Header Ads



ஒரு வருடத்தினுள் புனித அல்குர்னை, மனனம்செய்த அல்ஹாபிழ் ஷரப்

நிந்தவூர் 18 ஆம் குறிச்சி,ஹாஜியார் வீதியை சேர்ந்த அல்ஹாபிழ் ஷரப் அஹமட் அவர்கள் அவுஸ்திரேயாவில் இருக்கும்போது தனது ஆறாவது வயதிலேயே புனித அல்குர் ஆனை எல்லோரையும்போல சாதாரணமாக ஓதத்துவங்கினார்.

அதன் பின்னர்  அவுஸ்திரேலியாவிலேயே தனது ஒன்பதாவது வயதில் பிரத்தியேகமாக பிரதி சனிக்கிழமையும் குரான் மனன வகுப்பிற்கு சென்று நான்கு "ஜூஸ்ஊ"களை தஜ்வீது முறைப்படி மனனமிட்டிருக்கின்றார்.

பின்னர் தனது பத்துவயதில் குடும்பத்தினருடன் இலங்கை திரும்பிய இவர் சென்ற ஆண்டு (2017) மார்ச் மாதம் கண்டி,கெளிஓயா,தஸ்கரையில் உள்ள ஹக்கானியா அரபுக்கல்லூரியில் முழுநேர மனன வகுப்பில் சேர்ந்து இவ்வருடம் இரண்டாம் மாதம் இறுதியில் முழுக்குர் ஆனையும் ஒரு வருடத்தினுள் மனமிட்டு முடித்திருக்கின்றார்.இம்மாதம் முதலாம் திகதி ( 2018 03 01) அல்ஹாபிழ் (ஹிப்ளுள் குர் ஆன்) என்ற பட்டத்தினை பெற்றுக்கொண்ட இவருக்கு வயது 13 மட்டுமே.

இவர் இலங்கை,அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளினதும் பிரஜையாவார்.

நிந்தவூர் நலன்புரிச்சபையின்-(NWC) ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான பட்டையக்கணக்காளர் அல்ஹாஜ் M.S.ரசீன் அஹமது,சமீனா ரசீன் அஹமது ஆகியோரது சிரேஸ்ட புதல்வரான ஷரப் ஹாபிழ் அவர்களது சகோதரனும் புனித குரானை மனனமிட்டுக்கொண்டிருக்கின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்ஷா அல்லாஹ் இவரது மார்க்கப்பணி இன்னும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக!

இவர்களது பெற்றோரிற்கும் அல்லாஹ் சுபஹானஹு தஆலா மென்மேலும் அருள் புரிவானாக,ஆமீன்.

-மு.இ.உமர் அலி-

3 comments:

  1. மாஷா அல்லாஹ்.மிகச் சிறந்த அடைவு.

    ReplyDelete
  2. Jazakallahu Khair
    Allahumma lekel hamdhu walekesh shukur.

    ReplyDelete
  3. Masha Allah, well done Sharof Razien Ahmed
    We proud of you, wish you all have a great future
    Hasan & Ismail Sydney

    ReplyDelete

Powered by Blogger.