Header Ads



அரசாங்கம் கொடுமை செய்துவிட்டது, விரைவில் அதிர்ச்சிவைத்தியம் காத்திருக்கிறது என ஹரீஸ் கொந்தளிப்பு


-AAM. Anzir-

அம்பாறை பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பிணையில் விடுதலை செய்து, நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களுக்கு கொடுமை செய்துவிட்டதாக கொந்தளித்துள்ள பிரதியமைச்சர் ஹரீஸ், மிகவிரைவில் இந்த அரசாங்கத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படுமெனவும் எச்சரித்தார்.

இதுகுறித்து அவர் சற்று நேரத்திற்கு முன் தகவல் தருகையில்,

அம்பாறையில் அதிகாரமிக்க சிங்கள அரசியல்வாதிகளின் ஆதரவுடன், பொலிசாரின் நெறிப்படுத்தலின் கீழ், அம்பாறை பள்ளிவாசலைத் தாக்கிய பௌத்தசிங்கள இனவாதிகள் இன்று -02. பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நல்லாட்சியை நம்பிய, முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே இதனை நோக்குகிறேன். 

அம்பாறை மாவட்ட தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் காணப்பட்டனர். எனினும் ஒரு சிறிய இனவாத கூட்டத்தை திருப்திபடுத்துவதற்காக முஸ்லிம்களுக்கு கொடுமைசெய்து, பள்ளிவாசல் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை அரசாங்கம் மறைகரமாக நின்று விடுதலை செய்துள்ளது.

முஸ்லிம்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது. மிகவிரைவில் அரசாங்கம் இதன் பயனை நுகரும். நாம் அரசாங்கத்திற்கு நிச்சயம் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்போம்.

எனது மாவட்ட  முஸ்லிம் இளைஞர்கள் கொதித்துப் போயுள்ளனர். அவர்களை நானும், பள்ளிவாசல் நிர்வாகங்களும் பொறுமைபடுத்தி வைத்திருக்கிறோம்.

ஆயுதம் தாங்கிய புலிகளுக்கே அஞ்சாத நானும், எனது மாவட்ட மக்களும் பௌத்தஇனவாத குழுக்களுக்கு அஞ்சப் போவதில்லை.

இன்றை நவீன உலகில் சீ.சீ.டி.வீ. கமரா துணையுடன் பள்ளிவாசலை தாக்கியவர்களை மிக இலகுவில் கைது செய்திருக்கலாம். கைது செய்தவர்களை சிறையில் அடைத்திருக்கலாம்.  எனினும் அவர்களை சிறை வைக்காது சுதந்திரப் பறவைகளாக பறக்கவிட்டுள்ளனர்.

தற்போதை நல்லாட்சி அரசாங்கத்தை பௌத்தசிங்கள இனவாதிகளே வழிநடத்துகின்றனர். அதனால்தான் முஸ்லிம் விவகாரங்கள்  பின்னுக்கு தள்ளப்படுகின்றன. எனது கட்சியின் ஏனைய எம்.பி.க்களுடன் பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கையை விரைவில் அறிவிப்போம்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் முஸ்லிம்கள் என்னுடன் தொடர்பு கொண்டனர். அவர்களின் ஆவேசத்தில் நியாயமுள்ளது. அதனை தான் புரிந்துகொள்வதாகவும் ஹரீஸ் மேலும் குறிப்பிட்டார்.

7 comments:

  1. Can you get out of the Government?

    ReplyDelete

  2. "இந்த நாட்டில் சிங்கள போலீசும், சிங்கள நீதிமன்றமும் இருக்கும் வரை நல்லிணக்கம் என்பதட்கு கடுகளவும் சந்தர்ப்பம் கிடையாது. அதன் வெளிப்பாடு தான் தமிழ் இளைஞ்சர்கள் ஆயும் தூக்கி போராடினார்கள் அதட்கு முழுமையான ஆதரவும் தமிழ் மக்களால் கொடுக்கப்பட்டது. ஆக இந்த நாட்டில் நீதித் துறையும், பாதுகாப்பு துறையும் நடுநிலைமையாக செயட்பட வேண்டும் என்ற பரப்புரை எல்லா மட்டங்களிலும் ( national and international) முன் எடுத்து செல்லப்பட வேண்டும். இந்த முன்னெடுப்பு மாபெரும் அழுத்தத்தை அரசாங்கத்துக்கும், நீதி துறைக்கும், பாதுகாப்பு துறைக்கும் கொடுக்க கூடியதாக இருக்க வேண்டும். முயட்சி செய்வார்களா களத்தில் உள்ள அரசியல் வாதிகளும், புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், வெகுஜன தொடர்பாளர்களும்."

