March 22, 2018

"அடுத்த ரவுண்ட் ஒப்பாரியும், ஓலமும் கேட்கும்" (முஸ்லிம்களுக்கு ஒரு எச்சரிக்கை)

எவ்வளவு புது டொபிக்குகள்... எவ்வளவு அரசியல் மாற்றங்கள்... எத்தனை கண் துடைப்புகள்.. மறந்திருக்க வேண்டுமே.

நினைவு காட்டினாலும் சிலருக்கு கோபம் வரக்கூடும்.

 இதையே நினைத்துக்கொண்டிருக்க ஏலுமா? கொஞ்சம் ரிலாக்ஸாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இருக்கவேண்டாமா? என்று அவர்கள் பொருமுவதும் கேட்கிறது.

நிற்க, அன்று பாதையோரப்படிக்கட்டில் நிர்வாணமாக தலையில் கைகளை வைத்துக்கொண்டு முகம் புதைத்திருந்தான் தமிழன். (பார்க்க படம்)


 தனது நிர்வாணத்தை அவன் நொந்து கொள்ளவோ தனது கையறு நிலையினை பற்றி கவலை கொள்ளவோ அவனால் முடிந்திருக்கவில்லை! தனது தலை விதியை நொந்து கொண்டான். சிங்களவன் அதைப்பார்த்து எக்காளமிட்டுச்சிரித்தான்!

 திகனை பற்றியெரிந்து அதன் சுவாலை தெல்தெனிய வழியாக நகர்ந்து கடுகஸ்தோட்டையினை எரித்து அகுறனையினை ஆக்கிரமித்த பொழுதொன்றில் இரவு வீதியின் படிக்கட்டொன்றில் எனது இனத்தவன் ஒருவனும் நாதியற்று குந்தியிருந்தான்.... அவனை பார்த்து சிப்பாய்கள் கெக்கலி கொட்டி சிரித்தன!

ஜூலைக்கலவரத்தை போலதான் கண்டியின் மார்ச் கலவரமும் ...

தமிழனைப்போல நம்மவனும் தலையில் கைகட்டி புகை வழியே தனது அழிவுகளை பார்த்துக்கொண்டு நின்றான்...

ஜூலைக்கலவரத்தை போலதான் கண்டியின் மார்ச் கலவரமும்...

அப்போது தொலைக்காட்சிப்பெட்டிகளை தூக்கிக்கொண்டோடிய திருட்டு பெருந்தேசியவாதக்கூலிகள் இன்று ஐபோன்களை கொள்ளையடித்துக்கொண்டு ஓடினார்கள்...

ஒரே கலவரம் ஜூலைக்கலவரம் 3000 உயிரிழப்புகள் கோடிகளில் நஷ்டம் தமிழனுக்கு ரோசம் வந்தது. தனக்கு வாழிடம் மறுக்கப்பட்ட தேசத்திடம் தனியே வாழ நாடு கேட்டு போராடினான்... இன்றும் போராடிக்கொண்டே இருக்கிறான்.

நமக்கு அளுத்கமையில் கலவரம் வந்தது ஜிந்தோட்டையில் கலவரம் வந்தது அம்பாரையில் கலவரம் வந்தது கண்டியில் கலவரம் வந்தது தமிழனுக்கு ஒரே ஒரு கலவரம் வந்தது அது ஜூலைக்கலவரம்.

நமக்கு கலண்டரில் உள்ள 12 மாதங்களின் பெயராலும் கலவரம் வந்தாலும்.... ரோசம் வராது! ஏனென்றால் கோழைத்தனம் குடிகொண்ட பட்ட சோம்பேறிகளாக இருக்கிறோம்.

கிரிக்கட் சண்டை பிடிக்க அரசியல்காரனுக்கு சொம்பு தூக்க முட்டையில் மயிர் பிடுங்க ஒன்றுமில்லாத வீணாய்போன வம்புகளை விலை கொடுத்துப்பேச என காலம் கரைகிறது!

எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அடுத்த ரவுண்ட் உடமைகளை மட்டும் இலக்குவைத்ததாக இராது!
 இதை விடப்பெரிய ஒப்பாரியும், ஓலமும் கேட்கும்.

