March 13, 2018

ஹிஸ்புல்லாவின் கோரிக்கை கேளிக்கூத்தானது - இந்து சம்மேளனம்

சமீபத்தில் கண்டி திகன வன்முறைகள் தொடர்பாக அமைச்சர் ஹிஸ்புள்ளா அவர்கள் விரிவான பேட்டியொன்றினை அளித்துள்ளார். அப்பேட்டியில் ஹிஸ்புள்ளா கூறியுள்ள விடயங்கள் தொடர்பாக இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் விடுத்துள்ள ஊடக  அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

"ஹிஸ்புள்ளா அவர்கள் பௌத்த பேரினவாதத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் கைகோர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். நல்லவிடயம் . நாம் வரவேற்கின்றோம். 

எனினும் மட்டக்களப்பில் நடந்த சந்திப்பொன்றில் ஹிஸ்புள்ளா அவர்கள் உரையாற்றும்போது கூறியவிடயம் ஜாபகத்திற்கு வருகின்றது.

மட்டக்களப்பில் பிள்ளயார் கோயிலை நான் தான் உடைத்து சந்தைக்கட்டிட தொகுதி அமைத்தேன் என்றும் தமிழரான நீதிபதியை பணியிடைமாற்றம் செய்து எனக்கு வேண்டிய முஸ்லிம் நீதிபதியை நியமித்து எனக்கு சாதகமான வகையில் தீர்ப்பொன்றை  பெற்றக்கொண்டேன் என்றும் தமிழர் எல்லைக்  கிராமங்களில் வாழ்ந்த தமிழர்களை கொத்துக்கொத்தாக கொலைசெய்ய நானே கொழும்பில் இருந்து ஆயுதங்களை கிழக்கிற்கு கொண்டுவந்து முஸ்லிம் இளைஞர்களுக்கு கொடுத்தேன் என்றும் பகிரங்கமாக ஒலி  ஒ ளிப்பதிவை வெளியிட்ட பச்சை மதவாதியாகவும் இனவாதியாகவும் தன்னை அடையாளப்படுத்தும் ஹிஸ்புள்ளாவிற்கு  எந்த உரிமையும் கிடையாது தமிழ்ர் முஸ்லிம் நல்லிணக்க  உறவு பற்றி பேசுவதற்கு.

கிழக்கில் முஸ்லிம்களின் நல்லென்னத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.அதன்மூலம் அரசியல் தீர்விற்கு சாதகமான ஒத்துழைப்பை முஸ்லிம் தலைவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகர்வை நல்லென்னத்தை பிரபாகரனின் வீழ்ச்சியால் ஏற்பட்ட பலவீன அரசியல் என்று தமிழர்களை பலவீனர்களாக கருதியது மட்டுமன்றி தமிழர்களின் காணிகளை அரச இயந்திரத்தை பயன்படுத்தி ஆக்கிரமிப்புசெய்த ,செய்துவரும் அரசியல் வாதிகளில் முதன்மையானவராக இருக்கும் ஹிஸ்புள்ளாவிற்கு திடீர் ஜானோதயம் கிடைக்கப்பெற்றிருப்பது ஆச்சர்யத்தை அளிப்பதாகவுள்ளது.

முஸ்லிம்கள் மீதான தாக்குதலை மட்டுமல்ல ஆயுதம் தரிக்காத அப்பாவி மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சிங்கள இனவாதிகள் தாக்குதல் நடத்துவதை இந்து சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கின்றது.எனினும் அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்களை நானே பெற்று தமிழ் மக்களை கொத்துகொத்தாக கொலைசெய்ய உதவினேன் என்று பகிரங்கமாக கூறி காணொலி வெளியிட்ட அமைச்சர் ஹிஸ்புள்ளாவிற்கு சிங்கள பேரினவாதத்தை எதிர்க்க தமிழ் மக்களின் உதவி தேவைப்படுவது காலச்சக்கரத்தின் விளையாட்டு என்றுதான் கூறவேண்டியுள்ளது.

தமிழ் மக்களாயினும் சரி முஸ்லிம் மக்களாயினும் சரி இவ்வாறான சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளை இனங்கண்டு ஜனநாயக ரீதியில் தக்கபாடம் புகட்டவேண்டும்.

10 கருத்துரைகள்:

If he did then he is the big idiot...forget him
Just join together to fight against terrorism and Singhalelism

Opportunist direction-less politicians are the main cause of the tragedies faced by the Sri Lankan society.

I wish Jaffanamuslim.com batter not to introduce another racist into this site. Please neglect his message in this site.. which will waste our time and boil our blood.

Neglect and do not make them high ..

இவனெல்லாம் ஒரு ஆளெண்டு இவனுக்கெல்லாம் ஏன் முன்னுரிமை கொடுக்கிறீர்கள். இவனுக்கு அதிகமான விளம்பரங்கள் தேவைப்படுகிறது அதை ஏன் நாம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் ? மற்றபடி இவன் சிங்கள இனவாதிகளின் எடுபிடி அவ்வளவு தான் இவன்

தயவு செய்து இந்த எடுபிடிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றாலும் இவனையும் கண்காணிக்க வேண்டும் ஏன் என்றால் இனவாதிகளின் அடுத்த target காத்தான்குடியாக இருக்கலாம் (அல்லாஹ் பாதுகாப்பானாக) அதற்கு இவனும் ஒத்துழைப்பை வழங்க இடம் உண்டு ..இவன் விராது வந்த நேரம் அந்த நிகழ்வில் பங்கு கொண்டவன்

Dear jafna muslim remove like this massage immediately. Most tamil innocent people may be. Misunderstand us

GTX,
முதலில் மாற்று சமயத்தவர்களுக்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவயில்லை இழிவாக பேசுவதை நிறுத்தி கொள். அவர் இந்து சமய தலைவர் அவரை அவன் இவன் என பேசுவதை நிறுத்தி விட்டு உங்கள் மௌலவியிடம் பாடம் பயிலுங்கள். தூய இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

Regret on behalf of GTX Dear Anusath.
Readers must understand that this is a message to the message for His bull ah. Apart to bitterness, we must accept and understand the truths. If Hisbullah spoke it so, that should be condemned.

ஒரு பிரயாணத்தில் இரண்டு இனவாதிகளுக்கு ( ஹிந்து பௌத்தம்) மத்தியில் ஒரு முஸ்லிம்.

இனவாதி ஒருவன் முஸ்லிமை நோக்கி நாய் என்றான் , மற்றவன் கழுதை என்றான்,

முஸ்லிமின் பதில் : நான் அந்த இரண்டுக்கும் இடையில் தான் இருக்கிறேன்.

( இலங்கை முஸ்லிம்களின் நிலைமை)

Post a Comment