Header Ads



பெற்றோரைத் தேடும் குழந்தைகள்


குழந்­தைகள் இல்­லாத நெதர்­லாந்தைச் சேர்ந்த தம்­ப­தி­யினர் 2010 ஆம் ஆண்டு  இலங்கை வந்­த­போது இரண்டு மாத குழந்­தை­யாக இருந்த இரட்­டை­யர்­க­ளான ஆண் குழந்­தை­களை   தத்­தெ­டுத்­துள்­ளனர். தற்­போது அந்த சிறு­வர்கள்  தமிழ் பெண்­ம­ணி­யான தமது தாயாரை சந்­திக்க பெரும் ஆவ­லாக உள்­ளனர். அதற்­கான முயற்­சியில் அந்த நெதர்­லாந்து தம்­ப­தி­யினர் ஈடு­பட்­டுள்­ளனர். 

தருச லக்மால், ஹிருச ஜயமால் என்று அழைக்­கப்­படும் அந்த  இரு சிறு­வர்­க­ளுக்கும் தற்­போது  எட்டு வய­தா­கி­றது. அவர்கள் இரு­வரும் நெதர்­லாந்தில் தற்­போது கல்வி கற்­கின்­றனர்.

அவர்­களை தத்­தெ­டுத்த தாய் (ஜெயந்தி) இலங்கை பிர­ஜை­யாவார்.  அவ­ருக்கு தற்­போது 36 வய­தா­கி­றது. அவரும் சிறிய வயதில் நெதர்­லாந்தைச் சேர்ந்த தம்­ப­தி­யினால்  1981 இல் தத்­தெ­டுக்­கப்­பட்­ட­வ­ராவார். பின்னர் அவர் தனது இலங்கை தாயாரை ஹிங்­கி­ரிய பிர­தே­சத்தில்  2010 ஆம் ஆண்டு தேடிக்   கண்­டு­பி­டித்­துள்ளார். அந்த மகிழ்ச்சி தான் தத்­தெ­டுத்த பிள்­ளை­க­ளுக்கும் கிடைக்க வேண்டும் என்­பதே அவ­ரது ஆசை­யாகும். தனது கண­வ­ருடன் இணைந்து அதற்­கான முயற்­சியில் ஈடு­பட்­டுள்ளார்.

தத்­தெ­டுத்த தாயின்  (ஜெயந்தி)  தற்­போ­தைய பெயர் (Jenny Rabeli nk) , அவ­ரது நெதர்­லாந்து கண­வரின் 

பெயர் (Stefan Zielhuis) ஆகும். இவர்கள் இரு­வரும் சட்ட ரீதி­யான முறையில்  குழந்­தை­களை தத்­தெ­டுத்­துள்­ளனர். அதற்­கான ஆவ­ணங்கள் உள்­ளன.

 அந்த இரு சிறு­வர்­க­ளையும் பெற்­றெ­டுத்த தாயார் ஒரு தமிழ் பெண்­ணவார். தியா­கராஜ் ஸ்ரீதேவி என்ற பெய­ரு­டைய குறித்த பெண் நீர்­கொ­ழும்பு கொச்­சிக்­கடை, வைக்கால் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள ஓட்டுத் தொழிற்­சா­லையில்  (சுதந்தி  என்ற பெயர் உடைய ஓட்டுத் தொழிற்சாலை) தொழில் செய்­யும்­போது இந்த இரண்டு குழந்­தை­க­ளையும் நீர்­கொ­ழும்பு மாவட்ட வைத்­தி­ய­சா­லையில் பெற்­றுள்ளார். 

பின்னர் அந்த குழந்­தை­களை  புத்­தளம் பிர­தே­சத்தில் உள்ள மீக­லாவே சிறுவர் இல்­லத்தின் பாது­காப்பில் ஒப்­ப­டைத்­துள்ளார். அங்கு ஒப்­ப­டைக்­கப்­பட்ட குழந்­தை­களை நன்­ன­டத்தை சிறுவர் பரா­ம­ரிப்பு சிறுவர் திணைக்­க­ளத்தின் ஊடாக  நெதர்­லாந்து தம்­ப­தி­யினர்  2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சட்ட ரீதி­யாக தத்­தெ­டுத்து தமது நாட்­டுக்கு அழைத்துச் சென்­றுள்­ளனர். 

தியாகராஜ் ஸ்ரீதேவி என்ற பெய­ரு­டைய பெண் குளி­யா­ப்பிட்­டி பிர­தே­சத்தைச் சேர்ந்­தவர் என ஆவ­ணங்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தருச லக்மால், ஹிருச ஜயமால் ஆகியோர் தம்மை பெற்றெடுத்த தாயாரை சந்திக்க ஆவலாக உள்ளனர். ஆயினும் அவரது நிழற்படம் கூட அவர்களிடம் கிடையாது.  தாயின் பெயரை மாத்திரமே  அறிந்து வைத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.