- முஜீப் இப்ராஹீம் -

11 கருத்துரைகள்:

Hasbunallahu Wa Ni’mal Wakeel

Bro, very easy to blame and difficult to act ourself. We are Muslims we believe the hereafter and follow the teaching of the Quran and the way of our Prophet shown. I hope you may understand what I am going to say.

ஹச்புனல்லாஹி வன் நிஹ்மல் வகீல்
இது ரஸுலுல்லாஹ் சொன்ன வஹ்ன் முஜீப் இப்ராஹிம் சகோதரர் அவர்களே! இதிலிருந்து விடுபட அ இ ஜ உ , மற்றும் இயக்கங்களின் தலைமைகள் மாறி எமக்கு உறுதிமிக்க தலைமை வேண்டும் அதோடு எமது தக்வா மேலோங்க இஸ்லாமியர்களாக (வட்டி தவிர்த்த வியாபாரம், வட்டி தவிர்ந்த எல்லா கொடுக்கல் வாங்கள், ஏழைகளின் துயர் துடைக்க செல்வந்தனும், அநீதி இலக்கப்பட்டவனின் பதுஆ வுக்கு அச்சமுள்ள முஸ்லிமாக,...........) நாம் மாற வேண்டும்

கட்டுரையாளரின் உண்மையான ஆதங்கம் புரியாமல் சகோதரர் ரிலா கூறுவது நகைப்புக்குரியது 1952 மற்றும் அதற்கு முன்னும் முஸ்லிம்கள் கடுமையான இன வன்முறைக்கு முகம் கொடுத்தனர் கம்பளையில் நடந்த இன கலவரத்தில் முஸ்லிம்கள் காடுகளில் போய் ஒளிந்து கொண்ட சம்பவங்களும் நம்மில் எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை இன்றும் வரலாறு தெரியாமல் நாம் புண் வந்தால் சேலைக்கு மேல் சொரிந்து விட்டு விடுவதுபோல் இருபது மடமையின் உச்சம் நபியவர்கள் ஈன போர் செய்ய ஏவப்படார்கள் காபிர்களின் அட்டூழியம் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு காலகட்டம் வந்தபோது தான்....அப்படியானால் நமக்கு இன்னும் வரவில்லையா அல்லது வந்தாலும் நாம் இன்னும் கதை சொல்லி கொண்டும் இருபதா முதல் விடயம் எமக்கு சிறந்த தலைமை ஒன்று இன்னும் இல்லை இன்னொன்று நாம் இன்னும் துனியாவை நேசிக்கிறோம் நம் உயிரை நேசிக்கிறோம் பிள்ளை குட்டி சொத்து சுகம் என்று எல்லாவற்றையும் நேசிக்கிறோம் ..நாம் மார்க்கத்தை நேசிக்கவில்லை நமது சமூகத்தை நேசிக்கவில்லை ...எல்லா வற்றையும் விட அல்லாஹ்வையும் ரசூலையும் நேசிக்கவில்லை அல்லாஹ்வின் மாளிகையை நேசிக்கவில்லை ,,,அதனை அல்லாஹ் பாதுகாப்பான் என்று மட்டும் கூறுகின்றோம் ...நம்மில் இன்னும் ஒற்றுமை இல்லை பல பிரிவுகள் கொள்கைகள் ..ஒருத்தர் சமூகத்துக்கு குரல் கொடுத்தால் அவர் எந்த கொள்கை காரர் என்றுதான் பார்க்கின்றோம் அவரை காட்டி கொடுக்க கூட தயங்க மாட்டோம் ...இன்னும் எத்தனையோ ...இப்போ கூட ரிலா அவர்கள் அறிவுரைதான் சொல்கிறார் கேளுங்கள்...இனி இப்படியொரு சம்பவம் நடக்குமானால் அதற்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்று கொஞ்சம் சிந்திப்போம் திட்டமிடல் மிக அவசியம் ...அதற்காக அழிவை பற்றி சிந்திக்க சொல்லவில்லை தற்பாதுகாப்பு எவ்வாறு செய்து கொள்வது என்றாவது கற்று கொள்வோம் ...ஏதாவது சிறந்த வழிமுறையை நாம் அனைவரும் ஒன்று பட்டு மேற்கொள்வோம் வெள்ளம் வரும் முன் அணைகட்ட வேண்டும் என்பது பொது விதி ..அறிவும் கூட ..சிந்திப்போம் ..

