Header Ads



ஜெனிவாவில் ஹூசைன், நாளை முக்கிய உரை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது.

இலங்கை தொடர்பிலான அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இளவரசர் ஷெய்ட் ராட் அல் ஹூசைன் நாளைய தினம் (21) சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.

​கடந்த மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர்
மார்ச் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நாளைய தினம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் இளவரசர் ஷெய்ட் ராட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.

பொறுப்புக்கூறல் செயற்பாட்டை முன்னெடுப்பதில் இலங்கை தாமதம் காட்டுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஐ.நா மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்திருந்த அறிக்கையிலே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

பொறுப்புக்கூறல் தொடர்பில் 30/1 பிரேரணையை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டு, ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையிலேயே ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

இதேவேளை, நேற்றைய தினம் இலங்கை தொடர்பிலான பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் நடைபெற்றது.

இதன்போது ஜெனிவாவிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவினாத ஆரியசிங்க உரையாற்றினார்.

No comments

Powered by Blogger.