    ஹரீஸ், இந்த நாட்டில் அரசாங்கம் துரோகம் செய்து விட்டது என்ற கவலையை விட, முஸ்லீம் மக்கள் உங்கள் மீது வெறுப்படைந்து விடுவார்கள் என்ற கவலையே உங்களுக்கு அதிகம் உள்ளது. நீங்கள் இப்படி அறிக்கைகள் மூலம் மக்களை பேகாட்டலாம் என்று நினைத்தால் அது உங்களது அறியாமையையேயாகும். உங்களால் ஒரு சாதாரண வைத்தியமே செய்ய முடியாதுள்ள போது... அதிர்ச்சி வைத்தியமா?? நல்ல காமெடி...!!! எவ்வளவோ முஸ்லிம்களுக்கு பாதகமான( மத, கலாச்சாரம், அடிப்படை உரிமைகள் ) சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் வந்த போது அதட்கு ஆதரவாக உங்கள் தலைவர் உட்பட ஆதரவளித்துள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். புலிகளை எதுத்தீர்களா?? அதுவும் நீங்கள்??? அப்போ லண்டன் பயணத்தின் நோக்கம் என்னவோ??
    ஹரீஸ் முடிந்தால் நாங்கள் மேல் கூறிய விடயத்தை முன்னெடுங்கள். அதுதான் நாட்டில் உள்ள மாபெரும் பிரச்சினை. நீதித்துறையும் பாதுகாப்பு துறையும் சரியாக நடக்குமானால் நிறைய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடும்.

    ReplyDelete

  3. "இந்த நாட்டில் சிங்கள போலீசும், சிங்கள நீதிமன்றமும் இருக்கும் வரை நல்லிணக்கம் என்பதட்கு கடுகளவும் சந்தர்ப்பம் கிடையாது. அதன் வெளிப்பாடு தான் தமிழ் இளைஞ்சர்கள் ஆயும் தூக்கி போராடினார்கள் அதட்கு முழுமையான ஆதரவும் தமிழ் மக்களால் கொடுக்கப்பட்டது. ஆக இந்த நாட்டில் நீதித் துறையும், பாதுகாப்பு துறையும் நடுநிலைமையாக செயட்பட வேண்டும் என்ற பரப்புரை எல்லா மட்டங்களிலும் ( national and international) முன் எடுத்து செல்லப்பட வேண்டும். இந்த முன்னெடுப்பு மாபெரும் அழுத்தத்தை அரசாங்கத்துக்கும், நீதி துறைக்கும், பாதுகாப்பு துறைக்கும் கொடுக்க கூடியதாக இருக்க வேண்டும். முயட்சி செய்வார்களா களத்தில் உள்ள அரசியல் வாதிகளும், புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், வெகுஜன தொடர்பாளர்களும்."

    ஹரீஸ், இந்த நாட்டில் அரசாங்கம் துரோகம் செய்து விட்டது என்ற கவலையை விட, முஸ்லீம் மக்கள் உங்கள் மீது வெறுப்படைந்து விடுவார்கள் என்ற கவலையே உங்களுக்கு அதிகம் உள்ளது. நீங்கள் இப்படி அறிக்கைகள் மூலம் மக்களை பேகாட்டலாம் என்று நினைத்தால் அது உங்களது அறியாமையையேயாகும். உங்களால் ஒரு சாதாரண வைத்தியமே செய்ய முடியாதுள்ள போது... அதிர்ச்சி வைத்தியமா?? நல்ல காமெடி...!!! எவ்வளவோ முஸ்லிம்களுக்கு பாதகமான( மத, கலாச்சாரம், அடிப்படை உரிமைகள் ) சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் வந்த போது அதட்கு ஆதரவாக உங்கள் தலைவர் உட்பட ஆதரவளித்துள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். புலிகளை எதுத்தீர்களா?? அதுவும் நீங்கள்??? அப்போ லண்டன் பயணத்தின் நோக்கம் என்னவோ??
    ஹரீஸ் முடிந்தால் நாங்கள் மேல் கூறிய விடயத்தை முன்னெடுங்கள். அதுதான் நாட்டில் உள்ள மாபெரும் பிரச்சினை. நீதித்துறையும் பாதுகாப்பு துறையும் சரியாக நடக்குமானால் நிறைய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடும்.

    ReplyDelete
  4. அறிக்கையில் மாத்திரம்தான் பதிலடி. ஒரு காலமும் தற்போதைய தலைமையின் கீழ் ஒரு பதிலடியும் செயலுருப்பெறாது.

    ReplyDelete
  5. அறிக்கையில் மாத்திரம்தான் பதிலடி. ஒரு காலமும் தற்போதைய தலைமையின் கீழ் ஒரு பதிலடியும் செயலுருப்பெறாது.

    ReplyDelete
  6. நீங்கள் உங்கள் கூட்டமைப்பை JVP ஒருமுறை சேந்து அரசு அமைத்துப்பாருங்கள் அப்போது புரியும் இவர்களுக்கு

    ReplyDelete
  7. facebook இல் ஒருவருக்கு எதிர் கருத்து எழுதிய முருத்தலாவ சகோதரருக்கு மூன்று மாதம் பிணை இல்லாத சிறை, இங்கு ஒரு சமூகத்தின் இதயமான மஸ்ஜித் தாக்கப்பட்டு சிறை சென்றவர்களுக்கு ஒரே நாளில் பிணையுடன் விடுதலை
    சிறு பிரச்சினை வரும்போது கிள்ளி எரியும் பழக்கம் முஸ்லிம்களிடம் வரும் வரை இந்த (ஹரிஸ்) மாதிரியான அரசியல் வாதிகள் இருக்கத்தான் செய்வார்கள்

    ReplyDelete

Powered by Blogger.