March 05, 2018

'ஜும்ஆத் தொழு­கைக்கு செல்­வதை, கட்­டுப்­ப­டுத்துவதை ரத்து செய்'

முஸ்லிம் அரச ஊழி­யர்கள் வெள்­ளிக்­கி­ழ­மை­களில் ஜும் ஆத் தொழு­கைக்கு செல்­வது தொடர்பில் பொது நிர்­வாக அமைச்சு வெளி­யிட்­டுள்ள சுற்­று­நி­ருபம் உட­ன­டி­யா­க­ இ­ரத்து செய்­யப்­பட வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் இலங்கை கல்வி நிர்­வாக சேவை அதி­கா­ரிகள் சங்கம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

இது தொடர்­பாக சங்­கத்தின் செய­லாளர் ஏ.எல்.எம்.முக்தார் ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்­துள்ள மக­ஜரில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

இலங்­கையின் ஒவ்­வொரு பிர­ஜை­யி­னதும் மத சுதந்­திரம் என்­பது அர­சி­ய­ல­மைப்பில் அடிப்­படை உரி­மை­களில் ஒன்­றாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. இது அர­சி­ய­ல­மைப்பின் 14 ஆம் அத்­தி­யாயம் 1 (2) பிரி­விலும் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் நிறு­வனத் தலை­வர்­களின் தீர்­மா­னத்­திற்­க­மை­வாக நிறு­வன செயற்­பா­டு­க­ளுக்கு தடை ஏற்­ப­டாத வகையில் முஸ்லிம் அரச ஊழி­யர்­க­ளுக்கு வெள்­ளிக்­கி­ழ­மை­களில் ஜும்ஆத் தொழு­கையை நிறை­வேற்­று­வ­தற்­காக இரண்டு மணி நேர விசேட விடு­முறை வழங்­கப்­ப­டலாம் என பொது நிர்­வாக அமைச்சின் 21/2016 ஆம் இலக்க சுற்­று­நி­ருபம் மூலம் அறி­வு­றுத்தல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அதே­வேளை இந்த சுற்­று­நி­ருபம் தாபனக் கோவையின் Xii ஆம் அத்­தி­யாயம் 12:1 க்கு திருத்­த­மாக சமர்ப்­பிக்­கப்­பட்ட அமைச்­சரவை பத்­தி­ரத்தை அண்­மையில் அமைச்­ச­ரவை அங்­கீ­க­ரித்­துள்­ளது.

இந்­ந­ட­வ­டிக்­கை­யா­னது முற்­று­மு­ழு­தாக இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் அடிப்­படை உரி­மையை மீறும் செயல் என்­ப­துடன் அர­சி­ய­ல­மைப்பின் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள மத சுதந்­தி­ரத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது.

எனவே முஸ்லிம் அரச ஊழி­யர்­களின் அடிப்­படை உரி­மையை மீறும் வகையில் வெளி­யி­டப்­பட்­டுள்ள இந்த சுற்­று­நி­ரு­பத்தை உட­ன­டி­யாக வாபஸ் பெற்று, முஸ்லிம் ஊழி­யர்­க­ளுக்கு பாதிப்­பில்லாத வகையில் புதிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இல்லையேல் நீதிமன்றம் சென்று அதனை சவாலுக் குட்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்

3 கருத்துரைகள்:

Will he listen???
He is busy to get the post of wise president of WHO...!!!

அரசியலமைப்பின் சர்த்துகளுக்கு இயைபாக தாபனக் கோவை தயார் செய்யப்படுவதுதான் வழக்கம். இங்கு சுற்றுநிருபத்தின் வசனங்கள் ஒருவரின் மதச்சுதந்திரத்துக்கு தடையாக அமைகிறதா அல்லது இந்த வகையான சுற்றுநிருபங்கள் அடிப்படையில் ஒருவரின் மதச்சுதந்திரத்துக்குச் சவாலாக அமைந்துள்ளதா என்பதை மனித உரிமை விவகாரங்களில் கைதேர்ந்த சட்டத்தரணிகளின் ஆலோசனை,தீர்மானங்களின் அடிப்படையில் இவ்வாறான விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.அதற்கு மாறாக புத்தள பா.உ. ரங்கே பண்டார பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர இருப்பதாக பகிரங்கமாகத் தெரிவித்தது ஐ.தே.க.கட்சியின் சட்டதிட்டங்களுக்கு முரணானது என்பதை அவர் தெரியாமல் சத்தமிட்டு சீரழிவது போன்று நடக்காமல் முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பற்றி நாம் பகிரங்கமாக சவால்விடும்போது அவற்றுக்கு உரிய அடிப்படைச் சட்டங்களுக்கு ஏற்றவகையில் அமைந்தால் அது சமூகத்தின் இருப்புக்குச் சாதகமாக இருக்கும்.அல்லாவிட்டால் எமது முயற்சி இனவாதிகளின் வாய்க்கு சக்கரை போட்டதுபோல் இருக்கும்.

Post a Comment