March 09, 2018

பிரா அணிந்துசெல்ல உரிமையுள்ளது என்றால், புர்கா அணியவும் உரிமையுண்டு - முஜிபுர் ஆவேசம்

மார்பு கச்சைகளை காட்டியவாறு ஆடைகளை அணிந்து திரிவதற்கு இந்த நாட்டிலுள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது என்றால் முகத்தை மூடி ஆடை அணியும் உரிமை எமது பெண்களுக்கும் உண்டு என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  ஜே.வி.பி.யின் பிமல் ரத்நாயக்க எம்.பி.க்கு சபையில் பதில் வழங்கினார்.

பாராளுமன்றத்தில் இன்று -09- வெள்ளிக்கிழமை வணிக கப்பற்தொழில் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது பிமல் ரத்நாயக்க எம்.பி கூறும் போது,

முஸ்லிம் அடிப்படைவாதத்தை முஸ்லிம் அமைச்சர்கள் தடைசெய்ய வேண்டும். தற்போது தமிழர்கள் அடிப்படைவாதத்தை கைவிட்டுள்ளனர். அத்துடன் இந்த களரியிலும் கூட பாடசாலை மாணவிகள் கூட முகத்தை மறைத்து கொண்டு வருகின்றனர். ஆகவே  இதனை முஸ்லிம் அமைச்சர் இணைந்து இவ்வாறான அடிப்படைவாதத்தை தடை செய்ய வேண்டும் என்றார்.

இதனையடுத்து முஜிபுர் ரஹ்மான் தனது உரையில் கூறும் போது,

பிமல் ரத்நாயக்கவிற்கு அவ்வாறு கூற முடியாது. முகத்தை மூடுவது மூடாமல் விடுவது அவரவர் சுதந்திரமாகும். என்னுடைய மனைவி முகத்தை மூடுவது கிடையாது. ஆனால் ஒரு சிலர் முகத்தை மூடுகின்றனர்.  அது அவர்களுக்குரிய சுதந்திரமாகும். 

அது மட்டுமா தற்போது மார்பு கச்சைகளை காட்டியவாறு ஆடைகளை அணிந்து திரிவதற்கு இந்த நாட்டிலுள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது என்றால் முகத்தை மூடி ஆடை அணியும் உரிமை எமது பெண்களுக்கும் உண்டு.

அண்மையில் கூட டெங்கு நோய் காரணமாக ஊவா மாகாணத்தில் பாடாசலை மாணவர்களுக்கு பஞ்சாப் ஆடை அணியுமாறு வலியுறுத்தப்பட்டது. அப்போது டெங்கு நுளம்பு தாக்காது என்று கூறியுள்ளனர் . திறந்த ஆடைகளை அணிவதன் மூலம் பல துஷ்பிரயோகங்கள் நடக்கின்றன என்றார்.

13 கருத்துரைகள்:

அருமையான பதிலடி

I think we have only three good Leaders today among Muslim community to speak out.. They are Imthaiya Bakir, MUjeeb Rahman and ( Ali Subri lawyer) these three have good charismatic leadership quality with rational approach. It is high time for Imathiya Bakir Marikar to come to politics . it is not too late. If good people do not come back people fill in the vacuum ( that is natural theory of politics) .. May Allah reward Mr MUjeeeb Rahman MP for this wonderful reply and Even Champika could not reply

Masha Allah...Well said. Well done, Mr. Mujeebur Rahmaan

Mujiber Rahman is talking nonsense.Muslims are partly responsible for the present tragedy. Muslims are travelling towards ultra fundamentalism. Sri Lanka doesn't face sand storm, no one should wear face cover.

கௌரவ முஜிபுர் ரஹ்மான் அவர்களை மீண்டும் அவருடைய துணிவான ஆவேசத்தை சுமார் நான்கு வருடத்திற்குப்பிறகு கண்டுள்ளேன். நாங்களும் ஒருவிதமான சந்தேகத்தில்தான் இருந்தோம் தமது அரசாங்கம் வந்துவிட்டதன்று எதையும் கண்டுகொள்ளாமலிருக்காரெண்டு. ஆனால் அவர் முழிப்புடன்தான் இருக்கார். இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், தஹ்ரியாதையும், சொத்துக்களையும் இரட்டிப்பாக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிராத்திப்போம். சமூகத்திக்கான பணியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுங்கள்

No doubt Burqa is a Symbol of extremism , This is brought to sri lanka from Saudi Arabia and Pakistan by some Islamic groups, Srilankan Muslims lived in peace and harmony with other Ethnics when they had their own Identity and interpretation of Islam, we should understand that Islam didn't impose this kind of dress on women it is only Saudi or Pakistani tradition.

do u know the meaning of your name

الله اكبر Keep it up

Gentleman, please Honestly tell your self from your botom of heart, will you feel good when some other men keep looking at your spouse or syster and admire them?

Any responsible husband or brother will never like this.

What an ignorant comment? Anybody can cover their entire body except the face.No one can oppose that!. Those who want to cover their face can stay at home, we have no objection but,they can't go to public places with covered face. It concerns others security. No one has the right to play with others security.

If face cover womens are threat to Kumar, he can approach a newly appointed Law and Order Minister at the rate payer's money.

Post a Comment