என்ன முஜீப் இஸ்லாமிய அறவொழுக்கத்தின்படி தீர்வினை விடுத்து ஈமானியம் அல்லாத உலக இலக்கை அடைவாக கொண்ட போராட்டத்தை சொல்லி அதன் வழி சூடேற்றுகிறீர். எமது இலக்கு மறுமை ஆகவே உலக அடைவுக்காக போராடியவர்களை முன்மாதிரியாக கொண்டு நாம் கிளர்ந்தெழ முடியாது . அப்படி நடந்தால் அது ஈமானிய வழி போராட்டமாக இராது. முதலில் ஈமானிய அடிப்படையில் எம் இளைஞர்களை ஆபத்தான நிலைமைகளின் போது எவ்வாறு செயற்பட வேண்டுமென்பதை பயிற்றுவிக்க எல்லோரும் முயற்சி எடுக்க வேண்டும். மாறாக திட்டமிடப்படாத அறைகூவல்களால் அல்ல.

ஓவரா பயம் காட்டுவதை விட வேண்டும்,ரோஹிங்கியாவாக எல்லாம் ஆகுமென்று அறுதியிட்டு கூறுவதெல்லாம் ரொம்ப ஓவர். சமூகத்தின் மீது அக்கறையுள்ளவர்கள் சமூகத்தை அன்பாக பார்த்து அது பீடிக்கப்பட்டுள்ள பிரச்சினையின் பாரதூரத்தை பண்பாக விளங்கப்படுத்தி அதற்கான தீர்வையும் அல்லது மாற்று வழியையும் சொல்வதுதான் உண்மையான அக்கறையின் வெளிப்பாடு. மாறாக சமூகத்தை தரக்குறைவாக விமர்சிப்பதல்ல. (விழுந்து கிடப்பவனை கையைக் கொடுத்து எழுப்பிவிடுவதே அழகு மாறாக உனக்கு ஒழுங்கா பார்த்து வரத்தெறியாதா மடையா என்று சொன்னால் அவனுக்கு விழுந்த வேதனையோடு இந்தச் வார்த்தைகளும் வேதனையையும் சொல்பவர் மீதான வெறுப்பையுமே கொடுக்கும். இப்படித்தான் அதிகமான சமூக விமர்சனங்கள் காணப்படுகின்றன.)

தமிழர்கள் அவசரப்பட்டு அனுபவிக்கும் துன்பங்கள் ஏராளம் நமது மதம் போதிப்பது பொறுமை ...

Wht i understoof is, still our society way back in realising reality. I agree with mujeeb ibrahim this is time to defend our self keep in mind attacking is different defending is different. Muslims must defend now there is looong way to go.

Brothers you may misunderstood me, Allah may guide all of us.

🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
கட்டுரையாளரே நம்பவர்களுக்கு கரைத்து ஊற்றினாலும் விளங்காது!!!
Spain இல் crusaders முஸ்லிம்களை தாக்கும்போது அவர்கள் பள்ளியில் காக்க இறைச்சி சாப்பிடுவது ஹலாலா ஹராமா என்று விவாதித்துக்கொண்டிருந்தார்களாம்!
*بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ*

_(நபியே!) நீர் கூறும்;_

*உங்களுடைய பெற்றோர்களும்,*

*உங்களுடைய பிள்ளைகளும்,*

*உங்களுடைய சகோதரர்களும்,*

*உங்களுடைய மனைவிமார்களும்,*

*உங்களுடைய குடும்பத்தார்களும்,*

*நீங்கள் திரட்டிய செல்வங்களும்,*

*நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும்,*

*நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும்,*

*அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால்,*

*அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள்*

_*அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.*_

இந்த கட்டுரையின் உண்மைத்தன்மை புரியாதல் இருப்பதற்கு காரணம் குர்ஆனைப்பாரக்காமல் கண்ட கண்ட குப்பைகளை பார்ப்பதும் " எல்லாம் அல்லாஹ் பாத்துக்கொள்வான்" என்ற போலி நம்பிக்கையுமே... ( இந்த நம்பிக்கை பணம் சம்பாதிக்கும்போது தின்னும் போதுவராது... தீனைப் பறப்ப தீன் முக்கியமே)

Post a Comment