Header Ads



விஞ்ஞானி ஹாவ்கின்சும், இமாம் அபூ ஹனிபாவிடம் தோற்றுப்போன நாத்தீகனும்..!

'யுனிவர்ஸ்  ஒன்றுமே இல்லாததில் இருந்து தானாகவே உருவானது'  என்று கூறி வந்த ஜீனியஸ் விஞ்ஞானி Stephan Hawkins இன்றோடு இவ்வுலக வாழ்க்கையை முடித்து கொண்டுள்ளார் .

ஆம்,  நவீன  ஐன்ஸ்ட்டின்; நவீன சார்ள்ஸ் டார்வின் ;  சம கால ஜீனியஸ் என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஸ்டிபன் ஹாவ்கின்ஸ் மரணத்தோடு தோற்றுப்போனார் .

கண்ணுக்கு தெரியாத சடப்பொருளை நம்பாத பகுத்தறிவு விஞ்ஞானிகள், பார்க்க முடியாத புவியீர்ப்பை ,காண  முடியாத காற்றை ;கண்ணுக்கு  புலப்படாத கிருமிகளை,  கருத்துக்கு எட்டாத உலகத்தின் வயதை  நமபுகிற போதும் பார்வைக்கு தெரியாத ஆனால் பகுத்தறிவாலும்   படைப்பினங்களாலும் புலப்படக்கூடிய படைப்பாளனை மட்டும் காணத்தவறி விடுகிறார்கள் .

ஜினியஸ் என்று அழைக்கப்பட்டவர் சாதாரண விடயத்தை யோசிக்க தவற விட்ட பின் மரணமாகி விட்டாரே என்கிற போதுதான் இமாம் அபூ ஹனிபா (ரஹ் ) அவர்களின் கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகின்றது .

பக்தாத் நகரம் அது .
யூப்பிரடீஸ் நதி ஊடறுத்து ஓடும் ஒருபுறத்தில் அரச மாளிகைக்கு அருகில் நின்று கொண்டிருந்த நாத்திகன் ஒருவன் சவால் விடுகிறான் 

"உங்களது இறைவனை நம்ப மாட்டேன் .நீங்கள் உங்களது நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கிறீர்கள் .என்னுடன் விவாதிக்க உங்களில் தலை சிறந்த பேச்சாளரை அழைத்து வாருங்கள் "

நதியின் மறு கரையில் இருக்கின்ற அக்காலத்தில் தலை சிறந்த பேச்சாளரும் மார்க்க அறிஞருமான இமாம் அபூ ஹனிபா (ரஹ் )  அவர்களை அழைத்து வரும்படி தூதுவர் அனுப்பப்படுகிறார் .

நேரம் மாலையை தாண்டுகிறது . சூரியனும் அஸ்தமிக்கிறது .இன்னமும் இமாம் அபூ ஹனிபாவை க்காணவில்லை .

"உங்களது தலை சிறந்த பேச்சாளர் பயந்து ஒளித்து கொண்டு விட்டார் " பிதற்றுகிறான் அந்த நாத்திகன் .

இருட்டு வெளிச்சத்தை முழுமையாக மூடுகிறது . இன்னும் அபூ ஹனீபாவை காணவில்லை .மீண்டும் தூதுவர் ஒருவர் அனுப்பப்படுகிறார் 

நள்ளிரவை நேரம் எட்டுகிறது .கூடியுள்ள 
முஸ்லிமக்க்ளின் முகத்தில் கவலையின் ரேகைகள் களை கட்டுகிறது . வெற்றி பெற்றுவிட்டதை போல சிரிப்புடன் நாத்திகன் முகத்தில் மகிழ்ச்சி அலை பாய்கிறது 

தூரத்தே இமாம் அபூ ஹனீபா வருகிறார் ..

"தூதுவர் அனுப்பப்பட்டு பல மணி நேரமாகியும் வரவில்லையே உமது தாமதத்துக்கு காரணத்தை அறிவிப்பீராக " முழங்குகிறான் நாத்திகன் .

"நதியின் அடுத்த கரையில் இருந்து இப்பக்கம் வர எண்ணிய போது படகுகள் எதுவுமே இருந்திருக்கவில்லை .அதனால் நீண்ட நேரம் நதியை பார்த்துக்கொண்டே இருந்த வேளையில் திடீரென நதியின் நடுப்பகுதியில் இருந்து பலகைகள் உயர்ந்தன . அதனை அடுத்து சற்று நேரத்தில் ஆணிகள் தோன்றின .அதனை அடுத்து பலகைகளும் ஆணிகளும் தானாகவே ஒன்று சேர்ந்தன . பலகைகள் தானாவே ஒன்று சேர ஆணிகள் அவற்றின் மீது தானாகவே அடித்தன .இன்னும் கொஞ்ச நேரத்தில் அவற்றை ஓட்டுவதற்குரிய பொருள் நதியின் நடுவிலே தோன்றின தானாகவே ஓட்டைகளையும் இடைவெளிகளை யும் நிரப்பின .அதன் பின் தானகவே படகு உருவாக்கியது .அது ஆளில்லாமல் என்னை நோக்கி வந்தது என்னை தானகவே ஏற்றிக்கொண்டு தன்னுடைய பாட்டில் இந்தப்பக்கம் வந்தடைந்தது . அதனால்தான் தாமதமாக்கினேன் " இமாம் அபூ ஹனிபா சொல்லி முடிக்க முன்னரே வெடிச்சரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரிக்கிறான் நாத்திகன் .


"அபூ ஹனீபாவே இங்குள்ளவர்களிடையே நீர்தான் மிகப்பெரிய பேச்சாளர் அறிஞன் என்றெல்லாம் கேள்விப்பட்டேன் ஆனால் உம்முடைய தரத்தை இந்த படகு கதையின் மூலம் காட்டி விட்டீரே .. ஆளில்லாமல் எப்படி பலகை உருவாகும் ?ஆளில்லாமல் எப்படி ஆணிகள் உருவாகும்.. ? ஆளில்லாமல் எப்படி இவற்றை படகாக ஆக்க முடியும்.. ?ஆளில்லாமல் எப்படி தானாக படகு ஓடும் ..? நீர் பைத்தியகார தனமாக கதைக்கிறீர் . நீர் கூறிய ஓரு வார்த்தையையும் நான் சத்தியமாக நம்ப மாட்டேன் " கத்துகிறான் நாத்திகன் .

படகை செய்கிறவன் இல்லாமல் படகு உருவானது என்கிற ஓரு சிறிய விடயத்தையே 
உன்னால் நம்ப முடியவில்லை என்றால் எப்படி முழு உலகம்  , அண்ட சராசரங்கள்  , நட்சத்திரங்கள்  ,சமூத்திரங்கள்  , கோள்கள்  அனைத்தும் படைப்பாளன் இல்லாமல்  தானாகவே  உருவானது என்கிற விடயத்தை எப்படி  நம்புவாய்.. ? 

அதிர்ந்து போனான் நாத்திகன் .தலை குனிந்தவாறே  அங்கிருந்து நழுவுகிறான்.

*அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்*. 
*(அல்குர்ஆன் : 2:29)*

*(அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.*
*(அல்குர்ஆன் : 2:18)*

-முஹம்மது ராஜி

6 comments:

  1. Good article and knowledgeable article

    ReplyDelete
  2. Mr.Lareef AM, this is useless. I think u also same as that Mokke

    ReplyDelete
  3. Mr.Lareef AM, this is useless. I think u also same as that Mokke

    ReplyDelete

Powered by Blogger.