Header Ads



புர்கா அணிந்தபடி, வாகனத்தை ஓட்டக்கூடாது - ஜேர்மன் நீதிமன்றம்


ஜேர்மனியில் முகத்தை மூடிக்கொண்டு வாகனத்தை இயக்ககூடாது என்ற சட்டம் தொடர்பாக குற்றம் சுமத்திய இஸ்லாமிய பெண்ணின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார்.

ஜேர்மனியில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் முகத்தை மூடிக்கொண்டு வாகனத்தை இயக்கத் தடை விதிக்கப்பட்டது.

இதன்மூலம் சாலை விதிகளை மீறுபவர்களையும், கடத்தல் சம்பவத்தில் ஈடுபவர்களையும் எளிதில் அடையாளம் காண முடியும்.

இந்நிலையில் தங்களுடைய மதக்கோட்பாடுக்கு எதிரானதான இருப்பதாக கூறி இஸ்லாமிய பெண் ஒருவர் Karlsruhe நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதுதொடர்பான வாதம் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், மதக்கோட்பாடை எவ்வாறு மீறுகிறது? முகத்தை மறைக்காமல் சென்றதால் என்ன பிரச்சனை ஏற்பட்டது என்பது குறித்து மனுதாரரால் விளக்கம் அளிக்க முடியவில்லை.

எனவே குற்றம் சுமத்திய பெண்ணின் கோரிக்கையை நிராகரித்து நீதிபதி உத்தரவிட்டார்.

3 comments:

  1. வௌிநாட்டில் சென்று குடியேறுவதுதான் சிறந்தது,பாதுகாப்பானது என நீங்கள் தீர்மானித்தால், முதலில் அந்த நாட்டின் சட்டங்களை மதித்து நடக்கத் தெரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. Same concept shall be applied to Muslim Parents seeking admissions to their children in Non Muslim Schools, where they may be compelled to adhere to school uniforms, accepted norms of salutations, cultural values, etc. etc.

    ReplyDelete
  3. முதலில் முகத்தை மறைப்பது இஸ்லாமிய சட்டம் அல்ல என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் சும்மா தேவையில்லாத விடயத்தைச் செய்து விட்டு அதனை மார்க்கம் ஆக்கக் கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.