாடுவதை அனுமதிக்க...

    ReplyDelete

Powered by Blogger.