Header Ads



சுமனரும், ஞானரும் மைத்திரியை சந்தித்தனர் - கண்டி வன்முறையுடன் தொடர்புபடுத்தும் மகிந்த

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகங்களின் செய்தியாளர்களுடனான விசேட சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச, அப்படியான முடிவுகளை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாயவா அல்லது வேறு ஒருவரா என்பது மக்களின் விருப்பத்திற்கு அமைய தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள மொத்த வாக்குகளில் ராஜபக்ச அணியினருக்கு இன்னும் 50 வீத வாக்குகள் கூட கிடைக்கவில்லை என அரசாங்க தரப்பு முன்வைத்து வரும் வாதங்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராஜபக்ச, தேசிய தேர்தல் ஒன்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு தற்போது கிடைத்த வாக்குகளில் 75 வீதமான வாக்குகள் தமது அணிக்கு கிடைக்கும் எனவும் இதனால், 50 வீத வாக்குகளை பெறுவது சிரமமானதல்ல எனவும் கூறியுள்ளார்.

அதேவேளை அண்மையில் கண்டி பிரதேசத்தில் நடந்த இனவாத வன்முறைகளுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம், பொதுஜன பெரமுன தரப்பை குற்றம் சுமத்தினாலும் அந்த கட்சிக்கும் இந்த வன்முறைகளுக்கும் சம்பந்தமில்லை.

கண்டி வன்முறைகள் தொடர்பில் பேசப்பட்ட மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி, கண்டி வன்முறைகளுக்கு சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் ஜனாதிபதி சந்தித்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Games and Acting never come true.The way they came to ruling. The people send them back to home soon.

    ReplyDelete
  2. True Muslim Worship the Creator of this Universe and all in it. It is not first time in history... but very often the this TRUE GOD WORSHIPERS are being attacked by those who worship creations.

    BUT At Last Success is for who worship GOD ALONE, as Paradise belongs to GOD, he will reward it to TRUE WORSHIPERS of GOD not for worshipers of creations.

    This world is a Place of TEST for GOD Worshipers but for others this world is a plays of JOY. BUT in the next every existing world the story is opposite and the success is only for TRUE GOD Worshipers.

    ReplyDelete

Powered by Blogger.