March 07, 2018

நமது அடுத்த, நகர்வு என்ன..?


-Athambawa Jaleel-

முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும், இருப்பையும் குறிவைத்து மிகப்பெரிய கலவரம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது 1815இன் பின்னர். ஒரு ஆட்சியை கவிழ்த்து நல்லாட்சியென்ற பெயரில் கொண்டுவரப்பட்ட ஆட்சியும் அதே பேரினவாத போக்கையே கடைப்பிக்கிறது. எனவே மாறிமாறி வரும் இவ்விரு ஆட்சியாளர்களையும் நம்பி இனி பயனில்லை. மூன்றாம் கட்சியான JVP யின் எமக்கு சார்பான பேச்சுக்கள் ஆறுதலை தந்தாலும், அறிக்கை, பேச்சுக்களோடு அது முடிவடைகிறது. அவர்களும் பெரும்பான்மை இனமாதலால் ஒரு மட்டத்துக்கு மேல் அவர்களின் உதவியை எதிர்பார்க்க முடியாது.

அதேவேளை, ஒற்றுமை, முதுகெலும்பு இல்லாத எமது முஸ்லிம் அரசியல்வாதிகளையும் நம்பி இனி பயனில்லை. எமக்கு இருப்பை கேள்விக்குள்ளாக்கிய பல சட்டங்களை (உள்ளூராட்சி திருத்தம், 18ம், திவிநெகும போன்ற) நிறைவேற்ற உதவியவர்களும் இவர்களே. மறுபக்கம், எமது முஸ்லிம் நாடுகளை நம்புமளவும் நிலமை இல்லை.அவர்களது உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே அவர்களுக்கு நேரமில்லை, எனவே சர்வதேச சமூகத்தை நம்பியுபம் இனி எந்த பயனுமில்லை. அவர்கள் இதுவரை நமக்கு செய்தது எதுவுமில்லை.

அடுத்து, ஆயுதம் ஏந்தும் அளவுக்கு எமக்கு வெளிநாட்டு உதவிகளோ, உள்நாட்டு உதவிகளோ கிடைக்கப்போவதுமில்லை, அந்தளவுக்கு நமது கட்டமைப்பு வளர்ச்சியடையவுமில்லை. இவை காட்டிக்கொடுப்புகளின் மூலம் நமது நிலமையை இன்னும் மோசமாக்கும். வெளிநாட்டில் வாழும் முஸ்லிம் diaspora உறவுகளிடமிருந்து பொருளாதார மற்றும் சர்வதேச மயப்படுத்தல் உதவிகளை மட்டுமே எதிர்பார்க்கலாம், ஏற்கனவே இஸ்லாமிய தீவிரவாதம் எனும் படம் சர்வதேசரீதியாக ஓடிக்கொண்டிருப்பதால் ஒரு மட்டத்துக்கு மேல் அவர்களால் முடியாது, ACJU ஆனது இதுவரை எமக்கு ஆன்மீக ரீதியான வழியை மட்டுமே காட்டியுள்ளதே தவிர, அரசியல் ரீதியான விடயங்களில் தலையிட்டு தோல்வியுற்றதையும் (ஹலால் விடயம் போன்ற) தற்போது சமூக அரசியல் விடயத்தில் ஒதுங்கயிருக்கும் ஒரு போக்கையும் அவதானிக்க முடிகிறது.எனவே இவர்களை நம்பியும் பயனில்லை. அடுத்து, கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தெற்கு சகோதரர்களுக்காக தமது ஒற்றுமையின் மூலம் குரல் கொடுக்கலாமே தவிர, காத்திரமாக எதையும் செய்யமுடியாது, பேரினவாதம் கிழக்கிலும் தனது அகல கால்களை விரித்திருக்கிறது, எனவே கிழக்கு மக்களை நம்பியும் பயனில்லை.

எனவே நாம் இவ்விக்கட்டான நிலமையில் இருந்து விடுபட என்ன செய்ய போகிறோம்? அமிர்தலிங்கம் கூறியது போல், கடவுள்தான் இனி காப்பாற்றவேண்டும் என்ற நிலமைக்கே தள்ளப்பட்டிருக்கிறோம்.

பெருப்பான்மையினர் மத்தியில் ஒரு பாரிய பிளவு வெடிக்கும்போது மட்டுமே அவர்களின் பார்வை வேறு திசை நோக்கி திரும்ப வாய்ப்புள்ளது (87 JVP கலவரம் போன்ற).இவ்வாறான ஒரு நிலமை வரும்போது மட்டுமே, பிச்சை வேணாம் நாயைப்பிடி என்ற நிலமைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள், இது அவர்களின் வரலாற்றுண்மை.

எனவே புத்திஜீவிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து மிகத்தீவிரமாக நமது அடுத்த நகர்வை பற்றி யோசிக்காதவரை, நமது இருப்பு கேள்விக்குறியாகவே இருக்கப்போகிறது.

2 கருத்துரைகள்:

சுவர்க்கத்தை நோக்கிய பயணம் - இதுவே நமது முதல் தெரிவும் அடுத்த தெரிவுமாக இருக்கட்டும்

ஒரு முஸ்லீமுடைய பயணம் முயற்சி - இவை என்னிலையிலும் சுவர்க்கத்தை நோக்கியதாக இருத்தல் வேன்டும். கேழைகளுக்கு இஸ்லாத்தில் இடமில்லை.

தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் அவர்களுடைய சொத்துகளையும் மானத்தையும் மரியாதையையும் பாதுகாப்பது ஒரு முஸ்லீமின் கடமையாகும். அநியாயத்திற்கு எதிராக தன்னுடைய சக்திக்கு உட்பட்டுப் போராடுவது ஓர் முஸ்லீம்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. ஓர் முஸ்லீம் அநியாயத்தைக் கன்டு ஓடி ஒழியமாட்டான். இந்தப் போராட்டத்தில் அவன் அல்லாஹ்வைத் திருப்திப் படுத்துவதற்காக மரணித்தால் அவன் அடையுமிடம் சுவர்க்கமே.

எனவே நமது பயணத்தின் இறுதி இலக்கு சுவர்க்கமாக இருக்குமானால் நாம் ஏன் அநியாயத்தைக் கன்டு விலகவேன்டும் ? ஓடி ஒதுங்க வேன்டும் ?

இந்த ஓடி ஒளிதல் பொறுமை காத்தலில் அடங்காது. இது கோழைத்தனம். கோழைகளுக்கு இஸ்லாத்தில் இடமில்லை.

எனவே அநியாயம் நமக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டால் - அதனை நியாயமான அடிப்படையில் துணிவுடன் எதிர்கொள்வோம் - அல்லாஹ்வுக்காக. இலலையென்றால் நாம் கோழைகளாக செத்து மடிய வேன்டி வரும் நாளை.

நமது சரித்திரம் கோழைகளால் எழுதப்பட்டது அல்ல..........

we should think deeply that there is a plot to dislodge or wipe out Muslim community and do all damage for muslim economy, education and way of life and end to wipe out them all.. .. There is no secret about it.. It looks like that.. but No one care about it.. Politicians are deaf and celerics are blind. youth blood is boiling out.. What can we do.. Think rationally.. now is time not talk about different groups like TJ orJI or any groups.. All muslim community is target.. what is next .. is it to do research about our pitty issue. Now these people should know what is important and what is the most important and what is less important in Islam. They should know why unity is important now.

Post a Comment